விருச்சிகம் அக்டோபர் மாத ராசி பலன் 2021 | October Matha Viruchigam Rasi Palan 2021

விருச்சிகம் அக்டோபர் பொதுப்பலன்கள் 2021:
விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். குடும்பச் சூழல் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். இந்த மாதம் புதிய நண்பர்களைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். பற்றாக்குறை இருக்க வாய்ப்பில்லை. பணத்தை கடனாக கொடுப்பதும் வாங்குவதும் இந்த மாதம் தவிர்க்கப்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறந்த பலன்களைக் காண்பார்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் பிரகாசிப்பார்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்றாலும் சிறு சிறு உடல் உபாதைகள் வந்து போகும். மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில்வார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
திருமணமான தம்பதிகள் இந்த மாதம் அனுகூலமான பலன்களைக் காண்பார்கள். இருவருக்கும் இடையே அன்னியோன்யம் கூடும். அனுசரித்துச் செல்வதன் மூலம் நல்லுறவை தக்க வைத்துக் கொள்ள இயலும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் திருமணம் நிச்சயமாக வாய்ப்புள்ளது. உங்களுக்கு ஏற்ற துணையைக் கண்டு கொள்வீர்கள்.
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் நிதிநிலையில் ஏற்றமான நிலை இருக்கும். பல வகையிலும் உங்களுக்கு பண உதவிகள் வந்து குவியும். உங்கள் பொருளாதார நிலை ஏற்றம் காணும் வகையில் கிரக நிலைகள் உள்ளன. பங்கு வர்த்தக முதலீடுகள் இந்த மாதம் லாபத்தை அளிக்கும்.
வேலை:
உத்தியோகத்தில் நீங்கள் உங்கள் திறமைகளை வெளிபடுத்தி சாதனைகளைப் புரிவீர்கள். பணியிடத்தில் உங்கள் நன்மதிப்பு கூடும்.நல்ல பெயரும் புகழும் பெறுவீர்கள். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கப் பெற்று மகிழ்வீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பையும் நட்பையும் சம்பாதிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
தொழில்:
சொந்த வியாபாரம் அல்லது தொழில் செய்யும் விருச்சிக ராசி அன்பர்கள் இந்த மாதம் புதிய தொழில் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் லாபத்தையும் பெறுவீர்கள். புதிய வாடிக்கையாளர்களையும் பெறுவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தங்கள் வருமானத்தை உயர்த்திக் கொள்ள புதிய தொழிலைத் தொடங்குவார்கள்.
தொழில் வல்லுனர்கள்:
இந்த மாதம் நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்ள் வேண்டியிருக்கும். என்றாலும் உங்களின் உழைப்பிற்கேற்ற நற்பலன்களை காண்பது கடினம். தொழில் நடவடிக்கைகளின் போது உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. தேவையற்ற வீண் வார்த்தைகளை பிரயோகிக்காதீர்கள். வாக்கு வாதங்களில் ஈடுபடாதீர்கள். வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் உங்கள் நாடி வரும். அதன் மூலம் நீங்கள் ஆதாயமும் வெற்றியும் பெறுவீர்கள்.
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும் என்றாலும் மனதில் சிறிது பதட்ட நிலை காணப்படும். உணவு முறையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இடுப்பு மற்றும் முதுகு வலி வருவதற்காண வாய்ப்புகள் உள்ளது.
மாணவர்கள்:
பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூடும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கல்லூரி முடித்த மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது. உதவித் தொகை வேண்டி விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள்.
