பணம் தரும் மந்திரம்
கோடி கோடியாய் பணத்தை அள்ளித் தரும் குபேர-லக்ஷ்மி மந்திரம்
இன்றைய காலத்தில் பணம் என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். தொட்டதிற்கெல்லாம் பணம் தான் பேசும். இந்தப் பணத்தை ஈட்டத் தான் நாம் அனைவரும் பாடுபடுகிறோம். ஒரு சிலரால் எளிதில் பணம் சம்பாதிக்க முடிகிறது. ஆனால் பலருக்கோ பணம் சம்பாதிப்பது பெரும்பாடாகத் தான் இருக்கிறது. அவ்வாறு சம்பாத்திதாலும் அதை தக்க வைத்துக் கொள்ள அரும்பாடுபடத்தான் வேண்டியிருக்கிறது. காரணம் பணம் தான் ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கறது. வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள பணம் அவசியம் தேவைப் படுகிறது எவ்வளவு உழைத்தாலும் பணம் போதவில்லை என்பவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்.
வசதியுடன் வாழ்பவர்களைப் பார்த்து அவருக்கென்ன சுக்கிர தசை என்று கூறுவோம்.இதில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம். ஒருவருக்கு ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் அவர் பண வசதியுடன் செல்வச் செழிப்புடன் இருப்பார் என்று. ஆனால் இவ்வாறு எல்லாருக்கும் அமைந்துவிடுவதில்லை. பிறகு என்ன தான் செய்வது.
செல்வத்திற்கு அதிபதியாக இருப்பவள் லக்ஷ்மி தேவி. அதனை விநியோகிக்கும் பொறுப்பு குபேரருக்கு உள்ளது. அவர் நிதியின் அதிபதியாகத் திகழ்பவர். இவர்கள் இருவரையும் வழிபடுவதன் மூலம் பணம் எளிதில் சேரும். உங்கள் முன்னேற்ற வழியில் காணப்படும் பொருளாதாரத் தடைகள் அகலும். நிதி நெருக்கடிகள் மற்றும் கடன் தொல்லைகள் தீரும். உங்கள் வழியில் பணம் வரும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன? உங்கள் வாழ்வில் செல்வச் செழிப்பு உண்டாக நீங்கள் கீழ் கண்ட மந்திரத்தை தினமும் ஜெபிக்க உங்களால் பணத்தை ஈர்க்க இயலும்.
லக்ஷ்மி குபேர மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஐம் குபேர லக்ஷ்ம்யை
கமலதாரின்யை தனாகர்ஷின்யை
ஸ்வாஹா ஹா
குபேர மந்திரம்
ஓம் யக்ஷாய குபேராய வைஷ்ரவனாய தன தான்யாதி பதயேதன தான்யா சம்ருத்திமே தேஹி தேஹி தாபய ஸ்வாஹா ஹா
லக்ஷ்மி தேவி சுக்கிரனுக்கு அதிபதியாக விளங்குபவள். குபேரன் நிதிநிகளைக் காத்து அளிப்பவர். இவர்களுக்குரிய மந்திரங்களை தினமும் ஜெபிப்பதன் மூலம் செல்வத்தை ஈர்க்க முடியும். இந்த மந்திரங்களை வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று வடக்கே பார்த்து அமர்ந்து ஜெபிக்க ஆரம்பிக்க வேண்டும். தினமும் காலை பூஜை செய்து முழு மனதுடன் சொல்லி வந்தால் செல்வ, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். உங்களுடைய நிதி நிலைமை மேம்படும். உங்கள் இல்லத்தில் பணம் சேரும்.

Leave a Reply