Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

மகரம் மே மாத ராசி பலன் 2020 | May Matha Magaram Rasi Palan 2020

April 9, 2020 | Total Views : 1,276
Zoom In Zoom Out Print

மகர ராசி பொதுப்பலன்கள்:

மகர ராசி அன்பர்களே! இந்த மாதம், மனதில் ஏதோ ஒரு கவலை உங்களை அரித்துக் கொண்டே இருக்கக் கூடும். சிலருக்கு, தலைவலியும், மனக் குழப்பங்களும் உண்டாகலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவுகளும் ஏற்படக் கூடும். எனவே கவனமாக இருக்கவும். தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து விலகி இருப்பதும் நல்லது. கோபத்தையும், வீண் வாக்கு வாதங்களையும் தவிர்ப்பதும் அவசியம். உடல் நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. எந்த வித ஆரோக்கியக் குறைபாடானாலும், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. எனினும், இளைய சகோதரர்களால் நன்மை ஏற்படலாம். தாய் வழிப் பாசத்தையும் எதிர்பார்க்கலாம். சிலரது வாழ்க்கையில் இப்பொழுது காதல் மலரும் வாய்ப்புள்ளது. குழந்தைகளும் நன்மை அடைவார்கள். உங்களுக்கு தெய்வீக நாட்டம் அதிகரிக்கும். சிலர் புனிதப் பயணங்களையும் மேற்கொள்வார்கள். பொதுவாக, சாதகமும், பாதகமும் கலந்த காலமாக இது அமையும்.இந்த மாத மகர ராசி  பலனை மேலும் அறிய  கிளிக் செய்யவும்.    

 

மகர ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை 

காதல் வாழ்க்கை சுவையாக இருக்கும். கணவன், மனைவி உறவில் நிலவும் இனிய சூழல், உங்களுக்கு மன நிறைவு தரும். ஆயினும், சில குடும்ப விஷயங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. திருமண வரன் தேடும் உங்கள் முயற்சிகள் தொடரக் கூடும்.  

மகர ராசி நிதி 

இந்த மாதம், உங்கள் நிதி நிலை ஓரளவு நன்றாக இருக்கும். எனினும், அன்றாடத் தேவைகளால் வீண் செலவு ஏற்படலாம். ஆகவே, எந்த விஷயத்தைச் செய்வதற்கு முன்பும், இரண்டு முறை யோசியுங்கள். ஆயினும், உங்கள் சேமிப்பு உங்களது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும். 

மகர ராசி வேலை 

கூடுதல் பொறுப்புகளால் உங்கள் பணிச்சுமை மேலும் அதிகரிக்கலாம். எனினும், உங்கள் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவது, பாராட்டுகளைப் பெற்றுத் தரும். இது உங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தையும், மனநிறைவையும் அளிக்கும். வேலையைப் பொறுத்த வரை, இது திருப்திகரமான காலமாகவே இருக்கும்.

மகர ராசி தொழில்  

மகர ராசி அன்பர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்த, சமூக ரீதியான நல்ல ஆதரவு கிடைக்கும். நீங்களும், உங்கள் வியாபார முயற்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பீர்கள். உங்களில் சிலர் தொலைதூரப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். தொழிலுக்குத் தேவையான பணம் ஈட்ட, இது உங்களுக்கு உதவியாக இருக்கும். 

மகர ராசி தொழில் வல்லுநர் 

இந்த மாதம், நீங்கள் வேலையில் கவனமாக இருப்பது அவசியம். அதிக பணிச்சுமை காரணமாக, கூடுதல் நேரம் செலவழித்து வேலையை முடிக்க வேண்டி வரும். எனவே, வேலையில் அலட்சியப் போக்கைத் தவிர்த்திடுங்கள். இந்த நேரத்தில் கோபத்தைத் தவிர்ப்பதும் அவசியம். ஏனெனில் இது பணித்துறையில் ஏமாற்றத்தை அளிக்கலாம். 

மகர ராசி ஆரோக்கியம் 

உங்கள் ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். இந்த நேரத்தில் பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உட்கொள்வது, உடல் வலிமை பெற உதவும். ஏதேனும் சிறிய கோளாறுகள் ஏற்பட்டாலும், உங்கள் எதிர்ப்பு சக்தியால் அவற்றை எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ள இயலும். தவறாமல் தியானம் செய்வதும், உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.  

மகர ராசி மாணவர்கள் 

கல்வியைப் பொறுத்தவரை இது ஒரு சாதாரண காலம் எனலாம். இப்பொழுது உங்கள் கவனம் திசை திரும்ப வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு நேர்வது, உங்கள் கல்வி முன்னேற்றத்தைக் குறைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். எனினும், உங்கள் அறிவுத் திறனும், கடின முயற்சியும் கல்வியில் நீங்கள் நல்ல நிலையை எட்ட உதவும்.  

சுப தினங்கள் : 5,6,9,10,23,24
அசுப தினங்கள் : .3,4,11,12,25,26,27,30,31

banner

Leave a Reply

Submit Comment