பொதுப் பலன்கள் ரிஷப ராசி அன்பர்களே! உற்சாகத்துடன் தயாராகுங்கள் ! இந்தப் புத்தாண்டு மன நிறைவு மற்றும் திருப்தியை வளர்த்துக் கொள்ள உகந்த நல்ல வருடம். நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களையும் செயலாற்றுவதற்கு ஏற்ற வருடம்.இந்த புத்தாண்டு உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் , எதிரிகளிடம் வெற்றி, நல்ல உணவு, நல்ல சம்பாத்தியம், நல்ல சமுக அந்தஸ்து என பல நல்ல பலன்களை அள்ளித் தர வருகின்றது. உங்கள் அனைத்து திறமைகளும் வெளிப்படுத்தும் ஆண்டாக இந்த ஆண்டு அமைந்துள்ளது. தீவிர மற்றும் இலக்கற்ற பயணம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. உடன் பிறந்தோர் மற்றும் அண்டை அயலாருடனான உறவு முறை அற்ப விஷயங்களினால் பாதிக்கப்படும். எனினும் பொருள் மற்றும் ஆடம்பர நாட்டம் அதிகரிக்கும். அதன் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். ரிஷப ராசி அன்பர்களில் சிலருக்கு ஆன்மீக குருவை சந்திக்கும் வாய்ப்ப்பு கிடைக்கும். குருவருளும் கடவுள் அருளும் கிட்டும். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தந்தையாரின் உடல் நிலை கவலை அளிக்கும். குழந்தைகளை தவிர்ப்பதன் மூலம் அவர்கள் அன்புக்கு ஏங்குவார்கள். இந்த ஆண்டு குழந்தைகளுக்கென சிறிது நேரம் ஒதுக்க வேண்டிய ஆண்டு ஆகும். குடும்பத்துடன் பயணம் அல்லது புனித யாத்திரை செல்ல நேரிடலாம்.

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீ மஹே தன்னோ ருத்ர ப்ரசோதயாத்என்ற சிவ மந்திரத்தை 108 முறை சொல்லவும் சனீஸ்வர ஸ்லோகத்தை 108 முறை சொல்லவும் ஓம் சநேச்சராய நமஹ அல்லது ஓம் நீலாம்பர விபூஷனாய நமஹ அனுகூலமான மாதங்கள் : ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர் அனுகூலமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே, ஜூன் மற்றும் நவம்பர் (இந்த மாதங்களில் உங்கள் இஷ்ட தெய்வத்தின் வழிபாடு மற்றும் பரிந்துரைக்கப்பட்ட பரிகாரங்களைச் செய்யவும்) இந்த புத்தாண்டில் உங்கள் அனைத்து விருப்பங்கள் மற்றும் இலட்சியங்கள் நிறைவேறட்டும் AstroVed ல் இருக்கும் அனைவரும் உங்களுக்கு நல்வாழ்த்து தெரிவிகின்றனர்

Leave a Reply