Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய சனி பெயர்ச்சி பரிகார கோவில்கள்

November 28, 2019 | Total Views : 1,099
Zoom In Zoom Out Print

விகாரி வருடம் தை மாதம் 10 ம் நாள், அதாவது ஜனவரி 24, 2020 ம் தேதி சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த சனி பெயர்ச்சியில் சனிபகவானின் சஞ்சாரத்தையும் மற்றும் அனைத்து ராசிக்குரிய பரிகார ஸ்தலங்களையும் காண்போம்.

மேஷம்:

மேஷத்திற்கு இதுவரை 9 மிடத்தில் சஞ்சரித்த சனி பகவான் 10 மிடத்தில் சஞ்சரிக்கிறார்.

பரிகாரம்: திருக்கொள்ளிகாடு திருத்தலத்தில் உள்ள அக்னீஸ்வரர்,  மிருதுபாத நாயகி மற்றும் சனிபகவானை சனிக்கிழமையில் வழிபடுவது நன்மை தரும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

ரிஷபம்:

ரிஷபத்திற்கு இதுவரை  8 இல் அஷ்டமச்சனியாக இருந்த சனி பகவான் விலகி 9 இல் சஞ்சரிக்கிறார்.

பரிகாரம்: வாலாஜா பேட்டை தன்வந்த்ரி திருத்தலத்தில் உள்ள மூலவர் தன்வந்த்ரி பகவான் மற்றும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வழிபடுவது நன்மை தரும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

மிதுனம்:

மிதுனத்திற்கு இதுவரை 7 இல் கண்டக சனியாக இருந்த சனி பகவான் தற்போது 8 இல் அஷ்டமச்சனியாக சஞ்சரிக்கிறார்.

பரிகாரம்: விழுப்புரம் அருகில் உள்ள சிங்கிரி கோவில், பூவரசன் குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று ஸ்தலத்திலும் உள்ள நரசிம்மரை ஒரே நாளில் தரிசிப்பது நன்மை தரும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

கடகம்:

கடகத்திற்கு இதுவரை 6 இல் சஞ்சரித்த சனிபகவான் தற்போது கண்டக சனியாக  7 இல் சஞ்சரிக்கிறார்.

பரிகாரம்:

ஆரணியில் உள்ள எரிகுப்பம் எந்திர சனீஸ்வரரை சனிக்கிழமையில் வழிபடுவது நன்மை தரும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

 

சிம்மம்:

சிம்மத்திற்கு இதுவரை 5 இல் சஞ்சரித்த சனிபகவான் தற்போது 6 இல் சஞ்சரித்து யோக பலன்களை தரப்போகிறார்.

பரிகாரம்:

காஞ்சிபுரம் சிங்கபெருமாள் கோவிலில் நரசிம்மர் மற்றும் அஹோபிலவல்லி தாயாரையும் சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

கன்னி:

கன்னிக்கு இதுவரை 4 இல் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரித்த சனிபகவான் விலகி தற்போது 5 இல் சஞ்சரிக்கிறார்.

பரிகாரம்:

நாமக்கல் லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் வழிபடுவது நன்மை தரும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

துலாம்:

துலாத்திற்கு இதுவரை 3 இல் இருந்து யோக பலன்களை தந்த சனிபகவான் விலகி தற்போது 4 இல் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிக்கிறார்.

பரிகாரம்:

குச்சனூர் சனிபகவானை சனிக்கிழமைகளில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

விருச்சிகம்:

விருச்சிகத்திற்கு இதுவரை 2 இல் ஏழரை சனியில் குடும்ப சனியாக சஞ்சரித்த சனி பகவான் தற்போது ஏழரை சனி விலகி 3 இல் சஞ்சரித்து யோக பலன்களை தரப்போகிறார்.

பரிகாரம்:

ஆம்பூரில் உள்ள பெரிய ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவது நன்மை தரும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

 

தனுசு:

தனுசுவிற்கு இதுவரை 1 இல் ஏழரை சனியில், ஜென்ம சனியாக சஞ்சரித்த சனி பகவான், தற்போது ஏழரை சனியில் ஜென்மச்சனி விலகி குடும்ப சனியாக சஞ்சரித்து கெடுபலன்களை குறைக்கப் போகிறார்.

பரிகாரம்: விழுப்புரம் கல்பட்டு ஸ்தலத்தில் உள்ள சனி பகவானை சனிக்கிழமைகளில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

மகரம்:

மகரத்திற்கு இதுவரை 12 இல் ஏழரை சனியில் விரைய சனியாக சஞ்சரித்த சனிபகவான், தற்போது விலகி ஏழரை சனியில் ஜென்மச்சனியாக சஞ்சரிக்க போகிறார்.

பரிகாரம்:

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர், பிராணேஸ்வரி மற்றும் சனிபகவானை, சனிக்கிழமைகளில் வழிபடுவது நன்மை தரும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

கும்பம்:

கும்பத்திற்கு இதுவரை 11 இல் சஞ்சரித்து லாபத்தையும், யோகத்தையும் தந்த சனிபகவான், தற்போது ஏழரை சனியில் 12 இல் விரைய சனியாக சஞ்சரிக்க போகிறார்.

பரிகாரம்:

ஸ்ரீ வாஞ்சியம், இங்கு இறைவனையும் அம்பாளையும் வழிபாடு செய்து, குப்த கங்கை, எம தீர்த்தத்தில் நீராடி எமபகவானுக்கு அபிஷேகமும், ஆராதனையும் செய்து வழிபட்டால் சனி பகவான் அருள் கிட்டி, சனிதோஷ பரிகார நிவர்த்தி ஏற்படும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

மீனம்:

மீனத்திற்கு இதுவரை 10 இல் சஞ்சரித்த சனிபகவான், தற்போது லாபஸ்தானமான 11 இல் சஞ்சரித்து லாபத்தையும், யோகத்தையும் தரப்போகிறார்.

பரிகாரம்:

திருப்பரங்குன்றம் ஸ்தலத்தில் உள்ள முருகபெருமானையும், சனீஸ்வரரையும் வழிபடுவது நன்மை தரும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

banner

Leave a Reply

Submit Comment