AstroVed Menu
AstroVed
search
search

மீனம் செப்டம்பர் மாத ராசி பலன் 2021 | September Matha Meenam Rasi Palan 2021

dateAugust 4, 2021

மீனம் செப்டம்பர் 2021 பொதுப்பலன்:

மீன ராசி அன்பர்களே! திருமணத்திற்குக் காத்திருக்கும் மீன ராசி அன்பர்களுக்கு திருமணம் நடக்கலாம். இப்போது தொழில் தொடர்பான முக்கியமான விவாதங்கள் அல்லது கூட்டங்களில் பங்கு கொள்வது மற்றும் அதனை நடத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழிலில் சாதகமான பலன்களைப் பெறுவதற்கு நீங்கள் இன்னும் சில வாரங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டியிருக்கும். நீங்கள் முன்பு அவதிப்பட்ட நோய் மீண்டும் தலை தூக்க  வாய்ப்பு உள்ளது. எனவே, சிறு உடல் உபாதை என்றாலும் மருத்துவ ஆலோசனைகளை மேற்கொள்வது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போன்ற அனைவருடனும் நீங்கள்  நல்லுறவைப் பேண முடியும். இதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.  

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள் 

காதல் /குடும்பம்:

திருமணமான தம்பதிகள் இந்த மாதத்தை தங்களுக்கு சாதகமாகக் காணலாம். மேலும் அவர்கள் நல்லிணக்கமும் ஒற்றுமையும் கொண்ட வாழ்க்கையை நடத்தக்கூடும். அவர்களின் உறவில் அதிக நெருக்கம் இருக்க முடியும். திருமணம் போன்ற சில நல்ல நிகழ்வுகளும் குடும்பத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், உங்களில் சிலர் இந்த நேரத்தில் இசையில் அதிக ஆர்வம் காட்டக்கூடும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : குரு பூஜை 

நிதிநிலை:

மின்னணு பொருட்களை கையாளும் மற்றும் விற்பனை செய்யும் நபர்கள் அவற்றின் மூலம் கணிசமான வருமானத்தை ஈட்டக்கூடும். நிதி, தொலைத்தொடர்பு மற்றும் உணவுத் துறைகளில் ஈடுபடுபவர்கள் கணிசமான வருமானத்தையும் ஈட்ட முடியும். பங்குகள் மற்றும் பங்கு வர்த்தகம் கூட நன்றாக இருக்கும். ஆனால் இப்போது புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

உங்கள் நிதிநிலை மேம்பட : ராகு பூஜை

வேலை:

உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் கடுமையாக உழைக்கக்கூடும். மேலும் அவர்களின் வேலைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணலாம். புதிய வேலை வாய்ப்புகளும் முன்னேற உங்களுக்கு உதவக்கூடும். நீங்கள் அலுவலகத்திலும் அங்கீகாரம் பெறலாம். நீங்கள் நம்பிக்கையுடன் செயல்படலாம் மற்றும் உங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிக்கலாம். அரசாங்க வேலைகளில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக இருக்கும்.   

தொழில்:

 கூட்டுத் தொழில் செய்பவர்கள் இந்த மாதம் தங்கள் தொழிலில் பிரகாசிப்பார்கள். பயணம் மற்றும் உணவு தொடர்பான தொழில்களில் ஈடுபடுபவர்கள் குறிப்பிடத்தக்க இலாபங்களை எதிர்பார்க்கும் மாதமாகவும் இது இருக்கலாம். மென்பொருள் துறையில் உள்ளவர்களும் தங்கள் தொழில் மூலம் செல்வத்தில் முன்னேற்றம் காணக்கூடும். சுயதொழில் செய்பவர்களும் நல்ல வருமானத்தை ஈட்டக்கூடும். இதன் மூலம்  தொழிலை முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்லலாம்.

தொழில் வல்லுனர்கள்:

மீன ராசி தொழில் வல்லுனர்கள்  தங்கள் துறைகளில் பெயரையும் புகழையும் சம்பாதிக்க வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களும் உங்களுக்கு நல்லது செய்யக்கூடும். கட்டுமான பொறியாளர்கள் மற்றும் வணிக நிர்வாகத் துறையில்  இருப்பவர்களுக்கு பல புதிய வணிக வாய்ப்புகள் வரக்கூடும். சுயதொழில் வல்லுநர்கள்  போட்டியாளர்களை  எளிதில் வென்று தங்கள் தொழில்களில் வெற்றிபெற முடியும்.

வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : சனி பூஜை 

ஆரோக்கியம்:

உங்கள் உடல்நலம் இப்போது உங்களுக்கு சில சவால்களை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் ஒரு சில சிறு உடல் உபாதையால் பாதிக்கப்படலாம். அதனைப் புறக்கணிக்காமல் மருந்து உட்கொள்வது அவசியம். சரியான உடற்பயிற்சிகளும் உணவு உட்கொள்ளலும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். துரித உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட :சிவன் பூஜை

மாணவர்கள்:

பள்ளி மாணவர்கள்,  ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து ஆதரவைப் பெறலாம். நன்றாகப் படித்து அவர்களின் படிப்பில் வெற்றி பெறலாம். உயர்கல்வியைத் தொடங்குபவர்கள் தங்கள் முயற்சிகளில் கவனம் செலுத்துவதில் சிரமங்களை சந்திக்கலாம். கல்வியை முடித்து, வேலை தேடும் மாணவர்கள் நல்ல சம்பளத்துடன் வேலை பெறலாம்.  

கல்வியில் மேன்மை பெற :புதன் பூஜை 

சுப நாட்கள் : 01, 02, 03, 09, 26, 27, 30  
அசுப நாட்கள் : 06, 07, 10, 11, 12, 14, 15, 24, 25 


banner

Leave a Reply