AstroVed Menu
AstroVed
search
search

மீனம் மே மாத ராசி பலன் 2022 | May Matha Meenam Rasi Palan 2022

dateApril 8, 2022

மீனம் மே மாத பொதுப்பலன் 2022:

பெரும்பாலான மீன ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றகரமான மாதமாக இருக்கும். இந்த மாதம் வெற்றி உங்களை நாடி வரும். வாழ்வில் மீண்டும் வசந்தம் தலை தூக்கும். வளர்ச்சியும் செழிப்பும் அதிர்ஷ்டமும் பெருகும் மாதமாக இந்த மாதம் இருக்கும். உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் முடிவுகள் எடுக்கும் தனித்திறம்   காரணமாக நீங்கள் இந்த மாதம் அபார வெற்றி பெறுவீர்கள்.  காதல், அதிர்ஷ்டம், வெற்றி, பணம் என எல்லா அம்சங்களிலும் நீங்கள் வளத்தை செழிப்பை அனுபவிப்பீர்கள். வழக்குகள் ஏதேனும் இருந்தாலும் அதிலும் நீங்கள் வெற்றி காண்பீர்கள். உங்கள் விருப்பங்கள் யாவும் இந்த மாதம் நிறைவேறும். உங்கள் திட்டங்களை நீங்கள்  சிறப்புற நிறைவேற்றுவீர்கள்.   உங்கள் தொழிலில் நீங்கள் விரைவான வெற்றி காண்பீர்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்ப உறவு :

உங்கள் குடும்பத்துடன் தரமான நேரத்தை கொண்டாடி மகிழ்வீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் நல்லுறவு காணப்படும். திருமணமான தம்பதிகள் அனுசரனையுடன் ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டி அன்பை பரிமாறிக் கொள்வீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.  திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் இந்த மாதம் தக்க துணை கிடைக்கப் பெறுவார்கள். வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். புதிதாக திருமணமான தம்பதியர் இந்த மாதம் அதிர்ஷ்டம், மகிழ்ச்சி என வாழ்க்கை இனிமையாக இருக்கக் காண்பார்கள். 

திருமண வாழ்வில் நல்லினக்கம் காண : லக்ஷ்மி பூஜை 

நிதிநிலை :

இந்த மாதம் பணப் புழக்கம் சிறப்பாக இருக்கும். உங்கள் சேமிப்பு உயரும். வங்கி இருப்பு பெருகும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். முதலீடுகளை நீங்கள் மேற்கொள்வீர்கள். அதிக செலவுகள் இருக்க வாய்ப்பில்லை.  உங்கள் அந்தஸ்து மற்றும் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை 

உத்தியோகம் : 

வேலை : இந்த மாதம் உத்தியோகத்தில் நீங்கள் அபார முன்னேற்றம் காண்பீர்கள்.  பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். உங்களில் சிலருக்கு அரசாங்க உத்தியோகம் கிட்டும். வேலையில்லாதவர்களுக்கு சிறந்த வேலை கிட்டும். நீங்கள் ஆர்வமுடன் பணியாற்றுவீர்கள. ஆசிரியர், ஜோதிடர் விளையாட்டு போன்ற துறைகளில் இருப்பவர்கள் நன்றாக பிரகாசிப்பீர்கள். புதிய தொழில்கள் சிறக்கும். படைப்புத் துறை மற்றும் கலைத் துறையினர் அதீத வெற்றி காண்பார்கள்.  ஒரு சிலர் அரசியலில் பிரகாசிப்பார்கள்.

உத்தியோகத்தில் மேன்மை பெற : பிருகஸ்பதி பூஜை 

தொழில் :

ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த  தொழில் இந்த மாதம் சிறப்பாக நடக்கும். போக்குவரத்து சார்ந்த தொழில், ஆடை, ஒப்பனைப் பொருட்கள், மருந்து போன்ற தொழில் மூலம் சிறந்த லாபம் கிட்டும். மேலும் தரகுத் தொழில், நர்சிங் போன்றவை மூலமும் உணவு, பால் பொருட்கள், பிரயாணம் சார்ந்த சுய தொழில் மூலம் செல்வமும் பிரபலமும் அடைவீர்கள்.  வீடு வாங்கி விற்றல். கட்டிடம் சார்ந்த தொழில் திரை அரங்கு, மால், மளிகைப் பொருட்கள் போன்றவற்றிலும் லாபம் கிட்டும். 

உங்கள் தொழிலில் மேன்மை பெற : புதன் பூஜை  

தொழில் வல்லுனர்கள் 

நவீன உலக பொருட்கள், டிசைனிங் போன்ற துறைகளில் வளர்ச்சி காண்பீர்கள். பொறியியலாளர்கள், மருத்துவர்கள், ஐ டி துறையினர் தங்கள் தொழிலில் வெற்றி காண்பார்கள். ஆங்கர்ஸ், நடிகர் நடிகைகள், பெயிண்டர்ஸ் போன்றவர்களுக்கும் இது சிறந்த காலமாக இருக்கும். திரைத்துறையினர் பிரபலம் அடைவார்கள். ஊடகத் துறையிலும் சிறந்த வெற்றியைப் பெறலாம். 

ஆரோக்கியம் :

உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.  உங்கள் நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாக இருக்கும். நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டவர்கள் அதில் இருந்து மீளுவார்கள். ஒரு சிலருக்கு சளி ஜுரம் போன்ற சிறு சிறு உபாதைகள் வந்து போகும். மருத்துவ செலவுகள் குறைவாக இருக்கும்.  ஒரு சிலருக்கு உணவுப் பழக்கம் காரணமாக சில உடல் உபாதைகள் வர வாய்ப்புள்ளது. எனவே உணவில் கவனம் தேவை.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை 

மாணவர்கள் : 

மீன ராசி மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். நுழைவுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுவார்கள். ஒரு சிலருக்கு கல்வி உதவித் தொகை கிட்டும். ஒரு  சிலருக்கு வெளி நாட்டு வாய்ப்பு கிட்டும். படிப்பு முடித்தவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும் வாய்ப்பு கூட உள்ளது. 

கல்வியில் மேன்மை பெற : கணபதி பூஜை

சுப நாட்கள் :- 1,3,4,6,14,15,18,24,25,29,30,31
அசுப நாட்கள் :- 5,12,13,16,26,27


banner

Leave a Reply