AstroVed Menu
AstroVed
search
search

உங்கள் மனதில் நினைத்த வேலை கிடைக்க இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்யுங்கள். உங்கள் முயற்சிக்கு நிச்சயம் பலன் கிட்டும்.

dateJuly 26, 2023

முற்காலத்தில் எல்லாம் உத்தியோகம் புருஷ லட்சணம் என்பார்கள். ஏனெனில் அக்காலத்தில் ஆண்கள் மட்டும் தான் வேலைக்குச் சென்று கொண்டு இருந்தார்கள். இந்த நவீன யுகத்தில் பெண்களும் எல்லாத் துறைகளிலும் தங்கள் கால்களை பதித்து விட்டனர். அவர்கள் வேலைக்கு செல்லாத துறையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா வேலைகளையும் அவர்களும் சிறப்புற செய்கிறார்கள். இதன் விளைவாக இன்று வேலையில் போட்டி அதிகமாகிவிட்டது என்று கூறலாம். ஆண்களும் பெண்களும் சேர்ந்து வேலை தேடும் காலமாக இந்தக் காலம் அமைந்துள்ளது. எனவே அதிக சமயங்களில் வேலை கிடைப்பது கடினமாகி வருகிறது.

நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற்று இருந்தாலும் ஒரு சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும் அதிர்ஷ்டம் இருப்பதில்லை. ஒரு சிலருக்கு தாங்கள் படித்த துறை வேறு மற்றும் வேலை பார்க்கும் துறை வேறு என்றாகி விட்டது கண்டிப்பாக வேலை பார்க்க வேண்டும் என்ற கட்டாயத்தில் கிடைத்த வேலை போதும் என்று அதைப் பார்க்கிறவர்கள் தான் இன்று அதிகம் இருக்கிறார்கள்.

ஒரு சிலர் தங்கள் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரை காத்திருந்து அதன் பிறகு வேலைக்கு செல்கிறார்கள். ஒரு சிலர் தாங்கள் நினத்த வேலை தான் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்.

இந்த மாதிரி சூழ்நிலையில் நமது மனதில் நினைத்த மாதிரி வேலை கிடைக்க எளிய தாந்திரீக பரிகாரங்களைப் பற்றிப் பார்ப்போம். இவற்றுள் ஏதாவது ஒன்றை நம்பிக்கையுடன் செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும்.  

முதலில் எண் குறியீடு ஒன்றைக் காண்போம் ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு அலைவரிசை உண்டு. எண்களை நாம் பயன்படுத்தும் போது அதன் அலைவரிசை நம்முள் தாக்கத்தை ஏற்படுத்தும். வேலை கிடைக்க எழுத வேண்டிய எண் 493151 864 1491 இந்த குறியீட்டை ஒரு காகிதத்தில் எழுதி  உங்கள்   பார்வை அதிகம் படும் இடத்தில் இந்த குறியீட்டை நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். சொல்லும் போது ஒவ்வொரு எண்ணாக சொல்ல வேண்டும். அதாவது four nine three one five one (space) eight six four (space) one four nine one. இந்த எண்களை தினமும் பார்ப்பதன் மூலம் அல்லது சொல்வதன் மூலம் உங்களுக்கு அதன் நேர்மறை அலைவதிர்கள் கிட்டும். எனவே உங்கள் வேலைக்கான முயற்சி பலிதம் ஆகும்.

உங்கள் குல தெய்வம் கோவிலுக்குச் சென்று தெய்வத்தை வணங்குங்கள். பிறகு உங்கள் கட்டை விரல் மற்றும் நடு விரலைப் பயன்படுத்தி கோவில் மண் எடுத்து நல்ல வேலை, நினைத்தவேலை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்து அதனை வாயில் போட்டுக் கொள்ளுங்கள். இதனை சனிக்கிழமை செய்வது நன்று.

பெண்கள்  வேலைக்கான நேர்முகத் தேர்விற்கு செல்லும் போது 8 சங்குப் பூவை தலையில் வைத்துக் கொண்டு செல்வதன் மூலம் நினைத்த வேலை கிடைக்கும்.

கண்டிப்பாக நினைத்த வேலையே வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு காகிதம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எள்ளை பரப்பிக் கொள்ளுங்கள். பிறகு அதில் உங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் நிறுவனத்தின் பெயர் அல்லது அதன் முதலாளியின் பெயர் அல்லது உங்கள் பதவியின் பெயர் எழுதி பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த எள்ளை சாப்பிட்டு விடுங்கள். இதனை சனிக்கிழமை அன்று செய்வது நல்லது. இரவு  8 முதல் 9 மணிக்குள் செய்வது நல்ல பலனை பெற்றுத் தரும்.

வேலை சனி சம்பந்தப்பட்டது  என்பதால் நீங்கள் வேலை கிடைக்கும் வரை அதாவது இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது நல்லெண்ணெயை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்பொழுது தான் இந்தப் பரிகாரம் பலன் கொடுக்கும்.

உங்கள் முயற்சியுடன் மேலே சொன்ன பரிகாரத்தையும் செய்யும் பொழுது நீங்கள் மனதில் நினைத்த வேலை கிடைக்கப் பெறுவீர்கள்.


banner

Leave a Reply