மிதுன ராசி பொதுப்பலன்கள்:
மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் உடல் நிலையிலும், மன நிலையிலும் அக்கறை தேவை. வாழ்க்கையில் பலவித குழப்பங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. பொதுவாக, எந்த ஒரு தொழிலிலும், பணியிலும் தெளிவு இல்லாமல் காணப்படுவீர்கள். செலவுகள் அதிகரிக்கக்கூடும். குழந்தைகளாலும் அதிக செலவுகள் ஏற்படலாம். எனவே கட்டுப்பாடு அவசியம். பணம் தொடர்பான விவகாரங்களில் மற்றவர்களிடம் மனகசப்பு ஏற்படலாம். இருப்பினும், இதை எல்லாம் எப்படியாவது சமாளித்து விடுவீர்கள். நீங்கள் பலவீனத்தால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதால், உடல் நலனிலும் சிறப்பு கவனம் தேவைப்படலாம். ஆயினும், ஆரோக்கியம் படிப்படியாக சீரடையும். எதிரிகளாலும் தொல்லை ஏற்படலாம் என்பதால், எச்சரிக்கை தேவை. ஆனால் உங்களுக்குச் சாதகமாக, உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் தவறான எண்ணங்கள் உங்கள் முயற்சியால் விலகும். தொழில் ரீதியாக, நன்மை பயக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். புனித யாத்திரை, பயணங்கள் போக வாய்ப்பு ஏற்ப்படும். பொதுவாக, நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய மாதமாக இது அமையக்கூடும். இந்த மாத மிதுன ராசி பலனை மேலும் அறிய கிளிக் செய்யவும்
மிதுன ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை
காதல் வாழ்க்கைக்கு இது சுமாரான மாதமாகும். சிலருக்கு புதிய காதல் தொடர்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில், வாழ்க்கைத் துணையோடு உங்கள் உறவு சற்று பாதிக்கப்படலாம். எனினும், உங்கள் சமூகத் தொடர்புகள் சிறப்பாக அமையும்.
மிதுன ராசி நிதி
பொருளாதார சூழ்நிலையில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும். எனவே, எந்த செயலைச் செய்வதற்கு முன்பும், ஒரு முறைக்குப் பலமுறை யோசித்தே செய்யுங்கள். அன்றாடத் தேவைகளால் வீண் செலவு ஏற்படக் கூடும் ஆதலால், சேமிப்பில் கவனம் செலுத்துவது எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.
மிதுன ராசி வேலை
பணிபுரிவோர்களுக்கு, செய்கின்ற வேலையில் தடங்கல்களும், உடன் பணிபுரிவோரிடம் மனகசப்புகளும் ஏற்படக் கூடும். எனினும், நீங்கள் கடின முயற்சி செய்து உங்கள் எல்லா எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதிய தொழில் நுட்பங்களால் நல்ல அனுபவம் கிடைக்கும். வேலையில் சில முன்னேற்றங்களையும் எதிர்பார்க்கலாம்.
மிதுன ராசி தொழில்
தொழில் ஒப்பந்தங்கள் மூலம், இப்பொழுது நல்ல பலன் காண்பது கடினம். சில முயற்சிகளையும் நீங்கள் தள்ளிப்போட வேண்டியிருக்கலாம். உங்கள் தொழில் கூட்டாளிகள் சில வேலைகள் நிலுவையில் வைத்திருப்பதற்கான சாத்தியம் உள்ளது. எனவே, தற்போது செய்ய வேண்டிய முக்கியப் பணிகளில் நீங்கள் கவனம் செலுத்துவது நல்லது.
மிதுன ராசி தொழில் வல்லுநர்கள்
உங்கள் செயல்பாடு சுமாராகவே இருக்கக் கூடும். வேலையில் தாமதங்களும் ஏற்படலாம். அவற்றைக் கண்டு நம்பிக்கை இழந்து விடாமல், உங்கள் முயற்சிகளைத் தொடர்வது நன்மை தரும். நேரத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப நீங்கள் திட்டமிடுவதும் நல்லது.
மிதுன ராசி ஆரோக்கியம்
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். எனினும், உடல் நலனில் முழு அக்கறை தேவை. வாதம் மற்றும் வெப்பம் சம்பந்தப்பட்ட நோய்களால் சிலர் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. நல்ல ஒய்வும் போதுமான தூக்கமும் உடலுக்கு நலம் விளைவிக்கும்.
மிதுன ராசி மாணவர்கள்
மிதுன ராசி மாணவர்கள் படிப்பதற்கும், நல்ல கல்வி அனுபவம் பெறுவதற்கும் இது சரியான நேரம் எனலாம். திறந்த மனதுடன் கூடிய உங்கள் அணுகுமுறை, உங்கள் தனிப்பட்ட திறமைகளையும், நற்பெயரையும் மேம்படுத்த உதவும். உங்கள் செயல் திறனால் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
சுப தினங்கள் : 7,8,15,16,17,20,21,22
அசுப தினங்கள் : 9,10,13,14,23,24

Leave a Reply