மகரம் செப்டம்பர் மாத ராசி பலன் 2023 | September Matha Magaram Rasi Palan 2023

மகரம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள் 2023:
மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் உடல்நிலையில் இருந்து சிறிது நிவாரணம் கிடைக்கும். பரம்பரை சொத்து கிட்டும் அதிர்ஷ்டம் இருக்கலாம். இந்த மாதத்தில் மறதியால் பண இழப்பு ஏற்படலாம். ஆன்மீகத்தின் மீதான நாட்டம் உங்களுக்கு மன அமைதியைத் தரும். இந்த காலகட்டத்தில் ரியல் எஸ்டேட், அசையா சொத்துக்கள் தொடர்பான விஷயங்கள் சிக்கல்களை உருவாக்கலாம்.
காதல் / குடும்ப உறவு :
உறவு மற்றும் காதல் திருமண வாழ்க்கையில் சாதகமான சூழலை அனுபவிக்கலாம். மகர ராசிக்காரர்கள் குடும்பத்தில் கருத்துப் பரிமாற்றத்தில் கவனமாக இருக்க வேண்டும். செப்டம்பர் மாதத்தில் வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது, இது தேவையற்ற சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும். காதலர்கள் திருமண உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லலாம், அதே சமயம் திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் இந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்ளலாம்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சனி பூஜை
நிதிநிலை :
மகர ராசிக்காரர்களின் நிதி நிலைமை இந்த மாத தொடக்கத்தில் சுமாராக இருக்கும் அதே சமயம் மாதத்தின் பிற்பாதியில் நல்ல வரவுகள் காணப்படும். வருமானம் சீராக இருக்கும். இந்த மாதத்தில் ஊக வணிகம் மற்றும் முதலீடு மூலம் சம்பாதிக்கலாம். பெற்றோரின் ஆரோக்கியத்துக்காகச் செய்யும் செலவுகள் காரணமாக சேமிப்பு குறையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மூலம் வருமான வாய்ப்பும் இந்த காலகட்டத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் நிதிநிலை மேம்பட : சனி பூஜை
உத்தியோகம் :
மகர ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை இந்த மாதத்தில் சாதகமான மாற்றங்களைக் காணும். பெண் பணியாளர்கள் மற்றும் சக பணியாளர்கள் உத்தியோகத்தில் உங்களுக்கு ஆதரவாகவும் சாதகமாகவும் இருப்பார்கள். பணியிடச் சூழல் வசதிகரமாக இருக்கும். இருப்பினும், இந்த காலகட்டத்தில் தொழிலில் வழிகாட்டிகள் / மேலதிகாரிகள் / முதலாளிகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
தொழில் :
மகர ராசிக்காரர்களால் மேற்கொள்ளப்படும் வியாபாரம் இந்த செப்டம்பர் மாதத்தில் வளர்ச்சி மற்றும் மீட்சியைக் காணலாம். கடன்கள் சிக்கலைத் தந்தாலும் வியாபாரம் விரிவடைவதற்கான வாய்ப்புகள் தொடரும். கூட்டாண்மை வணிகமானது, வணிகத்திற்கான நிதி மற்றும் கட்டமைப்பில் மாற்றங்களுக்கு உள்ளாகலாம். வணிகத்தில் துணை அதிகாரிகளுக்கு வழிகாட்ட திறனுடனும் தலைமைத்துவத்துடனும் இணக்கமாகவும் இருக்க வேண்டும்.
தொழில் வல்லுனர்கள் :
மகர ராசிக்காரர்களுக்கு தொழிலில் கலவையான பலன்கள் உண்டாகும். இந்த மாதத்தில் தவறான தகவல்தொடர்பு மற்றும் ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக வாக்குவாதங்கள் இருக்கலாம். தொழிலில் பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வணிகத்தின் மூலம் வரவு குறையாமல் இருக்கலாம்.
உங்கள் தொழிலில் மேன்மை பெற :சுக்கிரன் பூஜை
ஆரோக்கியம் :
உங்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் உடல்நிலை உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இம்மாதத்தில் உங்களுக்கு சரும பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு. குறுகிய காலத்தில் சிறு அசௌகரியங்கள் இருக்கும். யோகா மற்றும் தியானம் மூலம் மன அமைதியை உணரலாம்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : புதன் பூஜை
மாணவர்கள் :
மகர ராசி மாணவர்களுக்கு படிப்பில் சிறு தடைகள் ஏற்படும். கல்வியில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம். இந்த மாதத்தில் ஆசிரியர்கள் மற்றும் குருக்களுடன் ஈகோ மோதல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்தேர்வுகளிலும் கல்வியிலும் சிறப்பாகச் செயல்பட தெய்வீக அருளையும் குருக்களின் ஆசியையும் பெற வேண்டும். வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் வேலை வாய்ப்புகளைப் பெற முயலும் மாணவர்கள் இந்தக் காலக்கட்டத்தில் சிறிதளவு முன்னேற்றங்களைக் கொண்டிருக்கலாம்.
கல்வியில் சிறந்து விளங்க : சுக்கிரன் பூஜை
சுப தேதிகள் : 1, 2, 3, 4, 5, 8, 9, 10, 11, 12, 18, 19, 20, 21, 29 & 30.
அசுப தேதிகள் : 13, 14, 15, 22, 23, 24, 25 & 26.
