சிம்மம் அக்டோபர் மாத ராசி பலன் 2021 | October Matha Simmam Rasi Palan 2021

சிம்மம் அக்டோபர் 2021 பொதுப்பலன்கள்:
குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் நல்லிணக்கமும் இருக்கும். உங்கள் நிதிநிலையில் ஏற்ற இறக்க நிலை காண்பீர்கள். பண வரவு கணிசமாக அதிகரித்தாலும் செலவுகளையும் நீங்கள் சந்திக்க நேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் சுமாரான பலன்களைக் காண்பீர்கள். வியாபாரத்தின் மூலம் சிறந்த லாபமும் ஆதாயமும் பெறுவீர்கள். புதிய தொழில் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சொத்துக்கள் அல்லது பழைய வண்டி வாகனகங்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் மனதில் புதிய விஷயங்களை கற்கும் ஆர்வம் வளர்த்துக் கொள்வார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். மற்ற குடும்ப உறவினர்களுடனான உறவு சுமுகமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். நண்பர்களிடம் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனம் தேவை. திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் இன்னும் சற்று காலம் பொறுத்திருக்க வேண்டும்.
நிதி நிலை:
உங்கள் பொருளாதார நிலையில் ஏற்ற இறக்க நிலை இருப்பதைக் காண்பீர்கள். . பண வரவு கணிசமாக இருக்கும். என்றாலும் செலவுகளையும் நீங்கள் சந்திக்க நேரும். வீடு மற்றும் வாகனம் சம்மந்தப்பட்ட செலவுகள் ஏற்படும். தங்களின் செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் ஆன்மீக யாத்திரை செல்லுதல், மற்றும் தான தரும விஷயங்களுக்காகவும் பணத்தை செலவு செய்வீர்கள்.
வேலை:
நீங்கள் தனியார் துறையில் உத்தியோகத்தில் இருப்பவர் என்றால் உங்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். உடன் பணிபுரிபவர்கள் உங்களுடன் ஒத்துழைக்க மாட்டார்கள். இதனால் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. தேவையற்ற பேச்சுகளைப் பேசாதீர்கள். வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். அரசு துறையில் பணி புரிபவர்கள் இந்த மாதம் சிறந்த பலன்களைக் காண்பார்கள். பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கக் காண்பார்கள்.
தொழில்:
தொழில் அல்லது வியாபாரம் செய்யும் சிம்ம ராசி அன்பர்கள் இந்த மாதம் சிறந்த பலன்களைக் காண்பார்கள். புதிய தொழில் மேற்கொள்வது அல்லது இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வது இந்த மாதம் ஆதாயத்தைப் பெற்றுத் தரும். என்றாலும் தொழில் சார்ந்த ஒப்பந்தப் படிவங்களில் மற்றும் ஆவணங்களில் கையொப்பமிடுமுன் ஒன்றிற்கு இரண்டு முறை கவனித்து செயல்பட வேண்டும். வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் உங்கள் நாடி வரும். அதன் மூலம் நீங்கள் ஆதாயமும் வெற்றியும் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் இந்த மாதம் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம்.
தொழில் வல்லுனர்கள்:
நீங்கள் உங்கள் திறமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தி பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். இதனால் உங்கள் தொழிலில் நீங்கள் முன்னேறுவீர்கள். தொழில் முன்னேற்றம் குறித்த விவாதங்களில் கலந்து கொள்வீர்கள். உங்களில் சிலர் தொழில் நிமித்தமாக வெளி நாடு செல்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறு சிறு உடல் உபாதைகள் வந்து போகும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். அஜீரண கோளாறு மற்றும் குடல் சம்மந்தப்பட்ட பிரச்கனைகள் வரலாம். ஆரோக்கிய உணவு உண்பதின் மூலமாக வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். வயதானவர்களின் உடல் நிலையில் சிறிது கவனம் தேவை.
மாணவர்கள்:
பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தும் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். வெளி நாடு சென்று மேற்கல்வி படிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள்.
