AstroVed Menu
AstroVed
search
search

கன்னி செப்டம்பர் மாத ராசி பலன் 2021 | September Matha Kanni Rasi Palan 2021

dateAugust 3, 2021

கன்னி செப்டம்பர் 2021 பொதுப்பலன்:

கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் நண்பர்கள் மற்றும் குடும்ப பெரியவர்களுடன் நல்லுறவை அனுபவிக்க இயலும். நிதி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் போன்றவற்றில் நீங்கள் முன்னேற இது சரியான நேரமாகவும் தோன்றுகிறது. வேலை தேடுவோர் அல்லது புதிய தொழில்  முயற்சிகளைத் தொடங்க விரும்புவோர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் ஒரு நம்பிக்கைக்குரிய மாதமாக இந்த மாதம் விளங்கும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள் 

காதல் / குடும்பம்:

அதிக பணிச்சுமை  குடும்பத்திற்கு போதுமான நேரத்தை ஒதுக்குவதைத் தடுக்கலாம். இது கணவன்-மனைவி இடையேயான உறவில் அழுத்தத்தை, கருத்து  வேறுபாடுகளை  ஏற்படுத்தக்கூடும். எனவே எவ்வளவு வேலை இருந்தாலும் அதற்கு நடுவில் குடும்பத்திற்கென நேரத்தை ஒதுக்குவதன் மூலம் நல்லிணக்க உறவை நீங்கள் மேற்கொள்ள இயலும். உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சந்திரன் பூஜை 

நிதிநிலை:

உங்கள் வாழ்க்கையை மிகவும் வசதியாக மாற்ற ஆடம்பரப் பொருட்களுக்கான செலவுகளைச் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக உங்கள் செலவினங்களைக் குறைத்து, உங்கள் சேமிப்பை மேம்படுத்துவது உங்களுக்கு நல்லது.

உங்கள் நிதிநிலை மேம்பட ல் சுக்கிரன் பூஜை

வேலை:

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாகச் செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளுடன் அனுகூலமான உறவு இருக்கும். சக ஊழியர்களிடமும் நீங்கள் நல்ல பெயரைப் பெறலாம். நீங்கள் இப்போது கூடுதல் பொறுப்புகளை ஏற்கலாம். உங்கள் துறையில் சிறந்த சாதனைகளைச் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தொழில்:

தொழில் வாய்ப்புகள் சாதகமாகத் தெரிகின்றன, அதே நேரத்தில்  கூட்டாண்மை தொழில்  உங்களுக்கு குறிப்பிடத்தக்க லாபத்தை ஈட்டக்கூடும். ஆனால் புதிய வணிக முதலீடுகளைச் செய்யும்போது எச்சரிக்கையாக இருங்கள். வர்த்தகத்தில் போட்டிகளை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. நீங்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு வெற்றி காணும் வாய்ப்பு உள்ளது. 

தொழில் வல்லுனர்கள்:

கன்னி ராசியியச் சார்ந்த  தொழில் வல்லுநர்கள் இந்த மாதத்தில் தங்கள் துறைகளில் முன்னேற்றம் காணலாம். அவர்களுக்கு சில அதிர்ஷ்டமான முன்னேற்றங்களும் இருக்கலாம். உங்கள் தொழிலில் இப்போது பொறுப்புகள் கூடும், ஆனால் உங்கள் பணிகளை வெற்றிகரமாக  கையாளும் திறனை நீங்கள் வளர்த்துக் கொள்வீர்கள். 

உங்கள் வேலை மற்றும் தொழிலில் நீங்கள் முன்னேற்றம் பெற : சூரியன் பூஜை

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் இப்பொழுது சிறப்பாக இருக்கும்.  உங்கள் உணவில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்களில் சிலர் வயிறு தொடர்பான செரிமான பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, துரித உணவு அல்லது வெளியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும், இது சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : வைத்தியநாத பூஜை 

மாணவர்கள்:

மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும். அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.  சட்டம் அல்லது உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் இந்த சாதகமான நேரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சிறந்து விளங்க முடியும். அவர்கள் தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். ஆராய்ச்சி பயிலும் மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்துவதன்  மூலம் தங்கள் பணிகளில் வெற்றி காண்பார்கள். 

சுப நாட்கள் : 1, 2, 3, 4, 5, 8, 9, 13, 16, 17  
அசுப நாட்கள் : 6, 7, 10, 14, 15, 23, 24, 25, 29, 30 


banner

Leave a Reply