AstroVed Menu
AstroVed
search
search

மிதுன ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | Mithuna Rasi Sani Peyarchi Palangal 2020-2023

dateNovember 29, 2019

பொதுப்பலன்கள்:

மிதுன ராசி அன்பர்களே!  தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனி பெயர்கிறார். இந்த பெயர்ச்சியில், சனி உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்த இடம் அஷ்டம ஸ்தானம் எனப்படும். இங்கு சஞ்சாரம் செய்யும் சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம்  ஸ்தானத்தையும்,  ஐந்தாம்  மற்றும் பத்தாம்  ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். இரண்டாம் ஸ்தானம் குடும்பம் மற்றும் தனத்தை சுட்டிக் காட்டும். ஐந்தாம்  இடம் என்பது அறிவு மற்றும் ஆற்றலைச் சுட்டிக் காட்டும். பத்தாம் இடம் ஜீவன ஸ்தானத்தை சுட்டிக் காட்டும்.

அஷ்டம சனி நடக்கிறதே என்று அதிகம் கவலை கொள்ளாதீர்கள். அஷ்டம சனியாக இருந்த போதிலும் தனம் மற்றும் ஜீவன ஸ்தானத்தில் சனியின் பார்வை காரணமாக தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உங்கள் தனத்தை பெருக்கிக் கொள்ள இது ஒரு சிறந்த காலக் கட்டம் ஆகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் கிட்டும் காலக் கட்டமாக இந்த பெயர்ச்சி அமையும்.

                        சனிப்பெயர்ச்சி 2020-2023 சுய முன்னேற்றம் காண சனி பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையில் பங்கு கொள்ளுங்கள்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

குடும்பம்:

குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை தம்பதியர்களுக்கு இடையே ஒரு சில காலக் கட்டங்கள்  தவிர பிற நேரங்களில் சுமூகமான நல்லுறவு காணப்படும். இருவருக்கும் இடையே நல்ல ஒற்றுமை நிலவும். ஜனவரி 2021 க்குப் பிறகு சிறிய வகையில் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். இந்த நிலை ஜூலை வரை நீடிக்கும். ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு மனஸ்தாபங்கள் மறைந்து நல்லுறவு ஏற்படும். குடும்பத்தின் பிற உறவுகள் குறிப்பாக குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள். 2021 ஏப்ரல்-ஜூன் மாதங்களில் நீங்கள் ஆன்மீக சுற்றுலா சென்று மகிழ வாய்ப்பு உள்ளது.

பரிகாரங்கள்:

சுதர்சன ஹோமம் 

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

உடல்நலம்:

மிதுன ராசி அன்பர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் ஆகும். உங்களுக்கு அடிவயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியமான நெறிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்.  குழந்தைகளுக்கு சளி மற்றும் காய்ச்சல் உபாதைகள் ஏற்பட  வாய்ப்பு உள்ளது. முதுமை பருவத்தில் உள்ளவர்கள் மூட்டு வலி மற்றும் பாதங்களில் வலி  போன்ற உபாதைகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது. எனவே பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும்.

பரிகாரங்கள்:

கால பைரவர் ஹோமம்

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

பொருளாதாரம்:

உத்தியோக உயர்வு காரணமாக உங்கள் வருமானம் பெருகும். உங்கள் பொருளாதார வசதி மேம்படும். இந்த காலக் கட்டத்தை நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  உங்கள் குழந்தைகளின் மேற்படிப்பு குறித்த செலவுகளை நீங்கள் சந்திக்க நேரும். உங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உங்கள் வாழ்க்கைத் துணை உறுதுணையாக இருப்பார்.  அவர் மூலம் கிடைக்கும் பண வரவு மூலம் உங்களின் எதிர்பாரா செலவுகளை நீங்கள் சமாளிக்க இயலும். உங்கள் வங்கி சேமிப்புக்  கணக்கில் பணம் அதிகரிக்கும்.

பரிகாரங்கள்:

கணபதி ஹோமம்

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

தொழில்:

இந்த சனிப் பெயர்ச்சி காலக் கட்டத்தில் எண்ணெய் மற்றும் சுரங்க தொழிலில் இருப்பவர்கள்  தங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். மேலும் ஊக வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், பங்கு வர்த்தகம் செய்பவர்கள் சிறந்த முறையில் தொழில் லாபம் காண்பார்கள். சிறு முதலீட்டாளர்கள் தங்கள் தொழிலில் அதிக லாபம் காண்பார்கள். தரகு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சிறிது கவனமாக இருக்க வேண்டிய காலக் கட்டம் இது. பெயர்ச்சின் ஆரம்ப ஒரு வருட காலம் வரை நீங்கள் பொறுமை காக்க வேண்டும். ஜனவரி 2021க்குப் பிறகு நீங்கள் உங்கள் தொழிலில் லாபம் காண இயலும்.

பரிகாரங்கள்:

ஹயக்ரீவ  சஹித பூ வராஹ ஹோமம் 

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

கல்வி:

கல்வி பயிலும் மிதுன ராசி மாணவ மாணவியர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சி காலக் கட்டம் அறிவாற்றல் பெருகவும், வெளிப்படவும் உறுதுணையாக இருக்கப் போகிறது என்றால் மிகை ஆகாது. உங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறவும் இந்த காலக் கட்டம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கப் போகின்றது. கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தங்கள் கவனத் திறன் மற்றும் கிரகிக்கும் ஆற்றல் அதிகரிக்கக் காண்பார்கள். ஆராய்ச்சி படிப்பில் உள்ளவர்கள் பெயர்ச்சியின் ஆரம்ப காலத்தில் தடியக்ளை சந்தித்தாலும் பிறகு வெற்றிகரமாக ஆராய்ச்சியை முடிப்பார்கள்.

பரிகாரங்கள்:

 சரஸ்வதி ஹோமம்

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

Leave a Reply