துலாம் மார்ச் மாத ராசி பலன் 2022 | March Month Rasi Palan 2022 Thulam

துலாம் மார்ச் மாத ராசி பலன் 2022 பொதுப்பலன்கள்:
துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் குடும்பத்தில் இன்பமான, மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். தம்பதிகள் கருத்தொருமித்து வாழ்வீர்கள். உங்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் உடனான உறவு நிலை சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் ஏற்றம் காணப்படும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமான நிலை இருக்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் தொடங்க காத்திருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் மாதமாக இந்த மாதம் அமைகிறது. ஆசிரியர்களின் ஆதரவை மாணவர்கள் பெறுவார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் அக்கறை செலுத்த வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
திருமணமான துலாம் ராசி தம்பதியர்கள் இந்த மாதம் ஒற்றுமையுடன் இருப்பார்கள். இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தாய் தந்தையாரிடம் நல்லுறவு நீடிக்கும். காதலர்களுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். காதலர்கள் இன்பச்சுற்றுலா சென்று வருவார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் நலனில் அக்கறை தேவை.
குடும்ப உறவு சிறக்க சந்திரன் பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் வசதி வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளும் வகையில் உங்கள் வருமானம் இருக்கும். எனவே இந்த மாதம் உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஊக வணிகத்தின் மூலம் நல்ல லாபங்களை ஈட்ட முடியும். ஆடம்பரமான செலவுகளை தவிர்ப்பது நல்லது. எதிர் கால நலன் கருதி உங்கள் செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிப்பை அதிகரித்துக் கொள்வது நன்மை பயக்கும்.
தன வருவாய் அதிகரிக்க சுக்கிரன் பூஜை
வேலை:
உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். நீங்கள் கடினமாகப் பணி புரிந்து பெயரும் புகழும் அடைவீர்கள். உங்கள் திறமை மூலம் உத்தியோகத்தில் சாதனைகளைப் புரிவீர்கள். வெளிநாட்டில் வேலை வாய்ப்பை தேடுபவர்களுக்கு உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மேலதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள்.
தொழில்:
இந்த மாதம் சுய தொழில் சிறப்பாக இருக்கும். எனவே இந்த மாதம் நீங்கள் தொழிலில் ஒரு படி முன்னேற்றம் காண்பீர்கள். நிதித் துறை, வங்கி மற்றும் பணம் சார்ந்த தொழில் செய்பவர்கள் இந்த மாதம் அதிக லாபத்தை காண்பார்கள். இந்த மாதம் நீங்கள் தொழிலை விரிவுபடுத்த எண்ணுவீர்கள். அதற்கான முதலீடுகளை மேற்கொள்வீர்கள். தொழிலில் போட்டிகளை நீங்கள் சந்திக்க நேர்ந்தாலும் நீங்கள் சமாளித்து முன்னேறுவீர்கள்.
தொழில் வல்லுனர்கள்:
துலாம் ராசி தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் தொழிலில் சில அதிர்ஷ்டகரமான சூழ்நிலை உருவாகும். தொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கும். இந்த மாதம் தொழில் நிமித்தமான ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொள்வீர்கள். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவீர்கள். நீங்கள் புதிய தொழில் யுக்திகளை கற்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
உத்தியோகம் மற்றும் தொழில் சிறக்க சூரியன் பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றாலும். சிறு சிறு உடல் உபாதைகள் வந்து போகும். சிறிய அளவிலான உடல் உபாதைகள் என்றாலும் சிறிதும். அலட்சியம் காட்டாமல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது சிறப்பு. முறையான உடற்பயிற்சியும் சத்தான உணவும் உங்கள் ஆரோக்கியத்தைக் மேம்படுத்தும்.
ஆரோக்கியம் மேம்பட சிவன் பூஜை
மாணவர்கள்:
பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். சிறப்பாக தேர்வுகளை எழுதி நல்ல மதிப்பெண்களுடன் கல்வியில் தேர்ச்சி பெறுவார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்த, மனதை ஒருமுகப் படுத்த அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூடும். படித்துக்கொண்டே வேலை தேடும் மாணவர்களுக்கு எளிதாக வேலை கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை
சுப நாட்கள்:
5, 7, 8, 9, 23, 24, 27, 28, 29, 30.
அசுப நாட்கள்:
1, 2, 3, 4, 11, 12.
