விருச்சிகம் மார்ச் மாத ராசி பலன் 2022 | March Month Rasi Palan 2022 Viruchigam

விருச்சிகம் மார்ச் மாத ராசி பலன் 2022 பொதுப்பலன்கள்:
விருச்சிக ராசி அன்பர்களே! கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் உறவு வலுப்படும். இந்த மாதம் உங்கள் குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். மங்களகரமான மாதமாக இந்த மாதம் இருக்கும். வீட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளது. விருந்து விசேஷம் என வீட்டில் குதூகலமான சூழ்நிலை இருக்கும். வீடு மனை வாங்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்கள் உத்தியோகம் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும் என்றாலும் செலவுகள் அதிகம் இருக்கும். மாணவ மாணவியர்கள் அதிக கவனத்துடன் அதிக நேரம் படிக்க நேரும் என்பதால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
இந்த மாதம் உங்கள் குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும் கணவன் மனைவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் உறவில் நல்லிணக்கம் காண முடியும். கருத்து வேறுபாடுகளைக் களைந்து புரிந்துணர்வைக் கொண்டால் இருவருக்கும் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மூத்த உடன் பிறப்புகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் நல்லுறவு நீடிக்கும். குழந்தைகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். குழந்தைகளை வெளியிடங்களுக்கு கூட்டிச்சென்று அவர்களை மகிழ்வித்து நீங்களும் மகிழ்வீர்கள்.
குடும்ப உறவு சிறக்க சந்திரன் பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் நிதிநிலை சீராக இருக்கும். தொழில் நுட்பத்துறை மற்றும் தொலைத் தொடர்பு துறையில் இருப்பவர்களின் வருமானம் அதிகரிக்கும். இதனால் உங்கள் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு தண்ணீர் குழாய்களில் பழுது ஏற்பட்டு தேவையில்லாத செலவுகள் ஏற்படலாம். நிலுவையில் இருக்கும் கடன் தொகைகள் வசூலிப்பதில் தாமதங்கள் ஏற்படலாம். ஷேர் மார்க்கெட் முதலீடுகள் மூலம் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை
வேலை:
உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். நீங்கள் அரசுத் துறையில் பணிபுரிபவர் என்றால் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கான பாராட்டும் அங்கீகாரமும் கிட்டும். நீங்கள் தனியார் துறையில் பணிபுரிபவர் என்றால் இந்த மாதம் அதிக பணிகள் காணப்படும். பணிகள் மலை போலக் குவியும். கூடுதல் பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படும். வாங்கிப்பணி மற்றும் அயல்நாட்டு வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களில் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு கிடைக்கும்.
தொழில்:
சொந்தத் தொழில் அல்லது வியாபாரம் செய்யும் விருச்சிக ராசி அன்பர்கள் இந்த மாதம் அதிகம் போராட வேண்டியிருக்கும். அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் இந்த மாதம் அதிக அளவில் போட்டியாளர்களை சந்திக்க நேரும். பயணம் சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் அதிக தன வரவைக் காண்பார்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்பவராக இருந்தால் அதிக லாபத்தை காண முடியும்.
தொழில் வல்லுனர்கள்:
இந்த மாதம் நீங்கள் வாடிக்கையாளர்களை அதிக அளவில் திருப்திபடுத்துவீர்கள். நிதித்துறை, நீதித்துறை மற்றும் உயர் கல்விதித் துறையில் பணியில் இருப்பவர்களுக்கு சிறந்த வகையில் முன்னேற்றம் காணப்படும். அரசுத்துறையில் பணியில் உள்ள தொழில் வல்லுனர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பீர்கள்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் உயர்வு கிடைக்க ராகு பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கும். வயிறு சம்மந்தப்பட்ட உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சிறிய அளவிலான உடல் உபாதைகள் என்றாலும் நீங்கள் உடனடியாக மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும். முறையான ஒய்வு, சரியான உணவு மற்றும் எளிய உடற்பயிற்சி மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் காத்துக் கொள்ள இயலும்.
அரோக்கியம் மேம்பட சிவன் பூஜை
மாணவர்கள்:
விருச்சிக ராசி மாணவர்களுக்கு இந்த மாதம் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை உதவிகரமாக இருக்கும். எனவே அவர்களின் துணை கொண்டு நீங்கள் வெற்றிப் பாதையில் நடை போட இயலும். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று நல்ல உத்தியோகம் அமையக் காண்பார்கள். ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்கள் தங்கள் துறையில் பிரகாசிப்பார்கள். மற்றும் ஆராய்ச்சி படிப்பை வெற்றிகரமாக முடித்து சிறந்த நிறுவனங்களில் வேலை கிடைக்கப் பெறுவார்கள்.
கல்வியில் மேன்மை உண்டாக சரஸ்வதி பூஜை
சுப நாட்கள்:
7, 8, 9, 27, 28, 29, 30.
அசுப நாட்கள்:
1, 2, 3, 10, 11, 12.
