கும்ப ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023-2026 | Kumbam Rasi Sani Peyarchi Palangal 2023-2026

கும்ப ராசி சனி பெயர்ச்சி 2023 பொதுப்பலன்கள் :
இந்த சனி பெயர்ச்சி உங்கள் ராசியில் நடப்பதால் நீங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் சோர்வாகவும் எதிலும் பற்று இல்லாமலும் காணப்படுவீர்கள். சில பல சங்கடங்களை நீங்கள் சந்திக்க நேரும். சனி மந்தமான கிரகம் என்பதால் நீங்கள் முன்னேற்றங்களைக் காண்பீர்கள் என்றாலும் அது மெதுவான முன்னேற்றமாக இருக்கும். இந்தக் காலக் கட்டங்களில் நீங்கள் அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அன்றாடம் இறைவழிபாட்டிற்கு சிறிது நேரம் ஒதுக்கி பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதில் சிரமம் இருந்தால் அல்லது குழப்பம் இருந்தால் மற்றவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். கடந்த கால அனுபவங்களை படிப்பினையாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
சனிப்பெயர்ச்சி 2023-2026 - சனி பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையில் பங்கு கொள்ளுங்கள்
உத்தியோகம் :
தற்போதைய காலக்கட்டத்தை கற்றுக் கொள்வதற்கான நேரமாக கருதுங்கள், அதிகம் கவலைப்பட வேண்டாம். பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள். வேலையில் பொறுப்புகள் அதிகமாகும். அதிக பணிச்சுமை அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும். சிலர் நல்ல வேலை தேடலாம். ஆனால் பணியில் சேர்வதற்கு முன், நிறுவனம் மற்றும் பணிச்சூழல் குறித்து சாத்தியமான அனைத்து ஆராய்ச்சிகளையும் செய்யுங்கள். உங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் உங்கள் பணியின் தரம் குறித்து கேள்விகள் எழுப்பப்படும். உங்கள் தொழிலில் மெதுவான முன்னேற்றம் ஏற்படலாம்.
காதல் / குடும்ப உறவு:
குடும்பத்தில் நடக்கும் பல விஷயங்கள் உங்களுக்கு சோர்வை அளிக்கும். நீங்கள் இந்தக் காலக்கட்டத்தில் குடும்பத்தினரை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு பிரியமான உறவுகளே உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புள்ளது. தங்களின் சுய நலத்திற்காக பிறர் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதால் நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். கண்மூடித்தனமாக யாரையும் நம்புவதை தவிருங்கள். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் இன்னும் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும். நேரம் கனிந்து வரும் வரை அவசரப்படாதீர்கள்.
திருமண வாழ்க்கை:
கணவன் மனைவி உறவில் ஒற்றுமை குறையும். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்புள்ளது. அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் உறவில் அமைதி காக்க இயலும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் இந்த காலக்கட்டத்தில் திருமணம் குறித்த எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம். திருமணம் குறித்த முடிவுகளை எடுக்க யாதுஇது சரியான தருணமல்ல. திருமணம் காலதாமதம் ஆகலாம் என்பதால் நீங்கள் பொறுமை காக்க வேண்டும்.
நிதிநிலை:
உங்கள் பணபுழக்கம் சீராக இருக்கும் என்றாலும் சில சமயங்களில் நீங்கள் பின்னடவை சந்திப்பீர்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கடன் வாங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. பணம் சம்பந்தமான எந்தவொரு முடிவையும் நீங்கள் நன்கு யோசித்து எடுக்க வேண்டும். முதலீடுகளை மேற்கொள்ளும் போது அதிக கவனம் தேவை. பணம் தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் விதிமுறைகளை நன்கு அறிந்து செயல்படுங்கள். சட்ட விரோதமாக நடந்து கொள்வதோ அல்லது குறுக்கு வழியில் செல்வதோ கூடாது. நீங்கள் முதலாளியாக இருந்தால் தொழிலாளர்களின் சம்பளம் குறித்த விஷயங்களில் நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள். அவர்களை மரியாதையுடன் நடத்துங்கள்.
மாணவர்கள் :-
கும்ப ராசி மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி கல்வி பயில வேண்டும். சில தடைகளும் தாமதங்களும் ஏற்படும். என்றாலும் நீங்கள் கவனமுடன் திட்டமிட்டு படித்தால் வெற்றி நிச்சயம். ஆசிரியரின் ஆலோசனை கேட்டு நடப்பது வெற்றிக்கு வழி வகுக்கும். கல்வியில் உங்கள் ஆர்வம் குறையாமல் கவனித்துக் கொள்ளுங்கள். போட்டித் தேர்வு எழுதுபவர்கள் இந்த காலக்கட்டத்தில் கடின உழப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவர்கள் வெற்றி காண்பார்கள். வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் மாணவர்களின் கனவுகள் நனவாகும்.
ஆரோக்கியம் :
மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே உங்கள் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. உண்ணும் உணவில் கவனம் செலுத்துங்கள். காய்கறி மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிய அளவில் ஆரோக்கிய பிரச்சினை என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். யோகா மற்றும் தியானம் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணை புரியும்.
பரிகாரங்கள் :-
- சனிக்கிழமை உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் மேற்கொள்ளுங்கள்
- ஒவ்வொரு சனிக்கிழமையும் கணபதி, ஆஞ்சநேயர் மற்றும் விநாயகரை வழிபடுங்கள். ஹனுமார் சாலீஸாவை பாராயணம் செய்யுங்கள்.
- சனிக்கிழமை ஏழை எளியவர்களுக்கு போர்வை மற்றும் ஆடை தானம் செய்யுங்கள்
- அசைவம் மற்றும் மது இவற்றை சனிக்கிழமை தவிருங்கள்
- சனிகிழமை நாய், காகம் மற்றும் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் அளியுங்கள்
- மருத்துவமனைக்கு முடிந்த அளவு தொண்டு செய்யுங்கள்
