AstroVed Menu
AstroVed
search
search

சிம்ம ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | Simha Rasi Sani Peyarchi Palangal 2020-2023

dateNovember 29, 2019

பொதுப்பலன்கள்:

சிம்ம ராசி அன்பர்களே!  தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனி பெயர்கிறார். இந்த பெயர்ச்சியில், சனி உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்த ஸ்தானம் ருண, ரோக, சத்துரு ஸ்தானம் எனப்படும். உபஜய ஸ்தானம் என்றும் கூறப்படும். இங்கு சஞ்சாரம் செய்யும் சனி பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம்  ஸ்தானத்தையும், எட்டு மற்றும் பன்னிரண்டாம் ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.

இந்த பெயர்ச்சி மூலம் எதிர்பாராத அதிர்ஷ்டமும், பண வருவாயும், வெளி நாட்டில் இருந்து தனப்பிராப்தியும் கிட்டும். போட்டிகளில் வெற்றி கிட்டும் வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் வரும் 2½ வருட காலக் கட்டங்களில் மிக யோகமான பலன்களை அளிக்கவிருக்கிறார்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

 

                                                சனிப்பெயர்ச்சி 2020-2023 சுய முன்னேற்றம் காண சனி பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையில் பங்கு கொள்ளுங்கள்.

குடும்பம்:

இந்த பெயர்ச்சியின் ஆரம்ப காலக் கட்டங்களில் குடும்ப ஒற்றுமை சீர்குலையும். குடும்ப உறுப்பினர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த நிலைமை மே 2020 க்குப் பிறகு சீராகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தம்பதிகளுக்கு இடையே அன்னியோன்யம் பெருகும். அன்பும் காதல் உணர்வும் பொங்கிப் பெருகும். குழந்தைகள் பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வார்கள். முன்னேற்றம் காண்பார்கள்.

பரிகாரங்கள்:

  • திண்பண்டங்களையும் சிகப்பு நிற ஆடைகளையும் ஏழைகளுக்கு தானமாக கொடுத்து குடும்பத்தில் ஒற்றுமை நிலவச்செய்யலாம்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

உடல்நலம்:

சிம்ம ராசி அன்பர்கள் தங்கள் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறு வயதினருக்கு சளி மற்றும் தொற்று பாதிப்பு இருக்கும். முதுமை பருவத்தில் இருப்பவர்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவார்கள். ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு, ஆழ்ந்த தூக்கம், உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள இயலும். உங்களில் சிலருக்கு ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தமான உபாதைகள் ஏற்பட வாய்புள்ளதால் நீங்கள் மூச்சுப் பயிற்சியை மேற்கொள்வது நல்லது.                                                                                                                                                                                                                            

பரிகாரங்கள்:

  • பால் மற்றும் மஞ்சள் கலந்த நீரில் குளித்துவர நல்ல உடல் நலத்தை காக்கமுடியும்.
  • ராசியைச் சேர்ந்த உத்யோகஸ்தர்கள் தங்கள் பணியில் உயர்வு காண்பார்கள். அதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலை மேம்படும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் அதிக லாபம் காண இயலும். பண முதலீடு மூலம் தொழில் செய்பவர்கள் சிறிது கவனமுடன் செயல்பட வேண்டும். பண பரிவர்தனையின் போது அதிக கவனம் தேவை.  சிம்ம ராசியைச் சேர்ந்த ஆண்கள் தங்கள் மனைவியின் மூலம் பண வரவைக் காண்பார்கள்.  

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

தொழில்:

ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி உங்கள் உடல் உழைப்பை அதிகரிக்கச் செய்வார். எனவே பணி செய்யும் இடங்களில் நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உள்ளூரில் இருந்து கொண்டு வெளிநாட்டுத் தொழில் மேற்கொண்டிருப்பவர்கள் தங்கள் தொழில் தொடர்புகளை விரிவுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பினைப் பெறுவார்கள். வீடு மனை விற்பனை தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் இந்த பெயர்ச்சி காலக் கட்டத்தை சிறந்த முறையில்பயன்படுத்திக் கொள்வதன்மூலம்சனியின் சஞ்சாரமனதுகடும் உழைப்பைக்குறிக்கும் ஆம் பாவத்தில்நிகழ்வதால்வேலைசெய்யும் இடங்களில் சிம்ம ராசி அன்பர்களின் உழைப்பு அதிகரிக்கும்.வெளிநாட்டுத்தொழிலை உள்நாட்டில் செய்பவர்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் தனது தொழிலை மேம்படுத்திக்கொள்ளமுடியும்.ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.தரகுத்தொழில் செய்பவர்கள் தனது தொழிலை விரிவுபடுத்திக்கொள்ள சதகமான காலகட்ட்த்தை இந்த சனிப்பெயர்ச்சி ஏற்படுத்தி கொடுக்கிறது.

பரிகாரங்கள்:

  • அன்று வெல்லத்தை சிவன் கோவிலில் தானமாக கொடுப்பது உத்தியோக உயர்வைத்தரும்.
  • விரதமிருந்து முருகனை வணங்கி “ஸ்கந்த குரு கவசம்” பாராயணம் செய்து வார தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

படிப்பு:

குழந்தைகள் பொது அறிவு, Spell Bee மற்றும் ஒலிம்பியாட் போன்ற போட்டித்தேர்வுகளில் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ்போன்ற போட்டித்தேர்விற்காக படித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு வெற்றி வாய்ப்பை தரக்கூடிய நிலையில் சனி பகவான் மகர ராசியில் தாராக இருக்கிறார்.உயர்கல்வி படிக்கும் இளைஞர்கள் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற சனிப் பெயர்ச்சி வழி வகை செய்யப்போகிறது. ஆராய்ச்சி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் சர்வதேச அளவில் பாராட்டை பெரும்.

பரிகாரங்கள்:

  • ஏழை குழந்தைகளுக்கு பாடபுத்தகங்கள் வாங்கி கொடுப்பது படிப்பில் நல்ல முன்னேற்றத்தை தரும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

பொதுவான பரிகாரம்

 

    Leave a Reply