AstroVed Menu
AstroVed
search
search

மகரம் அக்டோபர் மாத ராசி பலன் 2021 | October Matha Magaram Rasi Palan 2021

dateSeptember 3, 2021

மகரம் அக்டோபர் பொதுப்பலன்கள் 2021:

மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும். அன்னியோன்யம் பெருகும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு சற்றே அனுகூலமான நிலை இருக்கும். பணப் புழக்கம் ஆரம்ப காலக் கட்டங்களில் மந்தமாக இருக்கும் என்றாலும் நிலைமை படிப்படியாக சீராகும்.  உங்கள் செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். தொழில் செய்பவர்கள்  சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெறுவார்கள். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். நண்பர்களுடன் சேர்ந்து வெளியூர்களுக்கு சுற்றுலா செல்ல சாதகமான மாதமாக இருக்கிறது. மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.   

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள் 

காதல் / குடும்பம்:

மகர ராசி இளம் வயதினர் காதல் வயப்படக் கூடும். அதன் மூலம் மகிழ்ச்சியும் இனிமையும் கூடும். கணவன் மனைவி உறவு நல்லுறவாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவும் சீராக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி காண்பீர்கள்.

நிதி நிலை:

பொருளாதாரத்தைப் பொறுத்த வரை முதலில் மந்த நிலை இருந்தாலும்  நிலைமை சீரடையும். தங்களின் பணப்புழக்கம் படிப்படியாக அதிகரிக்கும். ஸ்திரமான நிதிநிலை ஏற்படலாம்.  பெரிய அளவில் நஷ்டங்கள் ஏதும் ஏற்படாது என்பது உங்களுக்கு ஆறுதலான விஷயமாக இருக்கும். உங்கள் சேமிப்பைக் கொண்டு உங்கள் செலவுகளை சமாளித்துக் கொள்வீர்கள். குடுமபத்தில் வசதிகள் மற்றும் ஆடம்பரம் பெருகும்.

வேலை:

உத்தியோகச் சூழலில் நீங்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பிறர் விஷயங்களில் தலையிடுவது மற்றும் பிறரைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். எனவே பேச்சில் கவனம் தேவை. கடுமையான வார்த்தைகள் அல்லது வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. இந்த மாதம் பணியிடத்தில் நீங்கள் பக்குவமாகவும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும். 

தொழில்:

சொந்தத் தொழில் செய்யும் மகர ராசி அன்பர்கள் தங்கள் தொழில் மூலம் லாபம் காண்பார்கள். நீங்கள் கூட்டுத் தொழில் புரிபவர் என்றாலும் லாபம் காண்பீர்கள். தொழில் கூட்டாளி மூலம்  நல்ல ஆதாயங்களை பெறமுடியும். பயணங்கள் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் திறமை காரணமாக நீங்கள் அங்கீகாரமும் பெறுவீர்கள். ஏற்றுமதி தொழிலில் உள்ளவர்கள் நல்ல லாபங்களை எதிர்பார்க்கலாம்.

தொழில் வல்லுனர்கள்:

தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் புதிய தொழில் வாய்ப்புகள் பெறுவார்கள். அதன் மூலம் லாபமும் முன்னேற்றமும் கிட்டும். வாடிக்கையாளர்களின் மூலம் உங்களுக்கு நற்பெயரும்  சிறந்த அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பீர்கள். சுயதொழில் மூலம் சிறந்த ஆதாயம் காண்பீர்கள். 

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிப்பாக மத்திம வயதில் இருப்பவர்கள் கழுத்து வலி மற்றும் உடல் வலி போன்ற உபாதைகளை சந்திக்க நேரும்.  சிறிய அளவிலான உபாதைகள் என்றாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது. உங்கள் உடல் நலனை காத்துக் கொள்ள அவ்வப்பொழுது மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது. 

மாணவர்கள்:

மாணவர்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி படிக்க முயல வேண்டும். ஆராய்ச்சி கல்வியில் படிக்கும் மாணவர்கள் தங்களது ஆராய்ச்சியில் வெற்றி காண்பார்கள்.  மாணவர்கள் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். 


banner

Leave a Reply