கன்னி அக்டோபர் மாத ராசி பலன் 2021 | October Matha Kanni Rasi Palan 2021

கன்னி அக்டோபர் பொதுப்பலன்கள் 2021:
கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமையுடன் இருப்பார்கள். என்றாலும் அவ்வப்போது சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்து போகும். எனவே உங்கள் பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். உங்கள் மனதில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இந்த மாதம் உங்கள் நிதிநிலையில் ஏற்றமான நிலை இருக்கும். உங்கள் வருமானம் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல பலன்களைக் காண்பார்கள். வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டியாளர்களை சந்திக்க நேரும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். மாணவர்கள் அதிக முயற்சியுடனும் கவனமுடனும் படிக்க வேண்டும். ஞாபகத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
திருமணமான தம்பதிகளுக்கு இடையே நல்லுறவு இந்த மாதம் படிப்படியாக மேம்படும். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் காரணமாக சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். உங்கள் நண்பர்கள் உங்கள் இருவருக்கும் இடையே பாலமாக இருந்து உங்கள் ஒற்றுமைக்கு உதவி புரிவார்கள். திருமணத்திற்குக் காத்துக் கொண்டிருக்கும் கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் திருமணம் நிச்சயம் ஆக வாய்ப்பு உண்டு.
நிதி நிலை:
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் எதிர்பாராத மாற்றங்களை சந்திப்பீர்கள். அந்த மாற்றங்கள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். உங்கள் வருமானம் கணிசமாக உயரும். முதலீடுகளின் மூலம் ஆதாயம் காண்பீர்கள். நிலுவையில் இருக்கும் கடனை இந்த மாதம் அடைப்பீர்கள்.
வேலை:
உத்தியோகத்தில் இருக்கும் கன்னி ராசி அன்பர்கள் இந்த மாதம் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். தகவல் தொடர்பு மற்றும் அச்சுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணியில் நல்ல ஆதாயம் உண்டு. வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதம் வேலை கிடைக்கும்.
தொழில்:
இந்த மாதம் தொழிலில் உங்கள் முன்னேற்றம் சுமாராக இருக்கும். நீங்கள் படிப்படியாக முன்னேற்றம் காண்பீர்கள். போட்டியாளர்கள் அதிகரிப்பார்கள் என்றாலும் சமாளித்து முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் முன்னேற்றத்தில் சில தடைகளும் தாமதங்களும் காணப்பட்டாலும் உங்கள் செயல் திறன் மூலம் வெற்றி காண்பீர்கள்.
தொழில் வல்லுனர்கள்:
இந்த மாதம் தொழில் குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். தொழில் குறித்த ஆலோசனைகளை சிறிது வாரங்களுக்கு தள்ளி வைக்கவும். நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. நீங்கள் முன்னேற்றம் காண இன்னும் சிறிது காலம் பொறுமை காக்க வேண்டும்.
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பணிச்சுமை காரணமாக மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம். மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை பிரச்சனைக்கு தியானம் மற்றும் நடை பயிற்சி நன்மை பயிக்கும்.
மாணவர்கள்:
மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். கவனத் திறன் அதிகரிக்கும். மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் இருக்கும். அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையில் இருக்கும் மாணவர்கள் பகுதி நேர வேலை பெறுவார்கள். போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் சிறிது கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வார்கள்.
