செப்டம்பர் மாத ராசி பலன் 2021 | September Matha Rasi Palan 2021 Tamil

செப்டம்பர் மாத ராசி பலன் 2021 | September Matha Rasi Palan 2021:
மேஷம் செப்டம்பர் 2021 பொதுப்பலன்:
மேஷ ராசி அன்பர்களே ! இந்த மாதம் நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவைப் பேணுவீர்கள். உங்கள் நிதி நிலையும் இப்போது மேம்படும் என்பது உங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் ஆகும். நீங்கள் சொந்த வியாபாரம் செய்கிறீர்கள் என்றால் வியாபாரம் குறித்த உங்கள் புதிய முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள இந்த மாதம் ஏற்ற மாதமாக இருக்கும். இதன் மூலம் உங்கள் வருமானம் மேலும் உயரும். மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறப்பாக முன்னேறவும், கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும், தங்கள் தேர்வுகளில் சிறப்பாக செயல்படவும், அதிக மதிப்பெண்கள் பெறவும் முயற்சிகளை மேற்கொள்வார்கள். நீங்கள் இப்பொழுது பல புதிய விஷயங்களையும் கற்றுக்கொள்வதில் அதிக அளவில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் உடல்நலம் இந்த மாதம் சாதாரணமாக இருக்கும். உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.
ரிஷபம் செப்டம்பர் 2021 பொதுப்பலன்:
ரிஷப ராசி அன்பர்களே! உங்களில் புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் இந்த மாதம் இனிமையான வாழ்வை அனுபவிக்க இயலும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தினரின் அன்பும் அரவணைப்பும் கிட்டும். உங்கள் நிதி நிலை மேம்படக்கூடும். நீங்கள் வெளிநாட்டு வேலைக்கு முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறீர்கள் என்றால் இப்பொழுது அது உங்களுக்கு கை கூடும். இந்த மாதம் பள்ளி மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஆதரவைப் பெறலாம். இந்த மாதம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.
மிதுனம் செப்டம்பர் 2021 பொதுப்பலன்:
மிதுன ராசி அன்பர்களே ! இந்த மாதம் உங்கள் பொருளாதாரம், வேலை, குடும்பம் போன்ற அனைத்து முக்கிய அம்சங்களிலும் முன்னேற சரியான மாதமாக காணப்படுகின்றது. குடும்ப உறவுகள் சுமுகமாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் போதுமான நேரத்தை ஒதுக்கி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலும். மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறப்பாக செயல்படக்கூடும். உயர் கல்வியைத் தொடங்குபவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஆலோசனையைப் பின்பற்றினால் நீங்கள் முயற்சிகளில் வெற்றிபெற முடியும். உங்கள் ஆரோக்கியத்திற்கு கவனம் தேவைப்படலாம். உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.
கடகம் செப்டம்பர் 2021 பொதுப்பலன்:
கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் குடும்பத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் அனுபவிக்கலாம். உங்கள் பொருளாதார சூழ்நிலையும் ஓரளவு உங்களுக்கு சாதகமாக இருக்கக்கூடும், மேலும் நீங்கள் மருத்துவ சிகிச்சைக்காகவும் ஆன்மீக விஷயங்களுக்காகவும் செலவழிக்கலாம். ஆனால் பணப்புழக்கம் மிதமானதாக மட்டுமே இருக்க முடியும், எனவே உங்கள் செலவுகளை நீங்கள் குறைக்க வேண்டியிருக்கும். நல்ல தொழில் வாய்ப்புகள் கிட்டும். மேலும் நீங்கள் வர்த்தகத்தில் வெற்றியை எதிர்பார்க்கலாம். மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்த இயலாமை காரணமாக ஏற்படும் தடைகளை வென்று படிப்பில் சிறப்பாக செயல்படலாம். உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.
சிம்மம் செப்டம்பர் 2021 பொதுப்பலன்:
சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் இனிமையான குடும்ப வாழ்க்கையை அனுபவிக்க வாய்ப்புள்ளது. உங்கள் பொருளாதார நிலை ஸ்திரமாகவும் சாதகமாகவும் இருக்கும். நீங்கள் பணியிடத்தில் சில பதட்டமான தருணங்களை அனுபவிக்கலாம்; மேலும், நீங்கள் வேலையில் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் சில சிறிய தடைகளை எதிர்கொள்ளலாம், என்றாலும் நீங்கள் படிப்பில் இன்னும் சிறப்பாக செய்ய முடியும். உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.
