AstroVed Menu
AstroVed
search
search
x

November Matha Simmam Rasi Palan 2021

dateOctober 19, 2021

சிம்மம் நவம்பர் 2021 பொதுப்பலன்கள்:

இந்த மாதம் நீங்கள் வழக்கத்தை விட அதிக பணிகளை மேற்கொள்ள நேரும். இதனால் குடும்பத்திற்கென அதிக நேரம் ஒதுக்க இயலாமல் போகலாம். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு தக்க துணை தேட உகந்த மாதம் ஆகும். விருந்து விசேஷங்கள் என பணம் செலவு செய்ய  நேரும். சொத்து அல்லது பத்திரம் சம்பந்தமான சட்டச் சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் அவை இந்த மாதம் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். பள்ளிக் கல்வி மாணவர்கள் மனதில் பதட்ட நிலை இருக்கும். மாணவர்கள் அதிக முயற்சியுடனும் கவனமுடனும் படிக்க வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.  

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள் 

காதல் / குடும்பம்:

காதல் உறவில் உள்ளவர்கள் தங்கள் காதல் துணையையும் அவரின் உணர்வுகளையும் புரிந்து நடந்து கொள்வதன் மூலம் நல்லுறவைப் பேண இயலும். திருமணமான தம்பதிகள் இடையே ஒற்றுமை நீடிக்கும். அதிக பணிகள் காரணமாக உங்களால் குடும்பத்திற்கென அதிக நேரத்தை ஒதுக்க இயlலாமல் போகலாம்.     மூத்த உடன்பிறந்தவர்களுடன் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அது பெரிய அளவில் பாதிப்பை அளிக்காது.

குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிக்க செவ்வாய் பூஜை

நிதி நிலை:

இந்த மாதம் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்காக சேமித்து வைத்திருக்கும் பணத்தை நீங்கள் செலவு செய்வீர்கள்.  வீடு மராமத்து பணிக்காக செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் காது குத்து, மஞ்சள் நீராட்டு விழா, போன்ற சுப காரியங்களுக்காக விரயங்கள் ஏற்படலாம். சுப விரயங்கள் என்றாலும் பணம் பற்றிய சில பதட்ட நிலை இருக்கும். பிறருக்கு கடன் அளிக்கும் விஷயத்தில் கவனமாக இருக்கவும். கடன் அளிப்பதை தவிர்ப்பது நல்லது.  

நிதி நிலையில் ஏற்றம் காண கேது பூஜை

வேலை:

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும். அரசுத் துறையில் பணி புரிபவர்கள் தங்களின் சிறப்பான செயல்திறன் காரணமாக பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். வெளிநாடுகளில் வேலை தேடுபவர்கள் தங்களின் எண்ணங்கள் நிறைவேறக் காண்பார்கள். வங்கித் துறையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் வேலை கிட்டும்.

தொழில்:

தொழில் செய்யும் சிம்ம ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் தொழிலில் வழக்கத்தை விட சிறிது அதிக போட்டியாளர்களை சந்திப்பார்கள். என்றாலும் சூழ்நிலையை சமாளிக்கவும் செய்வார்கள். ஒளி ஊடங்களில் தொழில் செய்பவர் என்றால் நீங்கள் உறுதியான வெற்றியையும் நல்ல லாபத்தையும் எதிர்பார்க்கலாம். தொழில் தொடர்பான புதிய முதலீடுகள் எதையும் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. முதலீடு மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்துச் செயல்பட வேண்டியது அவசியம்  கூட்டுத்தொழில் சிறப்பாக இருக்கும். 

தொழில் வல்லுனர்கள்:

இந்த மாதம் வழக்கத்தை விட பணிகள் அதிகமாக இருக்கும். பொறுப்புகள் கூடும்.  குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க வேண்டிய பரபரப்பு சூழ்நிலை இருக்கும். என்றாலும் நீங்கள் சிறந்த முறையில் சூழ்நிலையைக் கையாள்வீர்கள்.  சிறந்த முன்னேற்றமும் லாபமும் ஆதாயமும் காண்பீர்கள். தொழில் நிமித்தமாக வெளி நாடு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்தப் பயணங்கள் மூலம் நீங்கள் லாபம் பெற்று தொழிலில் வெற்றியும் பெறுவீர்கள். 

உத்தியோகம் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு அஷ்ட லக்ஷ்மி பூஜை

ஆரோக்கியம்:

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் ஓரளவு சீராக இருக்கும். பெரிய அளவிலான உபாதைகள் உங்களை வருத்தாது. உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டும்.  யோகா மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் காத்துக்  கொள்ளலாம். உங்கள் தாயின் உடல் நலனில் அக்கறை தேவை. 

உடல் ஆரோக்கியத்திற்கு புதன் பூஜை

மாணவர்கள்:

சிம்ம ராசி மாணவ மாணவியர்கள் இந்த மாதம் சிறந்த முறையில் கல்வி பயில்வார்கள். சட்டம் மற்றும் ஊடகம் சம்பந்தப்பட்ட துறைகளில் பயிலும்  மாணவ மாணவியர்கள் தங்கள் எதிர்கால தொழிலில் முன்னேற்றம் காணும் வகையில் பல விஷயங்களைப் பயின்று சிறப்புற செயலாற்றி படிப்பில் வெற்றியும் காண்பார்கள். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் கவனம் சிதறும் வாய்ப்புகள் உள்ளது. மனதை ஒருமுகப்படுத்திப் பயில வேண்டியது அவசியம். 

கல்வியில் ஏற்றம் உண்டாக துர்கா பூஜை

சுப நாட்கள்: 

08, 10, 21, 22, 25, 29. 

அசுப நாட்கள்:

4, 5, 14, 15, 16, 23, 24.


banner

Leave a Reply