சப்த ரிஷிகளில் ஒருவராகவும் சித்தர்களுள் முதன்மைச் சித்தராகவும் விளங்கியவர் அகத்தியர். அவர் முக்காலமும் அறிந்த ஞானி. ஆழ்ந்த ஞானம் கொண்டவர். குட முனி என்றும் கும்ப முனி என்றும் அழைக்கப்படுபவர். மக்களின் நலன் கருதி அவர் பல நூல்களை அருளிச் சென்றுள்ளார். மருத்துவம், ஜோதிடம் என பல்வேறு அம்சங்களில் அவர் நமக்கு தீர்வுகளை அருளச் செய்துள்ளார். அவற்றுள் ஒன்று அகத்தியர் காவியம் 12000 என்ற நூல் ஆகும். அதில் அவர் செல்வ வளம் பெருக்கும் ஒரு மந்திரத்தை நமக்கு அருளிச் சென்றுள்ளார். மந்திரம் என்பது “ஒலி” அதிர்வுகள் கொண்ட விஞ்ஞானம். இம்மந்திரங்களில் பொருளை விட ஒலி அதிர்வுக்கு முக்கியத்துவம் இருக்கும். செல்வம் என்பது பணத்தை மட்டும் குறிப்பதல்ல. செல்வ வளம் என்பது பதினாறு பேறுகளையும் பெற்று சிறப்புற வாழ்வது ஆகும்.
செல்வத்தை ஈர்க்கும் அகத்தியர் மந்திரம்:
“சித்தியாம் இலக்குமியின் மந்திர பீஜமப்பா
சிறப்பாக இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்
கென்று பத்தியாய் லட்சமுரு ஓது ஓது
சகலசெல்வமும் கூடிவரும் தரணியிலேபகராதே”- அகத்தியர் 12000
”இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்” இது இலக்குமியின் பீஜ மந்திரம் ஆகும். இந்த மந்திரத்தை அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் முறை ஜெபித்தால் சகல செல்வங்களும் நம் வசமாகும் என்று கூறுகிறார் அகத்தியர். இந்த மந்திரத்தை முறையாக பிரயோகிக்க வேண்டும்.
இதனை முறையாக ஜெபித்து நீங்கள் பயன் பெறுங்கள்.

Leave a Reply