AstroVed Menu
AstroVed
search
search

மேஷம் நவம்பர் மாத ராசி பலன் 2021 | November Matha Mesham Rasi Palan 2021

dateOctober 19, 2021

மேஷம் நவம்பர் 2021 பொதுப்பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே! கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.  மூத்தோர் சொல் கேட்டல் நன்று என்பதற்கிணங்க நீங்கள் வீட்டில் இருக்கும் மூத்தவர்களின்  சொல்படி கேட்டு நடப்பது உங்களுக்கு நன்மை அளிக்கும்.  இந்த மாதம் உங்களுக்கான குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் உறவு சிறப்பாக இருக்கும் என்றாலும் உடன் பிறந்தவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.  நண்பர்களுடன் இணக்கமான உறவை மேற்கொள்வீர்கள். தொழில் செய்பவர்கள் குறிப்பாக பங்கு வர்த்தகத் தொழில் செய்பவர்கள் இந்த மாதம் அதிக லாபம் காண்பார்கள்.  மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனமுடன் படிக்க வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.  

உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள் 

காதல் / குடும்பம்:

குடும்ப உறவுகள் உங்களுக்கு இந்த மாதம் சுமுகமாக இருக்கும். என்றாலும் உங்கள் உடன் பிறந்தவர்களுடன் நீங்கள் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க இயலும். வயதில் மூத்த  உறுப்பினர்கள் வீட்டில் இருந்தால் அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு முக்கிய முடிவை எடுங்கள். அது உங்களுக்கு நன்மை அளிக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். இருவருக்கும் இடையே சுமுகமான உறவு காணப்படும். குடும்பத்தில் அவ்வப்போது சில பிரச்சினைகள் தலை தூக்க வாய்ப்பு உள்ளது. சாதுரியமாகச் செயல்படுவதன் மூலம் அவற்றை தீர்த்துக் கொள்ள இயலும். 

குடும்ப உறவுகள் மேம்பட குரு பூஜை

நிதி நிலை:

இந்த மாதம் உங்கள் நிதிநிலை வரவேற்கத்தக்க வகையில் இருக்கும். குறிப்பாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் இந்த மாதம் சிறந்த வருமானம் மற்றும் லாபத்தைப் பெறுவார்கள். உங்கள் நிதிநிலை முன்னேற்றம் காணும். பிட் காயின் மற்றும் போரெக்ஸ் டிரேடிங் முதலீடுகள் மூலம்  நல்ல லாபங்களை  எதிர்பார்க்கலாம். கையில் சரளமன பணப்புழக்கம் இருக்கும். சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது சிறப்பு. பயணம் தொடர்பான செலவீனங்கள் ஏற்படலாம். 

தன வருவாய் அதிகரிக்க சுக்கிரன் பூஜை

வேலை:

நீங்கள் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணி புரிபவர் என்றால் இந்த மாதம் நீங்கள் உங்கள் உத்தியோகம் மூலம் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். மருத்துவத் துறையில் பணி புரிபவர்களுக்கும் இது பொருந்தும். நல்ல மனிதர்களின் நட்பு மூலம் உத்தியோகத்தில் ஆதாயங்களைப் பெறுவீர்கள். நீங்கள் அரசுத்துறையில் பணியாற்றுபவர் என்றால் பணியிடத்தில்  மேலதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். வாக்குவாதத்தை தவிர்த்து அவர்களோடு அனுசரித்து நடந்து கொள்வது நன்மை பயக்கும். 

தொழில்:

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு இது சிறப்பான காலமாக இருக்கும். தனியாகத் தொழில் செய்பவர் என்றாலும் சரி கூட்டாகத்  தொழில் செய்பவர் என்றாலும் உங்கள் தொழில் மூலம் சிறந்த லாபங்களைப் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காண்பீர்கள். கூட்டுத் தொழில் மூலம் நல்ல லாபங்கள் கிட்டும் என்றாலும் கூட்டாளிகளுடன் சில கருத்து வேறுபாடுகளும் அதன் காரணமாக மோதல்களும் ஏற்பட வாய்ப்புண்டு. 

தொழில் வல்லுனர்கள்:

தொழில் வல்லுனர்களின் பணிகள் இந்த மாதம் அதிகமாக இருக்கும். பொறுப்புகள் அதிக அளவில் இருக்கும்.  நீங்கள் கடினமாகப் பணி புரிவீர்கள். உங்களின் கடினமான உழைப்பு  மேலதிகாரிகளிடம் உங்கள் வேலைக்கு உரிய  அங்கீகாரத்தை பெற்று தரும். பொறியியல் மற்றும் நீதித்துறையில் பணிபுரிபவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். பணிச்சுமை அதிகரித்து காணப்படும். நீங்கள் தகவல் தொழில் நுட்பத்துறையில் இருப்பவர் எனில் உங்களுக்கு  வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். 

உத்தியோகம் மற்றும் தொழிலில் மேன்மைக்கு சூரியன் பூஜை

ஆரோக்கியம்:

இந்த மாதம் அதிக பணிச்சுமை காரணமாக அஜீரனம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள்  ஏற்பட வாய்ப்புள்ளது. தியானம் மற்றும் உடற்பயிற்சி மூலம் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும். பெற்றோரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். 

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு முருகன் பூஜை

மாணவர்கள்:

பள்ளிக்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக இருக்கும். விடாமுயற்சியுடன் கல்வி பயின்று வெற்றி காண்பார்கள்.  ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவர்கள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் ஆராய்ச்சியில் வெற்றி காண்பார்கள். உயர்கல்வியில் படிக்கும் மாணவர்கள் மனதை ஒருமுகப் படுத்துவதில் சில சிரமங்களைச் சந்திப்பார்கள். கல்வியில் கவனச்சிதறல் ஏற்படலாம் கவனம் தேவை. பேராசிரியர்களின் வழிகாட்டுதல்களைப் பின் பற்றி நடப்பதன் மூலம் கல்வியில் ஏற்றம் காணலாம்.

கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை

சுப நாட்கள்: 

1, 11, 21, 24, 25, 29.

அசுப நாட்கள்:

4, 5, 6, 7, 9, 23. 


banner

Leave a Reply