இந்த பொருட்களை மறந்தும் கூட பிறருக்கு தானமாக கொடுத்து விடாதீர்கள்

நமது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை தானமாக அளிக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. அதனைக் கூட எப்படி தர வேண்டும் என்றால் வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூட தெரியக் கூடாதாம். அதாவது நாம் தானம் அளிப்பதைப் பற்றி பெருமையாக நினைத்து பிறரிடம் கூறிக் கொண்டு இருக்கக் கூடாது. அவ்வாறு அளிக்கும் தானத்தின் பலன் பல மடங்கு கூடும் என்றாலும் பலனை எதிர்பார்த்து தானம் அளித்தல் கூடாது.
தானம் அளிப்பதன் மூலம் நமது கர்ம வினைகள் தீருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. தானம் அளிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு பலன்கள் உண்டு. தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று கூறுவார்கள். அன்னம் ஒன்று தான் நாம் அளித்தால் பிறருக்கு மன நிறைவை அளிக்கும். போதும் என்ற சொல்ல வைக்கும். அர்ப்பணிப்பு உணர்வோடு அளிக்கும் தானம் பல மடங்கு பலன்களை அளிக்கும்.
தானம் செய்வதன் மூலம் நமது தீய வினைகள் அகலும். சுபிட்சமான வாழ்வு கிட்டும். நல்ல பொருட்களை மட்டுமே நாம் தானமாக அளிக்க வேண்டும். எந்த வகை தானமாக இருந்தாலும் அது புதிய பொருளாக இருக்க வேண்டும். அதே போல தானம் பெறுபவர்களும் குறை சொல்லாமல் அதனை பெற்றுக் கொள்ள வேண்டும்.
நமக்கு பயன்படாது என்று நினைக்கும் பொருட்களை நாம் பிறருக்கு தானமாக வழங்குதல் கூடாது. எதையெல்லாம் தானம் அளிக்கக் கூடாது என்பதை இந்தப் பதிவில் காண்போம் வாருங்கள்.
நாம் பயன்படுத்தும் விளக்கை தானமாகக் கொடுக்கக் கூடாது.லட்சுமி கடாட்சம் நம்மை விட்டு நீங்கி விடும்.
வீட்டில் வைத்து பூஜை செய்யும் படத்தை பிறருக்கு தானமாக அளிக்கக் கூடாது.
பிளாஸ்டிக் பொருட்களை தானமாக வழங்கக் கூடாது. வளர்ச்சி தடைபடும்.
வீட்டில் பயன்படுத்திய பாத்திரங்கள் கிழிந்த துணி, உடைந்த பொருட்கள் போன்றவற்றை பிறருக்கு தானமாக அளிக்கக் கூடாது. தரித்திரம் வந்து சேரும்.
பயன்படுத்திய சமையல் எண்ணெயை பிறருக்கு தானமாக அளித்தல் கூடாது. இது சனி பகவானின் கோபத்தைத் தூண்டும்.
வீடு கூட்டும் துடைப்பத்தை தானமாக அளித்தல் கூடாது. திருமகள் நம்மை விட்டு நீங்கி விடுவாள்.
கூர்மையான பொருட்களை தானம் அளித்தல் கூடாது.
உப்பு உரை மோர் இவற்றை பொழுது சாய்ந்த பிறகு பிறருக்கு கொடுக்கக் கூடாது
கெட்டுப்போன உணவை பிறருக்கு அளித்தல் கூடாது
