AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

மகரம் செப்டம்பர் மாத ராசி பலன் 2021 | September Matha Magaram Rasi Palan 2021

dateAugust 4, 2021

மகரம் செப்டம்பர் 2021 பொதுப்பலன்:

மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இந்த மாதம் பொதுவாக உங்களுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கும்.  கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்கும்.  சட்டம், மருத்துவம் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் உள்ளவர்கள் தங்கள் பொருளாதார நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணலாம்.  உத்தியோகத்தில் இருபவர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் பிரகாசிப்பார்கள். உங்களில் சிலருக்கு உதவித்தொகை அல்லது கல்வி உதவி கிடைக்கலாம். நீங்கள் பொதுவாக இப்போது நம்பிக்கையுடன் காணப்படலாம். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.  

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள் 

காதல் /குடும்பம்:

திருமணமான தம்பதிகளுக்கு இடையில் அதிக நெருக்கத்துடன், இணக்கமான பிணைப்பை அனுபவிக்க வாய்ப்புள்ளது. ஆனால் குடும்ப பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகளுக்கு சில சாத்தியங்கள் உள்ளன. எனவே, வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் குழந்தைகளுடனான உறவு தொடர்ந்து சிறப்பாக  இருக்கலாம்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : பால திரிபுர சுந்தரி பூஜை

நிதிநிலை:

சட்டம், மருத்துவம் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் உள்ளவர்கள் தங்கள் பொருளாதார நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண இயலும். கமிஷன் முகவர்கள் மற்றும் தரகு வணிகம் செய்யும் நபர்களும் கணிசமான  லாபத்தை ஈட்ட முடியும். வர்த்தகத்தில் புதிய முதலீடுகளும் நல்ல இலாபங்களை அளிக்கக்கூடும், பொதுவாக, இந்த மாதம் லாபம் அளிக்கும் மாதமாக இருக்கும். 

உங்கள் நிதிநிலை மேம்பட : கோ பூஜை 

வேலை:

உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் நல்ல பெயரும் புகழும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறலாம். வேலையில் முன்னேற வாய்ப்புகளும் உள்ளன.

தொழில்:

வியாபாரத்தில் போட்டிகள் இருக்கலாம். வர்த்தகத்தில் புதிய முதலீடுகளைச் செய்யும்போது நீங்கள்  எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். சுயதொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம்  சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். கூட்டு வணிகம் உங்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டக்கூடும். பங்கு வர்த்தகம் மற்றும் அது தொடர்புடைய பரிவர்த்தனைகளில் ஈடுபடுபவர்கள் புதிய முதலீடுகள் மூலம் குறிப்பிடத்தக்க லாபம் ஈட்டலாம்.

தொழில் வல்லுனர்கள்:

மகர ராசி தொழில் வல்லுநர்கள் இந்த மாதத்தில் தங்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் கவனமாக இருக்க வேண்டியிருக்கும். கவனக் குறைவு இப்போது சில சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். உங்கள் பொறுப்புகளை முழு கவனத்துடன்  நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.  இது உங்கள் முயற்சிகளில் வெற்றிபெற உதவும்.

வேலை மற்றும் தொழிலில் மேன்மை பெற : லக்ஷ்மி பூஜை 

ஆரோக்கியம்:

மகர ராசி இளம் வயதினர் ஆரோக்கியமாக இருப்பார்கள். நடுத்தர வயதினருக்கு உடல் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். சிறிய அசௌகரியங்கள்  ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை 

மாணவர்கள்:

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால் பள்ளி மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறப்பாகச் செயல்படலாம் மற்றும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். உயர்கல்வியைத் தொடங்குபவர்களும் உறுதியான முயற்சிகளால் நம்பகத்தன்மையுடன் செயல்பட முடியும். விஞ்ஞானத் துறையில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களும் தங்கள் ஆராய்ச்சிப் பணிகளில் வெற்றிபெறலாம் மற்றும் அவர்களின் கல்வி முயற்சிகளில் சிறந்து விளங்கலாம்.

கல்வியில் மேன்மை பெற : துர்கா பூஜை 

சுப நாட்கள் : 01, 02, 09, 12, 26, 27  
அசுப நாட்கள் : 05, 06, 07, 12 24, 25


banner

Leave a Reply