மிதுனம் அக்டோபர் மாத ராசி பலன் 2021 | October Matha Mithunam Rasi Palan 2021

மிதுனம் அக்டோபர் 2021 பொதுப்பலன்கள்:
மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் சிறந்த பலன்களைப் பெறுவீர்கள். உங்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவி இருவரும் கருத்தொருமித்து வாழ்வீர்கள். தம்பதிகளுக்கு இடையே அன்னியோன்யம் கூடும். நண்பர்கள் மூலம் பண வரவு அல்லது பண உதவி கிடைக்கப் பெறும். புதிய நண்பர்கள் கிடைக்கப் பெற்று உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். புதிய நண்பர்கள் மூலம் உங்களுக்கு பண உதவி கிடைக்கும். உங்களின் பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களிடம் சுமூகமான உறவு ஏற்படும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி உறவில் சுமுகமும் நல்லிணக்க உறவும் இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் மனதிற்கு பிடித்த வரன் அமையும். திருமணமான தம்பதிகளுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும். இருவருக்கும் இடையே அன்னியோன்யம் கூடி பரஸ்பரம் கருத்தொருமித்து வாழ்வீர்கள்.
நிதி நிலை:
உங்கள் கடந்த கால சேமிப்புகளின் மூலம் நீங்கள் லாபம் பெறுவீர்கள். கையில் பணம் சரளமாகப் புழங்கும். பண வரவு கணிசமாக அதிகரிக்கும். ஊக வணிகங்களான பங்கு மற்றும் பொருள் வர்த்தகத்தில் அதிக லாபங்களை எதிர்பார்க்கலாம். பண விஷயங்கள் குறித்த அவசர முடிவுகள் எதையும் இந்த மாதம் நீங்கள் மேற்கொள்ள வேண்டாம்.
வேலை:
இந்த மாதம் பணியில் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் சாதனைகளைப் புரிவதற்கு வாய்ப்பு உள்ளது .நீங்கள் சிறப்பாகப் பணியாற்றி பணியிடத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள். பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். வெளிநாட்டில் உத்தியோகம் தேடுபவர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
தொழில்:
தொழில் சிறப்பாக இருக்கும். குறிப்பாக கட்டுமான தொழிலில் உள்ளவர்கள் பெயரும் புகழும் பெறுவார்கள். ஏற்றுமதி சம்மந்தப்பட்ட தொழில் தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நன்மை அளிக்கும். சுயதொழிலில் இருப்பவர்கள் இந்த மாதம் அனுகூலமான பலன்களைப் பெற இயலும். லாபங்கள் பெருகும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் இந்த மாதம் தங்கள் தொழில் மூலம் நல்ல லாபம் காண்பார்கள்.
தொழில் வல்லுனர்கள்:
மிதுன ராசி தொழில் வல்லுனர்கள் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தி தங்களுடைய தொழிலில் பெயரும் புகழும் பெறுவீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நன்மை அளிக்கும். தொழில் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவு எடுப்பது நன்மை பயக்கும்.
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. முறையான உடற்பயிற்சியும் சத்தான உணவும் உங்கள் ஆரோக்கியத்தைக் காக்கும். துரித உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
மாணவர்கள்:
மாணவர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டகரமான மாதமாக இருக்கும். வெளிநாடு சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றினால் வெற்றி காண்பார்கள்.
