தனுசு செப்டம்பர் மாத ராசி பலன் 2023 | September Matha Dhanusu Rasi Palan 2023

தனுசு செப்டம்பர் மாத பொதுப்பலன்கள் 2023:
தனுசு ராசிக்காரர்கள் உத்தியோகத்தில் வேகத்தையும் அதிகாரத்தையும் பெறுவார்கள். வாழ்க்கையில் பொருள்சார் ஈடுபாடு தொடரும் அதே வேளையில், இந்த மாதத்தில் ஆன்மீக நாட்டமும் இருக்கலாம். நீங்கள் உங்கள் குழந்தைகளின் குணாதிசயங்களை மாற்ற முயற்சி மேற்கொள்ளலாம்.உங்கள் சிந்தனை முழுவதும் உங்கள் குழந்தை மற்றும் அவர்கள் ஒழுக்கம் பற்றியதாக இருக்கும். வாகனம் ஓட்டுவது தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
காதல் / குடும்ப உறவு :
தனுசு ராசி அன்பர்களின் உறவு நிலையில் மற்றும் அன்பில் வேறு பெண்களால் தடைகள் ஏற்படும். இருப்பினும், இந்த மாதத்தில் நீண்ட தூர பயணங்கள் மற்றும் ஆன்மீக சடங்குகளில் ஒன்றாக கலந்து கொள்வதன் மூலம் குடும்ப ஒற்றுமை கூடும். அதன் மூலம் கிடைக்கும் தெய்வீக ஆற்றல் திருமண வாழ்க்கை அல்லது உறவு விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் எவ்வகையான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சுமுகமாகத் தீரும். பொதுவாக, தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் அதிர்ஷ்டக் காலம் எதிர்பார்க்கப்படுகிறது.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
நிதிநிலை :
தனுசு ராசிக்காரர்களின் நிதிநிலை இந்த மாதம் மிதமானதாக இருக்கும். மறைமுகமான ஆதாரங்கள் மூலம் திடீர் எதிர்பாராத வருமானம் இந்த மாதத்தில் நிதி நிலைமையை நிர்வகிக்க உங்களுக்கு உதவும். பங்குச் சந்தையில் முதலீடு மற்றும் வர்த்தகம் நல்ல லாபத்தைத் தரும். இந்த காலகட்டத்தில் உத்தியோகத்தில் ஊதிய விகிதம் அதிகரிக்கலாம்.
உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை
உத்தியோகம் :
இந்த மாதம் வளம் மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்த காலகட்டத்தைக் கொண்டிருக்கும். உங்களுக்கு மிகவும் சாதகமான ஒரு மாற்றமும் இருக்கலாம். இந்த மாற்றம் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கலாம். இந்த மாதத்தில் உங்களுக்கு பண ஆதாயங்கள் கண்டிப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கூட பிரகாசமாக இருக்கும்.
தொழில் :
தனுசு ராசிக்காரர்களின் வியாபாரத்தில் மாற்றம் ஏற்படும். முதலீடு சாதகமான பலன்களைத் தர ஆரம்பிக்கலாம். அதிகாரம் மற்றும் வலுவான தலைமைத்துவ திறன் மற்றும் பணியிடத்தில் சரியான வழிகாட்டுதலை வழங்கும் திறன் காரணமாக தொழிலில் வளர்ச்சி காணப்படும். இந்த மாதத்தில் நிதி மேம்பாடு மற்றும் வருமானத்தில் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வணிக முயற்சிகள் மற்றும் வாய்ப்புகளின் அடிப்படையில் அதிர்ஷ்டம் எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் வல்லுனர்கள் :
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான காலமாக இருக்கும். நல்ல நிதிச் செழிப்பும் சாதகமான நிலையும் இருக்கும். தொழிலில் மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். உங்களின் சிறந்த வழிகாட்டுதலின் காரணமாக இளம் தலைமுறை பணியாளர்கள் மற்றும் கீழ்நிலை ஊழியர்களின் சிறப்பான செயல்திறனை காணலாம். தொழிலில் பெண்களால் பிரச்சனைகள் வரலாம், இந்த செப்டம்பர் மாதத்தில் நீங்கள் புத்திசாலித்தனமாகவும் விடாமுயற்சியுடனும் செயல்படலாம்.
தொழிலில் சிறந்து விளங்க : புதன் பூஜை
ஆரோக்கியம் :
தனுசு ராசிக்காரர்கள் இந்த மாதம் முழுவதும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். இருப்பினும், வாகனங்களால் சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த மாதத்தில் வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சுக்கிரன் பூஜை
மாணவர்கள் :
தனுசு ராசி மாணவர்களுக்கு கல்வி இந்த மாதம் சிறப்பாக இருக்கும். ஆசிரியர் / வழிகாட்டி / குருக்களிடம் இருந்து நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளலாம். தொழில் சார்ந்த படிப்பைத் தொடரும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட பாடத்தின் மீது அதிக அக்கறை மற்றும் கட்டுப்பாட்டை கொண்டிருப்பார்கள். அறிவின் விரிவாக்கம் மற்றும் முடுவெடுக்கும் திறன் காணப்படும். வெளிநாட்டில் உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சாதகமான செய்திகள் வரலாம்.
கல்வியில் சிறந்து விளங்க : விஷ்ணு பூஜை
சுப தேதிகள் : 1, 2, 6, 7, 8, 9, 16, 17, 18, 19, 27, 28, 29 & 30.
அசுப தேதிகள் : 10, 11, 12, 20, 21, 22, 23 & 24.
