AstroVed Menu
AstroVed
search
search

கும்பம் மே மாத ராசி பலன் 2022 | May Matha Kumbam Rasi Palan 2022

dateApril 8, 2022

கும்பம் மே மாத பொதுப்பலன் 2022:

இந்த மாதம் கும்ப ராசி அன்பர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் சில பிரச்சினைகளை சந்திப்பார்கள். என்றாலும் குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்கள் உரிய நேரத்தில் உதவுவார்கள். பணியிடத்தில் உங்கள் சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலதிகாரிகள் உங்களை கண்காணிப்பார்கள். அவர்களின் அதிருபதிக்கு ஆளாகாமல் உங்களை காத்துக் கொள்ள வேண்டும். உங்கள் விருப்பங்களில் சில நிறைவேறாமல் போகும். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண பொறுமை அவசியம். நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு அபார வெற்றி கிடைக்காவிட்டாலும் ஓரளவு வெற்றியை நீங்கள் எட்டுவீர்கள். இந்த மாதம் ஏற்ற இறக்க நிலை இருக்கும்.  நீங்கள் சிறு பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வெற்றியும் ஆதாயமும் பெறுவீர்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்ப உறவு 

குடும்ப உறுப்பினர்களுடனான உறவில் இனிமை இருக்கும். உறவினர்களிடம் நீங்கள் இணக்கமான உறவு மேற்கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின்  வீட்டாருடனான உறவு சுமுகமாக இருக்கும். என்றாலும் அவ்வப்போது சிறு சிறு மோதல்கள் வரும்.  என்றாலும் இறுதியில் சமாதானமும் அமைதியும் கிட்டும்.  
திருமணமான தம்பதியர் மனதில் கருத்து வேறுபாடு ஏற்படும். அவநம்பிக்கை  மற்றும் ஈகோ காரணமாக முரண்பாடு ஏற்படும்.  காதல்  வாழ்க்கை பரபரப்பாக இருக்கும். என்றாலும் சில தவறான புரிந்துணர்வு மற்றும் அதிக எதிர்பார்ப்பு காரணமாக தனிமை உணர்வு ஏற்படும். 

திருமண உறவில் நல்லிணக்கம் காண : லக்ஷ்மி பூஜை 

நிதிநிலை : 

இந்தமாதம் உங்கள் பணம் முடங்கும் அபாயம் உள்ளது. எனவே பணப் புழக்கம் மந்தமாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள்  மற்றும் நண்பர்கள் உங்களுக்கு பண உதவு புரிவார்கள். ஊக வணிகம் நஷ்டத்தை தரும். உங்கள் செலவுகள் அதிகமாக இருக்கும். சேமிப்பு குறையும். மேலும் பங்கு வர்த்தகம் மூலம் குறைந்த லாபம் கிட்டும். வீடு வாங்கி விற்றல், விவசாயம் சார்ந்த தொழில் மூலம் லாபம் கிட்டும். சேமிப்பைக் கொண்டு உங்கள் செலவுகளை சமாளித்துக் கொள்வீர்கள்.   

உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை 

உத்தியோகம் :

இந்த மாத ஆரம்பத்தில் பணியிடத்தில் நீங்கள் போராட வேண்டியிருக்கும். பணியிடத்தில் உங்கள் கவனம் மற்றும் ஆற்றல் குறைந்து காணப்படும். உற்சாகம் இழந்து காணப்படுவீர்கள். ஒரே மாதிரியான பணி உங்களுக்கு சலிப்பை வழங்கலாம். எனவே உங்களில் சிலர் முக்கியமான வாய்ப்பை இழக்கும் சந்தர்ப்பம் கூட ஏற்படலாம். கவனச் சிதறல் வராமல் காத்துக் கொள்ளுங்கள். 

மார்கெடிங், வங்கி துறையைச் சார்ந்தவர்கள் ஆதாயம் பெறுவார்கள். கலைத் துறை படைப்புத் துறையைச் சார்ந்தவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அரசாங்கம் மற்றும் பொது துறையில் இருப்பவர்கள் வெற்றி காண்பார்கள். 

உத்தியோகத்தில் மேன்மை பெற : புதன் பூஜை 

தொழில் :

ஆடை, ஒப்பனைப் பொருட்கள், மருத்துகள் போன்றவற்றின் மூலம் சுமாரான லாபம் கிட்டும். போக்குவரத்து துறை மூலம் இந்த மாதம் இறுதியில் ஆதாயம் காணலாம். என்றாலும் சுய தொழில் உங்களுக்கு சில ஆறுதலை அளிக்கும். புதிய தொழில் செய்பவர்கள் கடின உழைப்பை போட வேண்டியிருக்கும்.  இந்த மாத இறுதியில் உங்கள் திட்டங்களுக்கு வடிவம் கொடுப்பீர்கள். போக்குவரத்து மற்றும் பால் துறையில் இருப்பவர்கள் சில நஷ்டம் சந்திக்க நேரும். மளிகைக் கடை நடத்துபவர்கள் லாபம் காண்பார்கள். திரைத் துறையினர் இந்த மாத இறுதியில் பிரகாசிப்பார்கள். 

தொழிலில் மேன்மை பெற : சூரியன் பூஜை 

தொழில் வல்லுனர்கள் :

பணியிட மாற்றம் மூலம் நீங்கள் பலன் பெரும் வாய்ப்பு உள்ளது. வேலை தேடுபவர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். மருத்துவம் பொறியியல், ஜர்னலிசம் போன்ற பணிகளில் இருப்பவர்கள் மன அழுத்தத்தை  சந்திப்பார்கள். அதிக பணிகள் காரணமாக.  எழுத்து போன்ற  துறையில் இருப்பவர்கள் வெற்றி காண்பார்கள். ஐ.டி துறையில் இருப்பவர்கள் மேன்மை பெறுவார்கள். நடிகர்கள், பாடகர்கள், டைரக்டர் திரையரங்க கலைஞர்கள் சில தோல்விகள், வலிகள் போன்றவற்றை இந்த மாதம் சந்திப்பார்கள். 

ஆரோக்கியம் : 

உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். மனப் பதட்டம் காரணமாக நீங்கள் விரையில் அசதிக்கு ஆளாவீர்கள். உங்கள் ஆற்றல் உற்சாகம் குறையும். சிலருக்கு எலும்பு சம்பந்தமான  பிரச்சினைகள் வரும். அது குணமாக நாளாகும். மருத்துவ செலவுகள் ஏற்படும். சிலர் டைபாய்டு ஜுரம் சளி இருமலுக்கு ஆளாவார்கள். ஒரு சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்படும். வெளியிடங்களுக்குச் சென்று வருவதன் மூலம் நீங்கள் உங்கள் மனதில் அமைதியுய்ம் மகிழ்ச்சியும் பெறலாம். 

உங்கள் ஆரோக்கியம் மேம்பட: அங்காரகன் பூஜை 

மாணவர்கள் 

மாணவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது. மந்தமாகச் செயல்பட நேரும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி காண்பது கடினமாக இருக்கும். உயர் கல்வி மற்றும் வெளி நாட்டு படிப்பு போன்றவற்றில் பிரச்சினைகளை சந்திக்க நேரும். ஊடகம் சம்பந்தமான படிப்பு ஓரளவு வெற்றி ளைக்கும். 

கல்வியில் மேன்மை பெற : கணபதி பூஜை 

சுப நாட்கள் :- 1,2,3,9,10,18,19 29,31
அசுப நாட்கள் :- 4,6,7,20,23,24,25,28,30


banner

Leave a Reply