மேஷம் அக்டோபர் மாத ராசி பலன் 2021 | October Matha Mesham Rasi Palan 2021

மேஷம் அக்டோபர் 2021 பொதுப்பலன்கள்:
கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். இருவருக்கும் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி புரிந்துணர்வு அதிகரிக்கும். அன்னியோன்யம் கூடும். குடும்ப வாழ்வில் அமைதி இருக்கும். பிரச்சினைகள் அவ்வப்பொழுது தலை தூக்கினாலும் சமாளித்து விடுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் நல்லிணக்க உறவினை பராமரிப்பீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு அதிக பணிகள் காணப்படும். தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல்/குடும்பம்:
இளம் வயது மேஷ ராசி காதலர்களுக்கு இந்த மாதம் அனுகூலமாக உள்ளது. உங்கள் உறவில் இனிமை இருக்கும். உங்கள் காதல் உறவு திருமண பந்தமாக மாறும் வாய்ப்பு கூட உங்களில் ஒரு சிலருக்கு ஏற்படலாம். கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்வார்கள். இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சுமுகமாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
நிதிநிலை :
இந்த மாதம் உங்கள் வருமானம் பெருகும். குறிப்பாக தொழில் மூலம் வருமானம் உயரும். அதன் மூலம் உங்கள் பொருளாதார நிலையில் ஏற்றம் காண்பீர்கள். உங்கள் வரவுக்கேற்ற செலவுகளையும் நீங்கள் சந்திக்க நேரும். குழந்தைகள் நலன் கருதி செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்களில் ஓரு சிலர் வீட்டு பராமரிப்பு குறித்த செலவுகளை மேற்கொள்வீர்கள். பங்குவர்த்தக முதலீடுகள் இந்த மாதம் உங்களுக்கு லாபம் அளிக்காது.
உத்தியோகம்:
உத்தியோகத்தில் இருக்கும் மேஷ ராசி அன்பர்கள், தங்கள் பணியில் பொறுப்புகள் அதிகரிக்கக் காண்பார்கள். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பை அளிப்பார்கள். புதிய உக்திகளைக் கையாண்டு சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
தொழில்:
இந்த மாதம் கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். தொழில் மூலம் வருமானமும் லாபமும் கிட்டும். வெளி நாட்டு தொடர்புடைய தொழில் செய்ய விரும்புபவர்கள் இந்த மாதம் தங்கள் எண்ணங்கள் நிறைவேறக் காண்பார்கள். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மேஷ ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கலாம். புதிய தொழில் ஒப்பந்தங்கள் மூலம் லாபம் காண்பீர்கள்.
தொழில் நிபுணர்கள்:
தொழிலில் புதிய உக்திகளைக் கையாள்வீர்கள். புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்துவீர்கள். வாடிக்கையாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். அவர்களின் பாராட்டையும் பெறுவீர்கள். இது உங்களை உற்சாகப்படுத்தி மேலும் நீங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட தூண்டுகோலாக இருக்கும்.
ஆரோக்கியம்:
ஓய்வின்றி அதிக நேரம் பணி புரிய வேண்டிய சூழ்நிலை பதட்டத்தை உருவாக்கும். அது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களில் சிலருக்கு கழுத்து வலி, தோள்பட்டை வலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பதட்டத்தைக் குறைத்து உங்கள் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளுங்கள்.
மாணவர்கள்:
இது மாணவர்களுக்கு நல்ல பலன் தரும் மாதமாக இருக்கலாம். மாணவர்கள் மனதை ஒருமுகப் படுத்தி கவனமாகக் கல்வி பயில்வார்கள். உயர்கல்வி படிப்பவர்கள் சில தடைகளை சந்திக்க நேரிடும், ஆனால் மாத இறுதிக்குள் நிலைமை மேம்படலாம். ஆராய்ச்சி மாணவர்கள் இந்த மாதம் தங்கள் துறையில் முன்னேற்றம் காண்பார்கள். அவர்களின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் அவர்களின் முயற்சிகளில் சிறப்பாக செயல்பட உதவும்.
