AstroVed Menu
AstroVed
search
search

கடகம் அக்டோபர் மாத ராசி பலன் 2021 | October Matha Kadagam Rasi Palan 2021

dateSeptember 2, 2021

கடகம் அக்டோபர் 2021 பொதுப்பலன்கள்:

குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தாமதப்பட்டவர்களுக்கு  திருமணம் கைகூடும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிக பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்து எறிந்து நீங்கள் வெற்றி நடை போடுவீர்கள்.  தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடக்கும். இது சிறந்த மாதமாக இருக்கும். பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள். உயர்கல்வி படிப்பவர்களுக்கு சில தடைகள் இருந்தாலும் இந்த மாத கடைசி பகுதியில் படிப்பில் ஏற்றம் காண்பார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.   

காதல் / குடும்பம்:

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து குடும்ப ஒற்றுமையைக் காப்பீர்கள். கருத்து வேறுபாடுகள் ஏற்படா வண்ணம் ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.  உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நல்ல சுமுகமான உறவு நிலை இருக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். குடும்பத்தில் சில பிரச்சினைகள் தலை தூக்கினாலும் நீங்கள் அவற்றைத் தீர்த்து விடுவீர்கள்.

நிதி நிலை:

நிதிநிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் சற்றே அனுகூலமான பலன்கள் கிட்டும். பணவரவும் பணப்புழக்கமும் சுமாராக இருக்கும். ஊடகத்துறை, கல்வித்துறை மற்றும் சட்டத்துறையில் இருப்பவர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள். பங்கு வர்த்தகத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்க இந்த மாதம் ஏற்ற மாதம் அல்ல. அதில் லாபத்தைவிட இந்த மாதம் நஷ்டம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது

வேலை:

நீங்கள் உத்தியோகத்தில் இருப்பவர் என்றால் அலுவலகத்தில் உங்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்படும். சக பணியாளர்கள் உங்களுடன் ஒத்துழைப்பார்கள். சக பணியாளர்களிடம் சுமூகமான உறவு நீடிக்கும். நீங்கள் ஊடகத் துறையில் பணி புரிபவர் என்றால் இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டமான நேரம் என்று கூறலாம்.நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். என்றாலும்  முக்கியமான விஷயங்களில் மற்றவரிகளின் ஆலோசனை கேட்பதன் மூலம் நன்மை கிட்டும். 

தொழில்:

சொந்தமாகத் தொழில் செய்யும் கடக ராசி அன்பர்கள் இந்த மாதம் தொழிலை சிறப்பாக நடத்துவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் சிறந்த பலன்கள் கிட்டும்.  தொழிலில் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். அதன் மூலம் புதிய தொழில் செய்வது அல்லது இருக்கும் தொழிலில் விரிவாக்கத்தை மேற்கொள்வீர்கள். நீங்கள் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தொழில் மூலம் லாபமும் பெறுவீர்கள். 

தொழில் வல்லுனர்கள்:

கடக ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தங்களில் செயல்களில் கவனம் சிதறாமல் செயல்பட வேண்டும். கண்ணும் கருத்துமாக உங்கள் கடமைகளை ஆற்றுவதன்  மூலம் சிறப்பாகப் பணியாற்றி பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் பேச்சில் கவனம் தேவை. கடுமையான வார்த்தைகளைத் தவிருங்கள்.  வாக்குவாதங்களை மேற்கொள்ளதீர்கள். பக்குவமாக நடந்து கொள்ள முயலுங்கள். 

ஆரோக்கியம்:

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் சில குறைகள் ஏற்படலாம்.  எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியில் அதிக பதட்டம் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதால் நீங்கள் சிறிய ஆரோக்கியப் பிரச்சினை என்றாலும்  உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. 

மாணவர்கள்:

கடக ராசி மாணவர்கள் இந்த மாதம் கவனமுடன் படிக்க வேண்டும். காலம் தாழ்த்தாமல் படிக்க வேண்டிய பாடங்களை அவ்வப்போது படித்து முடிக்க முயல வேண்டும். நீங்கள் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி காண கடுமையாக உழைக்க வேண்டும்


banner

Leave a Reply