AstroVed Menu
AstroVed
search
search

நீங்கள் ஆசைப்பட்டதை அடைய நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி காண இந்த வெற்றிலை பரிகாரத்தை செய்யுங்கள்

dateJuly 26, 2023

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் இருக்கும் நமது வாழ்வில் தேடல் தான் நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. இந்த தேடலுக்கு நமது ஆசையே கரணம். ஆசை தான் துன்பத்திற்கு காரணம் என்று கூறினார் கௌதம புத்தர். என்றாலும் ஆசைகள் இல்லாத மனிதர்களே இல்லை என்று கூறலாம். நமது ஆசையை பற்றி ஒரு நிகழ்வை இப்படி கூறுவார்கள். கால்கள் இல்லாதவனுக்கு கால்கள் வேண்டும் என்று ஆசை. கால்கள் வந்த பின் வண்டி ஓட்ட வேண்டும் என்று ஆசை வண்டி வந்த பின் வான ஊர்தியில் செல்ல வேண்டும் என்று ஆசை. இப்படி நமது ஆசைகள் ஒன்றன் பின் ஒன்றாக மனதில் ஊர்வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றது. நமது ஆசைகள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் நமது முயற்சிகளின் மூலம் அவற்றை நிச்சயமாக நிறைவேற்றிக் கொள்ளலாம்.

மனதில் ஆசைகளை வளர்த்துக் கொள்வதோடு மட்டும் நில்லாமல் அதனை அடைவதற்கான முயற்சியும் தேவைப்படுகிறது. ஆனால் நமது அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறுகிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.  முயற்சிக்கும் வெற்றிக்கும் இடையில் எத்தனை தடைகள், தாமதங்கள் நாம் கடக்க வேண்டியிருக்கிறது. வெற்றி என்பது அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவது இல்லை. தடைகற்களை படிக்கற்களாக்கி வெற்றியை அடைய வேண்டும். விடா முயற்சி இருந்தால் வெற்றி பெறலாம். என்றாலும் சிலருக்கு முயற்சிகளில் தொடர் தோல்வி வந்து கொண்டே இருக்கும்.

இவற்றை எல்லாம் தாண்டி முயற்சிகளில் வெற்றி பெற வெற்றிலை பரிகாரம் ஒன்றை பார்க்கலாம். வெற்றிலையை  நாகவல்லி என்று கூறுவார்கள். இதனை மகாலட்சுமியின் அம்சமாகக் கூட பார்ப்பார்கள். இதில் மருத்துவ குணம் அதிகம் உள்ளது. தோஷம் நீக்கும் வெற்றிலையை நுனி மற்றும் காம்பு நீக்கி பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் ஒரு காரியத்திற்கான முயற்சிக்கு வெளியில் செல்லும் போது வெற்றிலையில் காம்பு நீக்கி சிறிது வெண்கடுகு வைத்து அதனை மஞ்சள் நூல் அல்லது சிகப்பு நூல் கட்டி உங்கள் பையில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் முயற்சி வெற்றி அடைந்தவுடன் அதனை நெருப்பில் போட்டு விட வேண்டும்.  இல்லாவிடில் யாருடைய காலும் படாத வண்ணம் மரத்தின் அடியில் போட்டு விட வேண்டும்.

நினைத்தது நிறைவேற ஏஞ்சல் எண் பரிகாரம்

எண்களுக்கும் நமது எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நீ எதை நினைக்கிறாயே அதுவே நடக்கும் என்ற சொலவடை உண்டு. நமது எண்ணங்கள் தான் செயல்களாக மாறும். நாம் நினைத்ததை அடைய தொடர்ந்து அதனைப் பற்றிய எண்ணங்களை நமது மனதில் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். உதாரணமாக நமக்கு வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் அதைப் பற்றியே நினைக்க வேண்டும். கற்பனையில் வீடு வாங்கியது போல நினைப்பது மட்டும் இன்றி அந்த வீட்டில் வாழ்வது போலவும் பாவனை செய்து கொள்ள வேண்டும். கற்பனை பாவனையாக மாற்றிக் கொள்ளும் போது இந்த பிரபஞ்சம் நமக்கு அதனை வழங்க தயாராகி விடுகிறது. இந்த கற்பனை பாவனை உணர்ச்சிக்கு மேலும் சக்தியூட்ட எண் குறியீட்டை நாம் பயன்படுத்தலாம்.

 

நாம் மேலே கூறியது போல எண்ணங்களுக்கும் எண்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வாருங்கள் இப்பொழுது நினைத்து நடக்க எந்த எண் குறியீடு என்று பார்ப்போம். இதனை ஆங்கிலத்தில் ஏஞ்சல் நம்பர் என்று கூறுவார்கள். அந்த எண் 777. ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். ஒரு வெள்ளைத் தாளில் இந்த எண்ணை எழுதி உங்கள் ஆசைகளை மனதில் எண்ணுங்கள். உங்கள் கற்பனை மற்றும் பாவனையை ஓட விடுங்கள். உங்கள் ஆசையை இந்த பிரபஞ்சம் ஏற்றுக் கொள்ளும். உங்களுக்கு வேண்டியது கிட்டும். நீங்கள் நினைத்தது நடக்கும்.

 


banner

Leave a Reply