விருச்சிகம் செப்டம்பர் மாத ராசி பலன் 2023 | September Matha Viruchigam Rasi Palan 2023

விருச்சிகம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள் 2023:
விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதத்தில் நீங்கள் பண ஆதாயங்கள் மற்றும் பல ஆதாரங்கள் மூலம் செல்வத்தை குவிப்பதில் கவனம் செலுத்தலாம். ரியல் எஸ்டேட் பங்குகள் / சொத்துக்கள் மீதான ஆதாயமும் எதிர்பார்க்கப்படுகிறது. பொருள் சார்ந்த மற்றும் ஆன்மீகம் சார்ந்த நோக்கங்களில் வெற்றியை அடைவீர்கள். உங்களின் ஆரோக்கியம் மற்றும் தாய் இருவருக்கும் உடல்நலம் தொடர்ந்து அசௌகரியமாக இருக்கலாம். இந்த செப்டம்பர் மாதத்தில் பூர்வீக சொத்து விவகாரங்கள் மற்றும் மனைவி / பங்குதாரர் ஆகியவற்றில் அதிர்ஷ்டம் ஏற்படலாம்.
காதல் / குடும்ப உறவு :
உறவு விஷயங்கள் சிறப்பாக இருக்கும் மற்றும் தம்பதியினரிடையே அன்பு மற்றும் பிணைப்பில் முன்னேற்றம் ஏற்படும். இந்த மாதத்தில் மனைவி / பங்குதாரர் மூலமாகவும், மாமியார் மூலமாகவும் நன்மைகள் மற்றும் அதிர்ஷ்டங்களை காணலாம். உறவு / குடும்பத்தில் இருந்த பழைய பிரச்சனைகள் இந்த மாதத்தில் தீரலாம்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
நிதிநிலை :
இம்மாதம் நிதிநிலை நன்றாக இருக்கும். பங்குச் சந்தை மூலம் கிடைக்கும் லாபங்கள் மற்றும் தொழிலில் புத்திசாலித்தனமான செயல்பட்டு அதற்கான லாபங்களும் இந்த மாதம் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மதம் மற்றும் ஆன்மீக விஷயங்களில் செலவுகள் ஏற்படும். ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மூலம் ஆதாயம் ஏற்படலாம். வீட்டைப் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு செலவுகள் இருக்கலாம். கடனைத் திருப்பிச் செலுத்துவதில் வேகம் கூடும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை
உத்தியோகம் :
விருச்சிக ராசி அன்பர்களே! உங்கள் தொழில் சிறப்பாக இருக்கும், மேலும் தொழிலில் வளர்ச்சியும் வெற்றியும் தவிர்க்க முடியாததாக இருக்கும். மேலதிகாரிகளுடன் ஈகோ மோதல்கள் மற்றும் தவறான புரிதல்கள் ஏற்படலாம். என்ற போதிலும் பணியிடத்தில் சௌகரியமாக உணர்வீர்கள். தொழிலில் உங்களுக்கு தகுதியான பண ஆதாயம் / வெகுமதிகளும் சேரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் நல்ல வழிகாட்டுதலும், கிடைக்கும்.
தொழில் :
உங்களால் மேற்கொள்ளப்படும் வியாபாரம் இந்த மாதத்தில் நல்ல வளர்ச்சியையும் வெற்றியையும் பெறலாம். வணிகத்தில் முதலீடு போதுமான அளவில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் மற்றும் பயனுள்ள பயன்பாட்டை உறுதி செய்ய ஒதுக்கீடு செய்ய வேண்டும். வியாபாரத்தில் மிதமான பண வரவு இருக்கலாம். வியாபாரத்தில் மாற்றுக் கூட்டாளிகளை அமைத்துக் கொள்வீர்கள். இந்த மாதத்தில் வணிகத்தை திறம்பட நிர்வகிக்க வலுவான முடிவெடுக்கும் சாதுரியம் தேவைப்படலாம்.
தொழில் வல்லுனர்கள் :
விருச்சிக ராசி அன்பர்கள் விவேகத்துடனும் பணியில் சக தொழில் வல்லுனர்களுடன் பழகும்போது சாதுரியமாகவும் செயல்படுவார்கள். நீங்கள் இந்த மாதத்தில் தொழில் மூலம் நல்ல பண வரவுகளை குவிப்பீர்கள். தொழிலில் பங்குதாரர்கள் பணியிடத்தில் வழிகாட்டிகளாக மாறலாம். தொழில் சம்பந்தமான வெற்றி மற்றும் தொலைதூரப் பயணங்களும் எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்க விதிமுறைகள் / உத்தரவுகள் இந்த மாதத்தில் உங்கள் சொந்த தொழிலுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
தொழிலில் மேன்மை பெற : சூரியன் பூஜை
ஆரோக்கியம்:
விருச்சிக ராசிக்காரர்களின் ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். இருப்பினும், தாயின் உடல்நிலையில் பின்னடைவுகள் ஏற்படும், இது சம்பந்தமாக செலவுகள் ஏற்படும். அதன் விளைவாக போதுமான தூக்கமின்மை மற்றும் மன அமைதியின்மை உணரப்படலாம்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை
மாணவர்கள் :
விருச்சிக ராசியைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் மிதமான காலம் இருக்கும். மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் போட்டித் தேர்வுகளில் வெற்றி காண்பார்கள். மாணவர்கள் நீண்ட கால வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமான அணுகுமுறையை விளைவிக்கும் தொழில் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்யலாம். வெளிநாட்டில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கும் இந்த மாதம் சாதகமான காலமாக இருக்கலாம்.
கல்வியில் சிறந்து விளங்க : சனி பூஜை
சுப தேதிகள் : 4, 5, 6, 7, 13, 14, 15, 16, 17, 25, 26, 27 & 28.
அசுப தேதிகள் : 8, 9, 10, 18, 19, 20, 21 & 22.