கன்னி செப்டம்பர் 2021 பொதுப்பலன்:
கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் நண்பர்கள் மற்றும் குடும்ப பெரியவர்களுடன் நல்லுறவை அனுபவிக்க இயலும். நிதி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் போன்றவற்றில் நீங்கள் முன்னேற இது சரியான நேரமாகவும் தோன்றுகிறது. வேலை தேடுவோர் அல்லது புதிய தொழில் முயற்சிகளைத் தொடங்க விரும்புவோர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் ஒரு நம்பிக்கைக்குரிய மாதமாக இந்த மாதம் விளங்கும். உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.
துலாம் செப்டம்பர் 2021 பொதுப்பலன்:
துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். என்றாலும் நீங்கள் அதனை சிறப்பாக ஏற்று நடத்துவீர்கள். சில நல்ல மனிதர்களுடனான உங்கள் நட்பு இப்போது வேலையில் லாபம் பெற உதவும். உங்கள் நிதி நிலையும் நம்பிக்கைக்குரியதாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன; எனவே, நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.
விருச்சிகம் செப்டம்பர் 2021 பொதுப்பலன்:
விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம் கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் காணப்படும். குழந்தைகளுடன் நல்லுறவையும் அனுபவிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், குடும்ப பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, உங்கள் பேச்சில் கவனமாக இருங்கள். நண்பர்கள் மூலம் சில லாபங்களை நீங்கள் பெறுவீர்கள். வர்த்தகம் மற்றும் கூட்டு வணிகங்களில் ஈடுபடுபவர்கள் இந்த மாதத்தில் சிறந்த லாபத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.
தனுசு செப்டம்பர் மாத 2021 பொதுப்பலன்:
தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். இருவருக்கும் இடையே நல்லுறவு காணப்படும். குடும்ப சூழ்நிலையும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடும். குடும்பத்தில் உள்ள பல பிரச்சினைகள் மற்றும் நிதி தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படக்கூடும். புதிய குடியிருப்புகளுக்குச் செல்ல இது சரியான மாதமாகவும் தெரிகிறது. உயர் கல்வியைத் தொடரும் மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் வெற்றி பெற இயலும். வெளிநாட்டில் படிக்க விரும்புவோர் சில வெளிநாட்டு கல்லூரிகளில் உயர் கல்வியைத் தொடர வாய்ப்புகளைப் பெறலாம். உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.
மகரம் செப்டம்பர் 2021 பொதுப்பலன்:
மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இந்த மாதம் பொதுவாக உங்களுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்கும். சட்டம், மருத்துவம் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் உள்ளவர்கள் தங்கள் பொருளாதார நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணலாம். உத்தியோகத்தில் இருபவர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் பிரகாசிப்பார்கள். உங்களில் சிலருக்கு உதவித்தொகை அல்லது கல்வி உதவி கிடைக்கலாம். நீங்கள் பொதுவாக இப்போது நம்பிக்கையுடன் காணப்படலாம். உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.
கும்பம் செப்டம்பர் 2021 பொதுப்பலன்:
கும்ப ராசி அன்பர்களே! குடும்பத்தில் அமைதி நிலவ நீங்கள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் உங்கள் உணவு முறையில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணியிடத்தில் கடினமான சூழ்நிலையை சந்திக்க நேரும் என்றாலும் அந்தச் சூழ்நிலையை நீங்கள் சிறப்பாகக் கையாள்வீர்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. திருமண வயதுடையவர்கள் தங்கள் திருமணத்தை விரைவில் எதிர்பார்க்கலாம். புதிதாக திருமணம் ஆன தம்பதிகளில் சிலர் குழந்தைப் பேறு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.
மீனம் செப்டம்பர் 2021 பொதுப்பலன்:
மீன ராசி அன்பர்களே! திருமணத்திற்குக் காத்திருக்கும் மீன ராசி அன்பர்களுக்கு திருமணம் நடக்கலாம். இப்போது தொழில் தொடர்பான முக்கியமான விவாதங்கள் அல்லது கூட்டங்களில் பங்கு கொள்வது மற்றும் அதனை நடத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழிலில் சாதகமான பலன்களைப் பெறுவதற்கு நீங்கள் இன்னும் சில வாரங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டியிருக்கும். நீங்கள் முன்பு அவதிப்பட்ட நோய் மீண்டும் தலை தூக்க வாய்ப்பு உள்ளது. எனவே, சிறு உடல் உபாதை என்றாலும் மருத்துவ ஆலோசனைகளை மேற்கொள்வது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போன்ற அனைவருடனும் நீங்கள் நல்லுறவைப் பேண முடியும். இதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.
