துலாம் அக்டோபர் மாத ராசி பலன் 2021 | October Matha Thulam Rasi Palan 2021

துலாம் அக்டோபர் 2021 பொதுப்பலன்:
கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகும். மாத இடைப்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் படிப்படியாக மேம்படும். வாழ்வில் ஏற்றம் காணப்படும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வேலையில் சில தடைகளும் சவால்களையும் நீங்கள் சந்திக்க நேரும். இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலையில் ஏற்றம் இருக்கும். நீங்கள் அசையாச் சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் படிப்படியாக முன்னேற்றம் காண்பார்கள். இந்த மாதம் தொழில் மூலம் சுமாரான ஆதாயங்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் இந்த மாதம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
திருமணமான தம்பதிகள் மாத ஆரம்பத்தை விட பிற்பகுதியில் சுமுக உறவு இருக்கக் காணலாம் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. திருமணம், வளைகாப்பு என சுப நிகழ்ச்சிகள் விருந்தினர்கள் வருகை என வீட்டில் குதூகலம் இருக்கும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல மனதில் ஏற்படும் மகிழ்ச்சி உங்கள் முகத்திலும் தோற்றத்திலும் வெளிப்படும். வாழ்வில் ஏற்றம் காணப்படும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
நிதிநிலை:
இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலையில் ஏற்றம் இருக்கும். நீங்கள் அசையாச் சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் கடன் வாங்குவதற்கு விண்ணப்பித்து இருந்தால் இந்த மாதம் கடன் தொகை கிடைக்கப் பெறுவீர்கள்.
வேலை:
தனியார் அலுவலகத்தில் பணி புரிபவர்கள் இந்த மாதம் சிறந்த பலன்களைக் காண்பார்கள். சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். உங்கள் பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் புகழும் பெயரும் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள இந்த மாதம் சிறந்த வேலை கிடைக்கப் பெறுவீர்கள்.
தொழில்:
இந்த மாதம் தொழில் மூலம் சுமாரான ஆதாயங்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் இந்த மாதம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். அதில் சில தடைகள் சந்திக்க நேரும் என்பதால் கவனம் தேவை. ஆடை விற்பனை துறையில் இருபவர்கள் இந்த மாதம் தங்கள் தொழில் சிறப்பாக நடைபெறக் காண்பார்கள். அதன் மூலம் வருமானம் உயரக் காண்பார்கள்.
தொழில் வல்லுனர்கள் :
நீங்கள் இந்த மாதம் கவனமாகவும் கண்ணும் கருத்துமாகவும் செயல்படுவதன் மூலம் வெற்றி காண வாய்ப்பு உள்ளது. தொழில் செய்யும் இடத்தில் தேவையற்ற பேச்சுக்கள் மற்றும் வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும். மேலதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் நல்லாதரவை பெறுவீர்கள்.
ஆரோக்கியம்:
இந்த மாதம் இறுதியில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தற்போது நீங்கள் சந்திக்கும் உபாதைகளில் இருந்து விடுபடுவீர்கள். சிறு உடல் உபாதைகள் என்றாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைகளை மேற்கொள்வது நல்லது.
மாணவர்கள்:
மாணவர்கள் கவனமாகப் படிக்க வேண்டும். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் வேலை கிடைக்கப் பெறுவார்கள். ஆராய்ச்சி துறையில் படிக்கும் மாணவர்கள் குறைந்த உழைப்பில் அதிக பலன்களைக் காண்பார்கள்.
