தனுசு மே மாத ராசி பலன் 2022 | May Matha Dhanusu Rasi Palan 2022

தனுசு மே மாத பொதுப்பலன் 2022:
இந்த மாதம் தனுசு ராசி அன்பர்களுக்கு சற்று ஆறுதல் பெறும் மாதமாக இருக்கும். இந்த மாத ஆரம்பத்தில் விஷயங்கள் மெதுவாக இருந்தாலும். மாத மத்தியில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள். இந்த மாதம் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். இந்த மாதம் அதிர்ஷ்டமும் வளமும் உங்களைத் தொடர்ந்து வரும். வெளிநாட்டின் மூலம் அல்லது வெளி நாட்டில் இருக்கும் நபரின் மூலம் செல்வம் பெறுவீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் இரண்டும் சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானம் பெருகும். உங்கள் சேமிப்பும் கூடும். நீங்கள் பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்கள் மூலம் நீங்கள் ஆதாயம் காண்பீர்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்ப உறவு
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடனான உறவு சிறப்பாக சுமுகமாக இருக்கும். நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சார்ந்து செயல்படுவீர்கள். அவர்களுடனான நெருக்கம் அதிகரிக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு தக்க துணை கிட்டும். காதல் திருமணமாயின் சில தடைகள் மற்றும் தாமதங்களைத் தாண்டித் தான் திருமணம் நடக்கும். திருமணமான தம்பதியர் குழந்தைப் பேறு பெறுவார்கள். குடும்பத்துடன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள்.
திருமணமான தம்பதிகள் சிறந்த தரமான நேரத்தை ஓருவருகொருவர் பகிர்ந்துகொள்வார்கள். வாழ்க்கை இனிமை நிறைந்ததாக இருக்கும். அன்பு அக்கறை, விசுவாசம் என இருவரும் கருத்தொருமித்து வாழ்க்கை நடத்துவீர்கள். வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். குழந்தகளுடனான உறவு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண : லக்ஷ்மி பூஜை
உத்தியோகம்:
வேலை தேடிக் கொண்டிருக்கும் தனுசு ராசி அன்பர்கள் இந்த மாதம் வேலை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு இந்த மாத இறுதியில் அரசு உத்தியோகம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரு சிலர் தாங்களே புதிய தொழில் ஒன்றைத் தொடங்குவார்கள். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகள் உங்கள் செயல் திறன் கண்டு வியப்பார்கள். பணியிடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் பெருகும். சில தனுசு ராசி அன்பர்கள் அரசியல் மற்றும் விளையாட்டில் சிறப்பாகச் செயல்படுவார்கள்.
உத்தியோகத்தில் முன்னேற்றம் காண : சூரியன் பூஜை
தொழில்:
ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில். மருத்துவம், மற்றும் ஒப்பனைப் பொருட்கள் சார்ந்த தொழில் செழிப்பாக இருக்கும். தனுசு ராசி அன்பர்கள் தங்கள் சுய தொழிலில் பிரகசிபார்கள். தங்கம், வெள்ளி , ரத்தினக் கற்கள் சார்ந்த தொழில் செழிக்கும். போக்குவரத்து அல்லது ஆடை நிறுவனங்கள் சில நஷ்டங்களை சந்திக்க நேரும். வீடு வாங்கி விற்கும் தொழில் அல்லது விவசாயம் மூலம் சாதாரண பலன்கள் கிட்டும்.
தொழிலில் மேன்மை பெற : புதன் பூஜை
தொழில் வல்லுனர்கள் :
மருத்துவர்கள், பொறியாளர்கள், மற்றும் ஆசிரியர் தொழிலில் இருப்பவர்கள் இந்த மாதம் தங்கள் துறையில் பிரகாசிப்பார்கள். வெற்றி, வளர்ச்சி மற்றும் செழிப்பு காணப்படும். எழுத்தாளர்கள், அச்சுப் பதிப்பாளர்கள், எடிடர், நடிகர், ஒவியர்கள், நாட்டியக் கலைஞர்கள், பாடகர்கள், இயக்குனர்கள் வெற்றி காண்பார்கள். விளம்பரம், மேலாண்மைக், நிர்வாகம் மார்க்கெட்டிங் போன்ற துறையினர் ஆதாயம் மற்றும் லாபம் பெற கடினமாக உழைக்க வேண்டும். பொழுதுபோக்கு மற்றும் படைப்புத் துறையில் இருப்பவர்கள் இந்த மாதம பிரகாசிப்பார்கள்
ஆரோக்கியம் :
உங்கள் ஆரோக்கியம் இந்தமாதம் சிறப்பாக இருக்கும். ஒரு சிலர் சிறிய உடல் உபாதைகள் அல்லது தோல் சம்பந்தமான பிரச்சினைகளை சந்திக்க நேரும். சர்க்கரை நோயாளிகள் தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு ரத்த அழுத்த பாத்திப்பு வரலாம். உங்கள் நோய் எதிர்ப்புத் திறன் சீராக இருக்கும். தேவைப்பட்டால் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. அதிக அளவிலான உடல் பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்ப்பில்லை. நீண்ட நாளாக இருக்கும் நோய்க்கு இந்த மாத இறுதியில் நிவாரணம் கிட்டும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சுக்கிரன் பூஜை
மாணவர்கள் :
தனுசு மாணவர்கள் மிகச் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். சிறந்த முறையில் தேர்வுகளை ஏழுதி வெற்றி பெறுவார்கள். போட்டித் தேர்வுகள். நுழைவுத் தேர்வுகள் எளிதாக எழுதி முடிப்பார்கள். மருத்துவம், பொறியியல், ஐடி, மேலாண்மை துறை மாணவர்கள் சிறப்பாக பயில்வார்கள். ஊடகம் மற்றும் மாஸ் கம்யுனிகேஷன் துறை மாணவர்கள் நல்ல ஆதாயம் பெறுவார்கள். சில மாணவர்கள், விளையாட்டு, பட்டிமன்றம், போட்டி என பங்கு கொண்டு கல்வி சாரா விஷயங்களில் பரிசுகளை அள்ளிக் குவிப்பார்கள்.
கல்வியில் சிறந்து விளங்க : கணபதி பூஜை
சுப நாட்கள் :- 1,2,3,10,11,20,21,23,24,28,29,30
அசுப நாட்கள்:- 4,5,7,8,13,18,19,25
