மேஷ ராசி பொதுப்பலன்கள்
மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களிடம் தன்னம்பிக்கையும், தைரியமும் நிறைந்து காணப்படும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பணவரவும் மிகச் சிறப்பாக இருக்கும். செய் தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். சிலருக்கு வேலை, உயர்பதவிகள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. அரசாங்கம் தொடர்பான காரியங்கள் கைகூடவும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சியும் உண்டாகக் கூடும். தாய் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குழந்தைகளிடம் உங்களுக்குப் பாசம் அதிகமாக இருக்கும். எனினும், சகோதரர்களிடம் சற்று கவனமாக இருப்பது அவசியம். சில நேரங்களில் சிறு மனக்குழப்பங்களும் ஏற்படலாம். தொழில் துறையில் சில தடங்கல்கள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எச்சரிக்கை தேவை. சிலருக்கு பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆலய தரிசனத்திற்காக சிலர் வெளியூர் செல்லவும் நேரிடும். பொதுவாக இந்த மாதம் உங்கள் வாழ்க்கை நன்றாகவே இருக்கும்.
இந்த மாத மேஷ ராசி பலனை மேலும் அறிய கிளிக் செய்யவும்.
மேஷ ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை
காதலுக்கு உகந்த மாதம் இது எனலாம். காதல் விவகாரங்கள் நன்றாகச் சென்றாலும், திருமண விஷயங்களில் கவனம் தேவை. குடும்ப வாழ்க்கையைப் பொருத்த வரை, கணவன், மனைவிக்குள் அன்பும், பாசமும் நிறைந்து காணப்படும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல புரிதல் ஏற்பட்டு, தம்பதிகள் இணக்கமான வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். குடும்பத்துடன் விருந்து நிகழ்ச்சிகளிலும் நீங்கள் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது.
மேஷ ராசி நிதி
மனைவியின் மூலமாக தனவரவு ஏற்படக் கூடும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வண்டி, வாசனை திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள் போன்ற தொழில்களின் மூலம் அதிக லாபம் பெற வாய்ப்புள்ளது. பொதுவாக, இந்த மாதம், உங்கள் பொருளாதார தேவைகள் அனைத்தும் சிறப்பாகவே நிறைவேறும்.
மேஷ ராசி வேலை
இந்த மாதம், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பணி அமையும். வேலை முன்னேற்றமும் சிறப்பாக இருக்கும். உங்கள் நேர்மையும், அர்ப்பணிப்பும் மேலதிகாரிகளின் பாராட்டு பெறும். நீங்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்த பணிக்கான உரிய அங்கீகாரமும் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் மதிப்பை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பும், உங்களைத் தேடி வரக்கூடும்.
மேஷ ராசி தொழில்
இடை இடையே சிறு பிரச்சினைகள் வந்து விலகும் வாய்ப்புள்ளது. ஆயினும் தொழில் சிறப்பாகவே நடைபெறும். ஆனால், சில நேரங்களில் நீங்களே உங்களுக்கு கஷ்டத்தை வரவழைத்து கொள்ளும் வாய்ப்புள்ளது. எச்சரிக்கையாக இருக்கவும். வயது முதிர்ந்தவர்களுக்கு சனிக்கிழமைகளில் அன்னதானம் கொடுப்பது உங்கள் நிதி நிலை மேம்பட உதவும்.
மேஷ ராசி தொழில் வல்லுநர்கள்
இது உங்களுக்கு முன்னேற்றம் தரும் காலமாக அமையும். உங்கள் திறமையால், தொழில் தொடர்பான அனைத்துப் பணிகளையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். வேலையில் உங்கள் கவனமும், அர்ப்பணிப்பு உணர்வும் பாராட்டுதல்களைப் பெற்றுத்தரும். ஆனால், கூடுதல் பொறுப்புகளை இப்பொழுது ஏற்காமல் இருப்பது நல்லது.
மேஷ ராசி ஆரோக்கியம்
மேஷ ராசி அன்பர்களின் உடல்நிலை முன்பே பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த மாதம் அவர்கள் நலம் பெறும் வாய்ப்புள்ளது. எனினும், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து விலகலாம். பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற சத்தான உணவுகள் போன்றவை, உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கும்.
மேஷ ராசி மாணவர்கள்
மாணவர்களுக்கு இந்த நேரத்தில், படிப்பில் அதிக கவனம் தேவை. படிப்பதை சிலர் மறந்து விடக்கூடும். புதிய நண்பர்களுடன் நட்பு ஏற்படக்கூடிய காலம் இது. எனினும், நட்பு வட்டத்திலும் குடும்பத்திலும் தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. எச்சரிக்கையுடன் செயல்பட்டால், இந்தக் காலகட்டத்திலும் உங்கள் படிப்பு சீராகவே செல்லும்.
சுப தினங்கள் : 3,4,11,12,15,16,17,30,31
அசுப தினங்கள் : 5,6,9,10,18,19

Leave a Reply