AstroVed Menu
AstroVed
search
search
x

November Matha Kanni Rasi Palan 2021

dateOctober 19, 2021

கன்னி நவம்பர் 2021 பொதுப்பலன்கள்:

கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் உங்கள் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவு செய்வீர்கள். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும்.  உங்கள் மனதில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். கன்னி ராசி இளம் காதலர்கள் தங்கள் காதல் உறவில் இனிமை காண்பார்கள். உங்கள் சேமிப்பு மற்றும் முதலீடுகள் மூலம் இந்த மாதம் ஆதாயம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது அதிர்ஷ்டகரமான மாதமாக இருக்கும். சிறிய அளவிலான உடல் உபாதைகளைத் தவிர்த்து  வேறு எந்த ஆரோக்கிய பாதிப்புகளும் இந்த மாதம் உங்களை அணுகாது. மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.  

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள் 

காதல் / குடும்பம்:

குடும்பத்தில் ஒற்றுமை குடிகொள்ளும். புரிந்துணர்வு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே இது வரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும். தம்பதிகளுக்கு இடையே அன்னியோன்யம் கூடும். உங்களின் தரமான நேரத்தை குடும்பத்திற்கென ஒதுக்கி அவர்களுடன் கலந்து உறவாடுவதன் மூலம் அவர்கள் மனதில் இடம் பிடிப்பீர்கள். மேலும்  குடும்ப உறுப்பினர்களிடம் உங்கள் உறவு மேம்படும். 

குடும்ப உறவுகள் மேம்பட குரு பூஜை

நிதி நிலை:

இந்த மாதம் நீங்கள் உங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள உங்கள் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்துவீர்கள். அதில் வெற்றியும் காண்பீர்கள். இதனால் உங்கள் பொருளாதார நிலையில் ஏற்றம் காண்பீர்கள். உங்கள் கையில் அதிகமாகப் பணம் புரளும். புதிய முதலீடுகளுக்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்வீர்கள். அதன் மூலம் லாபமும் ஆதாயமும் பெறுவீர்கள். 

நிதிநிலையில் உயர்வு பெற ராகு பூஜை

வேலை:

இந்த மாதம் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். உத்தியோகத்தில் வெற்றி வாய்ப்பு உங்களை நாடி வரும். வேலை நிமித்தமாக நீங்கள் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியூர்ப் பயணங்களின் போது சில அசௌகரியங்களை நீங்கள் சந்திக்க நேரும்.  அரசுத் துறையில் பணி புரிபவர்கள் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். குறிப்பாக சக பணியாளர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். தேவையற்ற பேச்சுக்கள் மற்றும் வாக்கு வாதங்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சில அசௌகரியங்களை சந்திக்க நேரும். 

தொழில்:

தொழில் செய்யும் கன்னி ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் தொழில் சிறப்பாக நடைபெறக் காண்பார்கள்.  ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்துபவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பதுடன் தன நிலையில் ஏற்றம் மிகுந்து காணப்படும். உணவு சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களும் தொழிலில் வளர்ச்சியும் முன்னேற்றமும் காண்பார்கள். அதிக வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெற்று லாபங்களை சம்பாதிப்பார்கள்.

தொழில் வல்லுனர்கள்:

கன்னி ராசி தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். அரசுத் துறை சார்ந்து தொழில் செய்பவர்கள் இந்த மாதம் சிறந்த முன்னேற்றம் காண்பீர்கள். அலுவலகத்தில் தொழில் வல்லுனர்களாகப் பணியாற்றுபவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். நீங்கள் பணியிடத்தில்   தலைமைப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களின் முழு ஒத்துழைப்பை அளிப்பார்கள்.  

உத்தியோகம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்பட சனி பூஜை

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் நன்றாக இருக்கும் என்றாலும் மனதில் சிறிது பய உணர்வு இருக்கும். பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் வருவதற்கு வாய்ப்புகள் இலை. உணவே மருந்து மருந்தே உணவு என்பதை கருத்தில் கொண்டு உங்கள் உணவு முறையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தலை மற்றும் கால் வலி வர வாய்ப்பு உள்ளது. ஆரோக்கிய உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள இயலும்.  

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை

மாணவர்கள்:

பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்துவதில் சில சிரமங்களை சந்திப்பார்கள். என்றாலும் கவனச் சிதறல் போன்ற தடைகளையும் தாண்டி கல்வியில் முன்னேறுவார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் பல புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு தனது ஆராய்ச்சியில் வெற்றி பெறுவார்கள்.  

கல்வியில் மேன்மை உண்டாக சரஸ்வதி பூஜை

சுப நாட்கள்: 

8, 10, 11, 15, 21, 22, 25, 29. 

அசுப நாட்கள்:

4, 5, 16, 17, 18, 19, 23, 24.


banner

Leave a Reply