AstroVed Menu
AstroVed
search
search

தனுசு அக்டோபர் மாத ராசி பலன் 2021 | October Matha Dhanusu Rasi Palan 2021

dateSeptember 3, 2021

தனுசு அக்டோபர் பொதுப்பலன்கள் 2021:

திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமண முயற்சி கை கூடும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்கள் கடந்த கால முதலீடுகளின் மூலம் நீங்கள் லாபம் பெறுவீர்கள். உங்கள் பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். இந்த மாதம் புதிய முதலீடுகள் எதுவும் மேற்கொள்ளதீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை.  மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.   

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள் 

காதல் / குடும்பம்:

குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும்.  உங்கள் வாழ்க்கைத் துணைக்கென நேரம் ஒதுக்கி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நல்ல சுமுகமான உறவு நிலை இருக்கும். இது தங்களின் மன மகிழ்ச்சியை கூட்டும். 

நிதி நிலை:

இந்த மாதம் உங்கள் பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உங்கள் அன்றாடத் தேவைகளை நீங்கள் எளிதாக  சமாளிப்பீர்கள். பணத்தை எதிர்கால நலன் கருதி சேமிப்பீர்கள். பங்கு வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்ய இந்த மாதம் ஏற்ற காலமாக இருக்கும்.

வேலை:

வேலை தேடிகொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளை கொடுக்கும் மிகவும் உன்னதமான மாதமாக இந்த மாதம் அமைகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள்  அதிக பணிச் சுமை இருந்த போதிலும் சிறப்பாக பணியாற்றுவீர்கள். புதிய பணிகள் மற்றும் பொறுப்புக்கள் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் செயல் திறன் பிறரால் பாராட்டப்படும்.

தொழில்:

சுயதொழில் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவு எடுங்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களின்  வருமானம் அதிகரிக்கும்.  நீங்கள் தொழிலில் புதிய யுத்திகளைக் கையாள்வதன்  மூலம் வெற்றி காண்பீர்கள். பணிக்கு புதிய ஆட்களை நியமிப்பீர்கள். 

தொழில் வல்லுனர்கள்:

நீங்கள் சுயதொழில் செய்பவராக இருந்தால் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் முன்னேற்றத்தில் எந்தவித தடையும் இருக்காது. உங்கள் கடின உழைப்பிற்கு மேலதிகாரிகளின் அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். பணியிடத்தில் உங்களுக்கு நல்ல பெயரும் புகழும் கிட்டும்

ஆரோக்கியம்:

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் சந்தித்து வந்த அஜீரணக் கோளாறு உபாதைகள் நீங்கும். துரித உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். உடற் பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆரோக்கிய  உணவை சரியான நேரத்தில் உண்டு வருவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள முடியும். 

மாணவர்கள்:

பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்கள் பொறுமையுடன் கடினமாக உழைத்துப் படித்தால் வெற்றி நிச்சயம். உயர்கல்வி மாணவர்கள் கவனச் சிதறலுக்கு ஆட்படுவார்கள். படிப்பில் கவனம் தேவை. வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்கள் தங்கள் விருப்பம் நிறைவேறக் காண்பார்கள். 

சுப நாட்கள்: 

01, 08, 10, 14, 15, 20, 25.

அசுப நாட்கள்:

5, 6, 7, 28, 29, 30. 


banner

Leave a Reply