ரிஷபம் அக்டோபர் மாத ராசி பலன் 2021 | October Matha Rishabam Rasi Palan 2021

ரிஷபம் அக்டோபர் 2021 பொதுப்பலன்கள்:
குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடனுக்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு கடன் தொகை கிடைக்கப் பெறும்.அசையாச் சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும் கிடைக்கும் பலன் உங்களுக்கு திருப்திகரமாக இருக்காது. சொத்து சம்பந்தமான வழக்குகள் ஏதேனும் இருந்தால், இந்த மாதம் அவை உங்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
கணவன் மனைவி உறவில் அன்னியோன்யம் இருக்கும். என்றாலும் அவ்வப்போது சில கருத்து வேறுபாடுகள் வந்து வந்து போகும். எனவே உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள்.குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடனான உறவு சுமுகமாக இருக்கும்.
நிதிநிலை:
இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள போதுமான பணம் இருக்கும். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதன் மூலம் இந்த மாதம் லாபம் காண்பீர்கள். இந்த மாதம் பணத்தை சேமிக்கவும் செய்வீர்கள்.
வேலை:
நீங்கள் உத்தியோகத்தில் இருப்பவர் என்றால் சிறப்பாகச் செயல்படுவீர்கள். பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். நீங்கள் சிறப்பாகப் பணியாற்றி பெயரும் புகழும் பெறுவீர்கள். நீங்கள் அரசு அலுவலகத்தில் பணி புரிபவர் என்றால் இந்த மாதம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் காண முடியாது. நீங்கள் கடினமாக உழைத்தாலும் உழைப்பிற்கேற்ற பலன் கிட்டாது.
வியாபாரம்:
இந்த மாதம் தொழிலில் நீங்கள் அதிக போட்டியாளர்களை சந்திக்க நேரும். தொழில் மூலம் லாபம் கிட்டும். குறிப்பாக ஆயத்த ஆடை சார்ந்த தொழிலில் இருப்பவர்கள் சிறந்த லாபம் காண்பீர்கள். தொழில் விரிவாக்கம் குறித்து நீங்கள் கடனுக்கு விண்ணப்பித்து இருந்தால் இப்பொழுது அது உங்கள் கைக்கு வரும்.
தொழில் வல்லுனர்கள்;
நீங்கள் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். புதிய தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்வீர்கள். நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். என்ற போதிலும் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் நீங்கள் சில தடைகளையும் சந்திக்க நேரும்.
ஆரோக்கியம்;
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் சிறப்பான ஆரோக்கியத்தை தக்கவைத்துக் கொள்ள நீங்கள் உடற் பயிற்சியினை மேற்கொள்ளுங்கள். ரிஷப ராசி மூத்த வயதினர்கள் மலச்சிக்கல் போன்ற வயிற்றுப் பிரச்சனைக்கு ஆளாவார்கள். எனவே உணவில் கவனம் தேவை.
மாணவர்கள்:
மாணவர்களின் கிரகிக்கும் திறன் சிறப்பாக இருக்கும். சிறந்த முறையில் கல்வி பயில்வார்கள். உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் சிறப்பாகப் படித்து வெற்றி காண்பார்கள். ஆராய்ச்சித் துறையில் இருக்கும் மாணவர்கள் கவனம் செலுத்திப் படித்தால் தான் வெற்றி காண இயலும்.
