கும்பம் செப்டம்பர் மாத ராசி பலன் 2021 | September Matha Kumbam Rasi Palan 2021

கும்பம் செப்டம்பர் 2021 பொதுப்பலன்:
கும்ப ராசி அன்பர்களே! குடும்பத்தில் அமைதி நிலவ நீங்கள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் உங்கள் உணவு முறையில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணியிடத்தில் கடினமான சூழ்நிலையை சந்திக்க நேரும் என்றாலும் அந்தச் சூழ்நிலையை நீங்கள் சிறப்பாகக் கையாள்வீர்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. திருமண வயதுடையவர்கள் தங்கள் திருமணத்தை விரைவில் எதிர்பார்க்கலாம். புதிதாக திருமணம் ஆன தம்பதிகளில் சிலர் குழந்தைப் பேறு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
வாழ்க்கைத் துணைகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பரஸ்பர புரிந்துணர்வு, விட்டுக் கொடுத்தல் மற்றும் பரஸ்பரம் அன்பை பரிமாறிக் கொள்ளுதல் மூலம் உறவில் நல்லிணக்கத்தை வளர்க்க இயலும். பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து சிறப்பாக இருக்கலாம். ஆனால் இளைய சகோதரர்களிடம் வேறுபாடுகள் சாத்தியம்; எனவே, அவர்களுடன் வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : அஷ்ட லக்ஷ்மி பூஜை
நிதிநிலை:
உங்கள் பழைய முதலீடுகளின் மூலம் உங்கள் நிதிநிலை உயரக் காண்பீர்கள். அரசு வேலைகளில் இருப்பவர்கள் ஸ்திரமான நிதிநிலை அனுபவிப்பீர்கள். தங்கள் சொந்த தொழில்களை நடத்துவதற்கு கடன் வாங்கத் திட்டமிடுபவர்கள் சில புதிய நண்பர்கள் மூலம் நிதி உதவியைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
உங்கள் நிதிநிலை மேம்பட : சந்திரன் பூஜை
வேலை:
உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் அதிக பணிகள் இருக்கக் காணலாம். சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறலாம். உங்கள் பணிக்கான அங்கீகாரத்தையும் நீங்கள் பெறலாம், அதே நேரத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்களில் சிலர் தங்கள் வேலைகளில் பதவி உயர்வு பெற வாய்ப்புகள் உள்ளன. இந்த தொழில் முன்னேற்றம் உங்கள் நிதி நிலையையும் மேம்படுத்தக்கூடும்.
தொழில்:
தொழில் செய்பவர்கள் இந்த மாதம் சிறப்பாக தொழில் நடத்தி நல்ல பெயரும் புகழும் பெறுவீர்கள். தொழில் நிமித்தமான பயணங்களை நீங்கள் மேற்கொள்வீர்கள். தரகு தொழிலில் உள்ளவர்கள் அதிக லாபம் ஈட்டலாம். கூட்டுத் தொழில் மூலம் லாபமும் வெற்றியும் காணலாம்.
தொழில் வல்லுனர்கள்:
கும்ப ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சிறந்த முன்னேற்றத்தைக் காணலாம். உங்கள் வருமானம் உயரக் காணலாம். ஊடகம், கல்வி மற்றும் பொழுது போக்குத் துறையில் இருப்பவர்கள் இந்த மாதம் தங்கள் துறையில் புதிய வாய்ப்புகளை பெறுவதற்கான வாய்புகளைக் காணலாம்.
வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண : ராகு பூஜை
ஆரோக்கியம்:
அதிக பணிகள் காரணமாக உங்கள் உடல் நிலை பாதிக்கலாம். வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் எழலாம். முறையான ஒய்வு, சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பான முறையில் தக்க வைத்துக் கொள்ள உதவும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட ல் அங்காரகன் பூஜை
மாணவர்கள்:
வேலை அழுத்தம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மாணவர்களின் கிரகிக்கும் திறன் அதிகரிக்கும். அவர்கள் கல்வியில் சிறந்து விளங்கக் கூடும். மேற்கல்வி பயிலும் மாணவர்கள் வெற்றி காண்பார்கள். பௌதீகம் மற்றும் ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவர்கள் வெற்றி இலக்கை எட்ட இயலும்.
கல்வியில் சிறந்து விளங்க : புதன் பூஜை
சுப நாட்கள் : 01, 02, 03, 13, 16, 17, 26, 27
அசுப நாட்கள் : 06, 07, 08, 09, 10, 12, 14, 15, 24, 25, 29, 30
