AstroVed Menu
AstroVed
search
search

மகரம் மே மாத ராசி பலன் 2022 | May Matha Magaram Rasi Palan 2022

dateApril 8, 2022

மகரம் மே மாத பொதுப்பலன் 2022

மகர ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சிகரமான சந்தோஷமான மாதமாக இருக்கும். வாழ்வின் முன்னேற்றம் திருப்திகரமானதாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றியைக் காண்பீர்கள். உங்கள் நடவடிக்கைகள் யாவும் சிறப்பான பலன்களை அளிக்கும். உங்கள் அந்தஸ்து  உயரும். என்றாலும் உங்கள் குடும்ப வாழ்க்கையில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதனால் நீங்கள் சிறிது கவலை கொள்வீர்கள். உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருநதாலும் உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புள்ளது. வழக்கு விஷயங்கள் ஏதேனும் இருந்தால் இந்த மாதம் அதில் வெற்றி கிட்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்ப உறவு

குடும்ப உறுப்பினர்களுடனான உறவு இந்த மாதம் சிறிது ஆட்டம் காணும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையும் நல்லிணக்கமும் குறைவாக இருக்கும். மேலும் சொத்து சம்பந்தமான சில பிரச்சினைகள் எழும். உங்கள் குடும்பத்தாரின் நலனில் நீங்கள் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். 

காதலர்கள் தங்கள் காதல் உறவை திருமண உறவாக மாற்றிக்  கொள்வார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த மாதம் திருமணம் நடக்கும். உங்கள் திருமண வாழ்வில் நம்பிக்கை, விசுவாசம் மற்றும் மரியாதை  இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை அன்புடனும் அக்கறையுடனும் இருப்பார். ஒரு சிலர் திருமண உறவிற்கு அப்பாற்பட்ட உறவில் சிக்கி விவாக ரத்து அல்லது பிரிவினையைக் கூட காணும் வாய்ப்பு உள்ளது. 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : லக்ஷ்மி பூஜை 

நிதிநிலை

மகர ராசி அன்பர்களுக்கு பல விதங்களில் இருந்தும் பணம் வரும் வாய்ப்பு உள்ளது. குறுகிய கால முதலீடுதிட்டங்கள் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. பணப் பற்றாக்குறை இருக்க வாய்ப்பில்லை. உத்தியோகத்தின் மூலம் வருமானம் உயரும்  வாய்ப்பு உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் நீங்கள் பணம் சம்பாதிப்பீர்கள். ஓரு சிலர் பகுதி நேர வேலை கூட பார்ப்பார்கள். அது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். வாழ்க்கைத் துணை, அவரது வீட்டினர், உடன் பிறப்பு மூலம் உங்களுக்கு பண உதவி  கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சேமிப்பு உயரும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய நேரும். 

நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை 

உத்தியோகம் :

நீங்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர் என்றால் உங்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்ப்படும்.  மார்க்கெட்டிங் விளம்பரம் துறையினர்  வெற்றி வாய்ப்பைப் பெறுவார்கள். சட்டத் துறையில் இருப்பவர்கள் சாதனைகளைப் புரிவார்கள். கலைத் துறை, பொழுது போக்குத் துறையில் இருப்பவர்கள் சில தடைகள், தோல்விகள்  அல்லது தாமதங்களை சந்திப்பார்கள். விளையாட்டுத் துறையினர்  பெயரும் புகழும் பெறுவார்கள்.  வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிட்டும். 

உத்தியோகத்தில் மேன்மை பெற : சுக்கிரன் பூஜை 

தொழில் :

ஏற்றுமதி -இறக்குமதி ஆடைத் தொழில் சிறப்பாக விளங்கும்.  போக்குவரத்து , மரச்சாமான்கள், நிலக்கரி, மார்பில், சிமென்ட், டைல்ஸ் செங்கல், போன்ற துறையினர் நன்கு செயல்பட்டு ஆதாயம் காண்பார்கள். உணவு, உணவகம் பிரயாணம் போன்ற  துறையினர் சுமாரான ஆதாயம் பெறுவார்கள்.ஆடைகள், லெதர் துறையினர் நல்ல லாபம் காண்பார்கள். புதிய தொழில் தொடங்கியவர்கள்  வாங்கல் விற்றல் மூலம் நல்ல லாபம் காண்பார்கள். 

தொழிலில் மேன்மை பெற : சந்திரன் பூஜை 

தொழில் வல்லுனர்கள் 

மருத்துவர்கள், பொறியாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஜோதிடர்கள் இந்த மாதம் சிறப்புற பணியாற்றி லாபம் ஈட்டுவார்கள். நடிகர்கள், ஆங்கர்ஸ், டைரக்டர், பாடகர்கள், நாட்டியக் கலைஞர்கள் கூடுதலாக உழைப்பு உழைக்க வேண்டியிருக்கும். பொறுமை அவசியம். எழத்து, ஒவியியம், நாடகம்,பாடல் மூலம் ஆதாயம் பெறலாம். ஊடகம், பத்திரிகை போன்ற துறையினர் புகழ் பெறுவார்கள். அரசியல் வாதிகள் இந்த காலக் கட்டத்தில் பெயரும் புகழும் பெறுவார்கள். பிரபலம் அடைவார்கள். 

ஆரோக்கியம் : 

இந்த மாதம்  மகர ராசிக்காரர்களின் உடல்நிலை சீராக இருக்கும். இதயக் கோளாறுகள் அல்லது ரத்தம் சம்பந்தமான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களும் நன்றாக குணமடையலாம். அதே நேரத்தில் உங்கள் நோயெதிர்ப்பு சக்தி இந்த நேரத்தில் வலுவாக இருக்கும். ஒரு சிலர் நீரிழிவு அல்லது தோல் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கூடுதலாக, பெண்களுக்கு சில ஹார்மோன் அல்லது மாதவிடாய் பிரச்சனைகள் இருக்கலாம். இருப்பினும், எந்தவொரு உடல்நலப் பிரச்சினைகளிலிருந்தும் நீங்கள் விரைவாக குணமடையலாம், மேலும் நாள்பட்ட நோய்களும் கட்டுப்பாட்டில் இருக்கலாம். மேலும், இந்த மாதத்தில் உங்கள் வாகனத்தை கவனமாக ஓட்டவும்.

உங்கள் ஆரோக்கியம் சிறந்து விளங்க : சனி பூஜை 

மகர ராசி மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் என அனைத்தையும் சிறப்பாக செய்வார்கள். மருத்துவம் பொறியியல் மற்றும் மேலாண்மை சார்ந்த துறை மாணவ  மாணவியர்கள் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் சிறந்த வெற்றி காண்பார்கள். ஒரு சிலருக்கு கல்வி உதவித் தொகை கிட்டும். ஒரு  சிலர் வெளி நாடு சென்று படிப்பார்கள். 

கல்வியில் சிறந்து விளங்க : கணபதி பூஜை 

சுப நாட்கள் :- 1,4,5,6,9,10,15,16,20,21,22,28,29,
அசுப நாட்கள் :- 3,7,11,12,18,19,25,30,31


banner

Leave a Reply