பொதுப் பலன் : மேஷ ராசி (Mesha Rasi) அன்பர்களே! இந்த புத்தாண்டின் ஆரம்பம் உங்களுக்கு மிதமான பலன்களே தரும் வகையில் உள்ளதென்றாலும் புதிய நண்பர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தை விரிவு படுத்தும் வாய்புக்களை அது கொண்டு வரும். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் குரு பகவான் துலா ராசியான ஏழாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் உங்கள் வாழ்க்கையில் புதிய கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள். உங்கள் நட்பு வட்டாரம் விரிவடையும் மற்றும் அவர்களிடையே உங்கள் புகழ் ஓங்கி வளரும். நண்பர்கள் மூலம் பலன் அடைவீர்கள். தொலை தூரம் மற்றும் வெளி நாட்டில் வாழும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. புதிய சொத்து மற்றும் வாகனத்தின் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புனித ஆன்மீக யாத்திரை உங்கள் மனதிற்கு ஆறுதல் மற்றும் பாதுகாப்பு தரும். நீங்கள் எல்லோரிடமும் நல்ல உறவு முறைகளை பராமரிப்பீர்கள். ஆண்டின் முதல் பாதியில் சுகாதரச் செலவுகள் இருக்கும். தாய் மற்றும் துனையாரின் உடல் நிலை பற்றிய கவலை இருக்கும். பூர்விக சொத்து பிரச்சனைகளுக்கான தீர்வுகள் கிடைப்பது கடினம். ஆண்டின் பிற்பகுதியில் ஆரோக்கியம் மற்றும் பண விஷயங்கள் தீர்வுக்கு வரும். பொறுமை மற்றும் விடாமுயற்சி தடைகளை நீக்கி உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தரும்.


Leave a Reply