விருச்சிக ராசி பொதுப்பலன்கள்:
விருச்சிக ராசி அன்பர்களே! உங்களுக்கு இது, அனைத்து வகைகளிலும் சுமாரான மாதமாகவே இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வேலை, தொழிலாக இருந்தாலும் சரி, அது சவால்கள் நிறைந்ததாகவே காணப்படும். முடிவுகள் உங்களுக்குச் சாதகமாக அமைய, ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வேலையில் கவனக் குறைவு காரணமாக நீங்கள் சில நல்ல வாய்ப்புகளை இழக்கவும் நேரிடலாம். இந்த நேரத்தில், எல்லா விஷயங்களிலும் நீங்கள் உறுதியாக இருப்பது நல்லது. பிறருடன் பேசும் பொழுதும், பழகும் பொழுதும், அமைதியான முறையில் நடந்து கொள்வதும் நல்லது. உங்கள் ஆரோக்கியத்தில் முறையான கவனம் தேவை. சில நேரங்களில் அது உங்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தலாம். இப்பொழுது சிலருக்கு, திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மாத விருச்சிக ராசி பலனை மேலும் அறிய கிளிக் செய்யவும்.
விருச்சிக ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை
காதல் வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். திருமண உறவுகள் சிறப்பாக இருக்கும். எனினும் உங்கள் துணைவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கக் கூடும். கவனம் தேவை. பொதுவாக இது சந்தோஷம் நிறைந்த மாதமாக இருக்கும்.
நிதி
பணவரவு சுமாரானதாக இருக்கும். தனிப்பட்ட தேவைகளுக்காக நீங்கள் அதிக செலவு செய்ய நேரிடலாம். பொழுதுபோக்கு மற்றும் ஆடம்பரச் செலவுகளும் மிக அதிகமாக இருக்கக் கூடும். எனவே, பணம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
வேலை
பணித் துறைக்கும் இது சுமாரான காலம் தான். கூடுதல் பொறுப்புகள் உங்கள் வேலைச் சுமையை மேலும் அதிகரிக்கலாம். இந்த நேரத்தில், கொடுக்கப்பட்ட கடமைகளை சரியாக நிறைவேற்றுவதும், வீணான கால தாமதத்தைத் தவிப்பதும் அவசியம். எனினும், சோதனைகளுக்குப் பின் இப்பொழுது நீங்கள் சாதனைகளையும் படைக்கலாம்.
தொழில்
தொழிலில் நீங்கள் நினைத்த இலக்குகளை அடைய கடின முயற்சி தேவை. புதிய திட்டங்களைப் பற்றிய கவலைகளும் இப்பொழுது உங்களுக்கு உண்டாகக் கூடும். ஆயினும், உங்கள் நேர்மறை எண்ணங்களும், உடனடியாகச் செயலில் இறங்கும் ஆற்றலும், இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கு பெரும் நன்மையைச் செய்யும்.
தொழில் வல்லுநர்
தொழில் துறையில், விருச்சிக ராசி அன்பர்களின் உற்பத்தித் திறன் மேம்பட்டு இருப்பது அவசியம். உணர்ச்சி வசத்தால் திடீரென்று மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாக, பணியில் நீங்கள் உரிய கவனம் செலுத்த முடியாமல் போகலாம். ஆகவே, முக்கிய முடிவுகளை எடுக்கும்போது உணர்ச்சி வசப்படாமல் செயல்படுவது அவசியம். தொழில் ரீதியாக சிறு பயணங்களை மேற்கொண்டு, இப்பொழுது சிலர், வெளியூர் செல்ல நேரலாம்.
ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். இந்த நேரத்தில், சத்தான உணவை உட்கொள்வதும், மருத்துவரின் அறிவுரைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதும் அவசியம். எளிய உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலமும் நீங்கள் நல்ல ஆரோக்கியம் பெறலாம்.
மாணவர்கள்
மாணவர்களுக்கு இது ஒரு சாதாரண காலமாகும். பெரியோர்களிடமிருந்து தன்னம்பிக்கையைக் கற்றுக்கொள்வது, கல்வியிலும், வாழ்க்கையிலும் வெற்றி பெற உதவும். கலாச்சார விழாக்களில் பங்கு கொள்வதன் வழியாகவும் நீங்கள், உங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்வீர்கள்.
சுப தினங்கள் : 1,2,5,6,18,19,28,29
அசுப தினங்கள் : 7,8,20,21,22,25,26,27

Leave a Reply