துலாம் ராசி பொதுப்பலன்கள்:
துலாம் ராசி அன்பர்களே! உங்கள் விடாமுயற்சி வெற்றி தேடித் தரும். தொழில் துறையில் அதிக உழைப்பும், கடும் முயற்சிகளும் லாபங்களைப் பெற்றுத் தரும். தன வரவும் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உயர்பதவிகள் வர வாய்ப்பு அதிகம். கணவன், மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கலாம். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். இளைய சகோதரனால் நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு, தாய் வழியில் சொத்துக்கள் வந்தடையும். எனினும், காதல் விவகாரங்களில் இந்த மாதம் கவனமாக இருப்பது அவசியம். தொழில் நன்கு நடந்தாலும், இடையிடையே சிறிது மந்தமாகவும் இருக்கலாம். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பொதுவாக இது, ஒரளவு நல்ல பலன்களைத் தரக்கூடிய சுமாரான மாதமாகும்.இந்த மாத துலாம் ராசி பலனை மேலும் அறிய கிளிக் செய்யவும்.

துலாம் ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை
இந்தக் காலகட்டத்தில் காதல் ஜோடிகள் நேரடியாக சந்தித்துக் கொள்ள முடியாமல் போகலாம். எனினும், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். அவருடன் மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிப்பீர்கள். உங்களது செயல்களுக்கு உரிய பலன்களும் கிடைக்கும்.
துலாம் ராசி நிதி
நிதி நிலை சிறப்பாக இருக்கும். செலவுகளும் சாதாரணமாகவே இருக்கும். எனினும், உங்கள் செலவுகளை கவனமாகத் திட்டமிடுவதன் மூலமும், பிற செலவினங்களைக் குறைப்பதன் மூலமும், உங்கள் கடன்களைத் தீர்க்க முடியும். தேவைப்படும் நேரத்தில் தாயிடமிருந்து நிதி உதவியும் பெறலாம்.
துலாம் ராசி வேலை
பணியில் இருப்பவர்கள் சிறந்த முன்னேற்றம் காணலாம். உங்கள் வேலைத் திறனும் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப அமையும். உங்கள் நேர்மையும், அர்ப்பணிப்பும் மேலதிகாரிகளின் பாராட்டு பெறும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பும் உங்களைத் தேடி வரலாம்.
துலாம் ராசி தொழில்
இந்த மாதம் உங்கள் தைரியமான அணுகுமுறையும், சுதந்திரமான செயல்பாடும் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். எனினும், தொழில் முன்னேற்றம் உங்கள் திறமையை சார்ந்தே அமையும். வெற்றி அல்லது பலன் தாமதமாகக் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
துலாம் ராசி தொழில் வல்லுநர்
உங்கள் பணிகளை மெற்கொள்ளும் பொழுது தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவது, உங்கள் திறமைகளை வெளிப்படுத்த உதவும். இதன் மூலம் சிறப்பாகச் செயலாற்றி, நீங்கள் எதிர்பார்த்த பலன்களை அடைய முடியும். நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப உங்கள் நடவடிக்கைகளை திட்டமிடுவதும் நன்மை தரும்.
துலாம் ராசி ஆரோக்கியம்
துலாம் ராசி அன்பர்கள், இந்த மாதம் கண்டிப்பான உணவுக் கட்டுப்பாட்டை பராமரிக்க வேண்டும். இது உங்கள் உடல்நிலை நன்றாக இருக்க உதவும். தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வதும், உடலை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
துலாம் ராசி மாணவர்கள்
இப்பொழுது கல்வி முன்னேற்றம் சாதாரணமாகவே இருக்கக் கூடும். கடும் முயற்சிக்குப் பின்னரே பலன் கிடைக்கும். ஆயினும், உங்கள் முயற்சிகளின் பயனாக, நடைமுறையில் பாடங்களை நன்கு தெரிந்து கொள்வதுடன் கூட, அவற்றைப் பற்றிய ஆழ்ந்த அறிவையும் நீங்கள் பெறலாம்.
சுப தினங்கள் : 3,4,15,16,17,25,26,27
அசுப தினங்கள் : 5,6,18,19,23,24

Leave a Reply