பொதுப்பலன்கள்
உங்கள் ராசியிலிருந்து 5 ஆம் இடத்தில் குருவின் சஞ்சாரம் இருப்பதினால் இந்த புத்தாண்டு குறிப்பாக ஆண்டின் முதல் பாதி உங்களுக்கு மிகவும் சாதகமாகவும் நம்பிக்கை தரக்கூடியதாகவும் உள்ளது. பல வகைகளில் பண வரவு இருக்கும். இந்தப் புத்தாண்டில் பண வரவை அனுகூலமான முறையில் பெறவும் கையாளவும் முடியும். சமூகத்தில் உங்கள் புகழ் ஓங்கி இருக்கும். குடும்பத்தாருடனான உறவு நல்ல முறையில் இருக்கும். வெளியிடங்களுக்கு பயணம் செய்வீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனான உறவு திருப்திகரமாக இருக்கும்.ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீக அன்பர்களுடனான நல்ல நட்பை நீங்கள் பெற நினைத்தால் அது சாத்தியமாகும். இனிய பயனுள்ள பயணங்கள் ஏற்படும். புண்ணிய ஸ்தலங்கள் அல்லது இயற்கை வனப்பு மிகுந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது.ஆன்மீக செயல்களின் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும். ஆன்மீக குருமார்களின் ஆசி கிடைக்கும். உங்களால் நடத்தப்படும் சமூக நிகழ்ச்சிகளில் புகழ் பெற்ற மனிதர்கள் கலந்து கொள்வார்கள். பல்வேறு வகையான மக்கள் மத்தியில் பல்வேறு சமூக நடவடிக்கைகளில் ஈடுபடும் மகிழ்ச்சியும் மன திருப்தியும் நீங்கள் காணலாம். அதனால் உற்சாகமாக இருப்பீர்கள்.அக்டோபர் 2018 ல் ஏற்படும் குரு மாற்றத்திற்கு பிறகு உங்கள் உடல் நல ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
தொழில் / உத்தியோகம்
உங்கள் ராசியிலிருந்து 5 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவானால் உங்கள் திட்டங்கள் மற்றும் படைப்பாற்றல் வலுப்படும். அவரது ஆசியால் நீங்கள் தொழிலில் ஈடுபட்டு வளர்ச்சி காண்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்தப் புத்தாண்டின் முதல் பாதியில் அதிக லாபத்தை ஈட்டும் தைரியம் மற்றும் உறுதிப்பாடு இருக்கும். தொழில் விரிவாக்கம் அல்லது பெரிய அளவிலான முதலீடுகளுக்கான வாய்ப்புகள் அனுகூலமாகவும் செழிப்பை உருவாக்குவதற்கு உகந்ததாகவும் இருக்கும். ராசியிலிருந்து 7 ஆம் இடமான தனுசில் சனி பகவான் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்தப் புத்தாண்டு முழுவதும் சுமுகமான நிலையில் இருக்கும். புதிய தொடர்புகளின் மூலம் பல உத்தியோக வாய்ப்புகள் கிட்டும். சிலருக்கு வெளி நாட்டு வேலைவாய்ப்பு அமையும். மே 2108 க்குப் பிறகு பயண அலைச்சல்கள் இருக்கும்.
காதல் / உறவுகள்
குருவின் சஞ்சாரம் காரணாமாக 2018 ஆம் ஆண்டின் முதல் பாதியில் காதல் உறவில் சில குறைபாடுகளால் உங்கள் மகிழ்ச்சி குறையலாம். குரு பகவான் தொழில் மற்றும் உத்தியோகத்திற்கு நற்பலன் அளிப்பார். ஆனால் காதல் விவகாரங்களில் நன்மை கிட்டாது. மே 2018க்குப் பிறகு காதலர்கள் மற்றும் புது மனத் தம்பதியரின் வாழ்வில் மகிழ்ச்சி காணப்படும். உணர்வுகளை நல்ல முறையில் பகிர்ந்து கொள்வதன் மூலம் உறவு வலுப்படும்.
நிதி நிலைமை
குரு மற்றும் சனி பகவானின் ஆதிக்கத்தால் பணப் புழக்கம் தாரளமாக இருக்கும். நிதி நிலைமை பாதுகாப்பானதாக இருக்கும். ஜூன் 2018க்குப் பிறகு கூடுதல் செலவுகள் ஏற்படும். எனினும் நீங்கள் உங்களது நேர்மறையான அணுகுமுறை மற்றும் நீடித்த முயற்சிகள் மூலம் மீண்டும் முன்னேறுவீர்கள்.
ஓம் கேதவே நமஹ அல்லது ஓம் மிருத்யுபுத்ராய நமஹஎன்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும் அனுகூலமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே, மற்றும் நவம்பர் அனுகூலமற்ற மாதங்கள் : ஜூன் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர் இந்த மாதங்களில் உங்கள் இஷ்ட தெய்வத்தின் வழிபாடு மற்றும் பரிந்ததுரைக்கப்பட்ட பரிகாரங்களைச் செய்யவும்) இந்த புத்தாண்டு உங்களுக்கு நல்ல ஞானத்தையும் விழிப்புப்னர்வையும் வழங்கி அருளட்டும் AstroVed ல் இருக்கும் அனைவரும் உங்களுக்கு நல்வாழ்த்து தெரிவிகின்றனர்

Leave a Reply