x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
taurus

ரிஷபம் வருட ராசி பலன் 2019

2019 ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒரு மறக்கமுடியாத ஆண்டாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் நீங்கள் தனித்துவமான பாணியைக் கையாள்வீர்கள். முக்கிய விஷயங்களில் நீங்கள் எதிர்பார்க்கும் பலன்களைப் பெறுவதில் சில தாமதங்கள் ஏற்பட்டாலும் குருவின் செல்வாக்கு உங்களைக் காப்பாற்றும். இது உங்கள் வாழ்வில் ஒரு விசித்திர ஆண்டு ஆகும். உங்கள் ராசியிலிருந்து 8 வது வீட்டில் இருக்கும் சனி நற்பலன்களை அளிப்பார். உங்கள் ராசியிலிருந்து 7 வது வீட்டில் இருக்கும் குரு கெடு பலன்களை அளிப்பார். இந்த நிலையால் உங்கள் எல்லாச் செயல்களிலும் ஒரு மிதவை நிலை காணப்படும். முடிவடையாத அனைத்து பணிகளும் ஒன்றன் பின் ஒன்றாக முடிக்கப்படும். ஒரு கட்டத்தில் நீண்ட நெடும் நாட்களாக நிலுவையில் இருந்த பணி திடீரென்று எந்த தாமதமுமின்றி முடிவடைந்து உங்களை ஆச்சரியப்பட வைக்கும். அவ்வப்போது பின்னடைவுகளை நீங்கள் அனுபவித்தாலும், கடுமையான போராட்டத்தோடு அதனை எதிர்கொள்ளும் திறமை உங்களிடம் காணப்படும். தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். இந்த ஆண்டு முழுவதும் நல்ல நண்பர்கள் உங்களைச் சூழ்ந்து இருப்பார்கள்.

வருட ராசி பலன் 2019

ரிஷபம்: குணாதிசயங்கள்

ரிஷப ராசியினர் கலை சார்ந்த துறையில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள். மற்ற ராசியினரைவிட அதிக செல்வம் பெற்றிருப்பார்கள். உடல் வலிமை, மன வலிமை இரண்டையும் பெற்றிருப்பார்கள். ரிஷப ராசியினர் கடினமாக உழைப்பார்கள். நன்றாக சாப்பிட்டு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். இவர்கள் பல்வேறு சூழ்நிலைகளை அனுசரித்து சமாளித்தாலும் பிடிவாதமான அணுகுமுறையை தவிர்ப்பதன் மூலம் நல்ல பெயரைப் பெறுவார்கள். பொறுமை அவர்களின் மிகப் பெரிய பலமாகும். பிடிவாதம், பேராசை மற்றும் கோபம் இவர்களின் பலவீனங்களாகும்.

பரிகாரங்கள்:

உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் எவருக்கும் மரியாதை காட்டுங்கள். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெளியாட்களிடம் உணர்ச்சி அல்லது கோபத்தை வெளிக்காட்டாதீர்கள்.

உடல் ஊனமுற்றவர்களுக்கு ஆடைகள் / தேவையான பொருட்களை வழங்குங்கள்.

சனிக்கிழமைகளில் அருகாமையில் உள்ள சிவன் அல்லது விஷ்ணு கோயிலுக்கு சென்று வாருங்கள்

ஜெபம் செய்ய வேண்டிய மந்திரம் – “ஓம் ஸ்ரீ சேஷாத்திரி நிலயாய நமஹ” - தினமும் 108 முறை

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

சுதர்சன ஹோமம்

சாதகமான மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், மே, ஜூலை, நவம்பர்

சாதகமற்ற மாதங்கள் : ஏப்ரல், ஜூன், ஆகஸ்ட், அக்டோபர் (இந்த மாதங்களில் உங்களுக்கு பிடித்தமான கடவுளை வணங்கவும். பரிந்துரைக்கப்பட்ட பரிகாரங்களை செய்யவும்.)

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC