சிம்மம் மே மாத ராசி பலன் 2022 | May Matha Simmam Rasi Palan 2022

சிம்மம் மே மாத பொதுப்பலன் 2022
சிம்ம ராசி அன்பர்கள் தங்கள் வாழ்வில் ஏற்ற இறக்க நிலை காண்பார்கள். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் இரண்டிலும் ஏற்ற இறக்க நிலை காணப்படும். இந்த மாதம் நீங்கள் சில நிதி நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். இது குறுகிய கால பிரச்சினை தான் என்பதால் கவலை வேண்டாம். பணியிடத்தில் ஒரே மாதிரியான சலிப்பூட்டும் பணிகளை நீங்கள் மேற்கொள்ள நேரும். மேலதிகாரிகள் அதிக செயல்திறனை எதிர்பார்க்கும் வாய்ப்பு உள்ளது. அதிக பணிகள் மற்றும் அதிக பொறுப்புகள் காணப்படும்.. எனவே இந்த மாதம் நீங்கள் பரபரப்புடன் காணப்படுவீர்கள். உங்கள் உடல் மாற்றம் மன ஆரோக்கியத்தில் கவனம் தேவை. என்றாலும் இந்த மாத இறுதியில் நீங்கள் மேற்கொண்ட கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். கடின உழைப்பின் மூலம் நீங்கள் அதிர்ஷ்டம் பெறலாம். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்ப உறவு
குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சுமுகமாக இருக்கும்; புதிய நட்பு உருவாகும். அதன் மூலம் நீங்கள் ஆதாயம் காண்பீர்கள். உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். செல்வாக்கு மிக்க நபர்களுடன் உங்களுக்கு தொடர்பு ஏற்படும்.
இந்த மாதம் நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணைக்கென நேரம் ஒதுக்க இயலாத நிலை இருக்கும். என்றாலும் உங்கள் உறவில் நேர்மை, மதிப்பு மற்றும் மரியாதை இருக்கும். புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்களுக்குள் புரிந்துணர்வு ஏற்படுத்திக் கொள்ள சிறிது கால அவகாசம் எடுத்துக் கொள்வார்கள். என்றாலும் குடும்பத்தில் நல்லிணக்கமும் அமைதியும் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு இது நல்ல மாதம். திருமண உறவு ஏற்படும். குழந்தைப் பேறு வேண்டி நிற்பவர்களுக்கு சந்ததி பாக்கியம் கிட்டும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண ; லக்ஷ்மி பூஜை
நிதிநிலை
இந்த மாதம் நீங்கள் சில நிதிப் பிரச்சினைகளை சந்திக்க நேரும். பணப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் சேமிப்பு இந்த காலக் கட்டத்தில் குறையும். கடன் தொல்லைகளை சந்திக்க நேரும். ஒரு சிலருக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பணம் கொடுத்து உதவுவார்கள். பணம் காரணமாக சில முக்கிய வேலைகள் தாமதப்படும் வாய்ப்பு உளது. வழக்குகளில் சில தோல்விகளை நீங்கள் சந்திக்க நேரும். அதிக செலவுகள் காரணமாக உங்கள் சேமிப்பு குறையும். சொத்து, முதலீடு மற்றும் பங்கு வர்த்தகம் மூலம் உங்கள் பணம் வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது
உங்கள் நிதிநிலை மேம்பட : புதன் பூஜை
உத்தியோகம்
பொழுதுபோக்கு, ஊடகம் மற்றும் கலைத் துறையினர் சில ஆதாயங்களைக் காண்பார்கள். ஆலோசனை சார்ந்த தொழிலிற்கு நீங்கள் அங்கீகாரம் பெறுவீர்கள். உங்கள் துறையில் நீங்கள் பிரகாசிக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக எழுத்துத் துறையில் இருப்பவர்கள். சுய வேலை வாய்ப்பு வெற்றியை அளிக்கும். ஓர சிலர் தங்கள் பணியிடத்தை மாற்றி அமைத்துக் கொள்வார்கள்.
உங்கள் உத்தியோகத்தில் மேம்பட : சுக்கிரன் பூஜை
தொழில்
உங்கள் தொழிலில் ஏற்ற இறக்கம் காணப்படும். கூட்டுத் தொழில் மூலம் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எண்ணெய்,நிலக்கரி, கனிமப்பொருட்கள் மற்றும் இரும்பு சம்பந்தமான தொழில் சற்று பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. உணவு மற்றும் ட்ராவல் மூலம்சுமாரான ஆதாயம் கிட்டும். விவசாயம் மூலம் திடீர் செழிப்பு ஏற்படும். பருத்தி மற்றும் ஆடை உறபத்தி செழிக்கும். பால் உறபத்தி மூலம் லாபங்கள் கிட்டும்.
உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண : சனி பூஜை
தொழில் வல்லுனர்கள்
மருத்துவம், மற்றும் பொறியியல் துறை சிறப்பாக இருக்கும். மேலாண்மை, நிர்வாகம் போன்ற துறைகளில் சில பிரச்சினைகள் ஏற்படும். ஒரு சிலருக்கு பதவி விலக வேண்டி வரும் பணியிடத்தில் தரம் சிறிது தாழக் கூடும். சட்டம், போலிஸ் துறையினர்களுக்கு அதிக வேலை இருக்கும். நீத்பதிகள் வழக்குகளில் வெல்லும் வாய்ப்பு உள்ளது.
ஆரோக்கியம்
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. தோல் நோய், ஜுரம் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் சில சமயங்களில் சோம்பலாக உணர்வீர்கள். உண்ணும் உணவில் கவனம் தேவை. யோகா அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள் அதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள இயலும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை
மாணவர்கள்:
சிம்ம ராசி மாணவர்களுக்கு மனதை ஒருமுகப்படுத்துவதில் கவனம் தேவை. அதனை கடினமாக உணர்வார்கள். இதனால் நேர்முகத் தேர்வுகளில் சில தோல்விகளை சந்திக்க நேரும். தேர்வுகளை கவனமாக எழுத போராட்டம் இருக்கும். என்ற போதிலும் உங்கள் கூடுதல் முயற்சி மற்றும் கடின உழைப்ப்பின் மூலம் நீங்கள் முன்னேற வாய்ப்புள்ளது. ஒரு சிலருக்கு கல்வி உதவித் தொகை கிட்டும். ஒரு சிலர் வெளி நாடு சென்று படிப்பார்கள்.
கல்வியில் மேன்மை பெற : கணபதி பூஜை
சுப நாட்கள்:- 1,3,4,59,10,,12,15,19,24,25,28,29
அசுப நாட்கள் :- 2,8,16,17,23,30,31
