தனுசு மார்ச் மாத ராசி பலன் 2022 | March Month Rasi Palan 2022 Dhanusu

தனுசு மார்ச் மாத ராசி பலன் 2022 பொதுப்பலன்கள்:
தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்பத்தில் குதூகலம் இருக்கும். மணமான தம்பதிகள் கருத்தொருமித்து வாழ்வீர்கள். காதலர்களுக்கு இது இனிய மாதமாக இருக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு ஏற்ற துணை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் முன்னேற்றம் காண்பீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும் சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சில தடைகள் இருந்தாலும் இந்த மாத கடைசி பகுதியில் படிப்பில் ஏற்றம் காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் சிறு சிறு உடல் உபாதைகள் வந்து சரியாகும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
குடும்பத்தில் குதூகலம் இருக்கும். மனதில் மகிழ்ச்சியான உணர்வு இருக்கும். உறவுகளுக்கும், அவர்களின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து நீங்கள் நடந்து கொள்வீர்கள். வீட்டில் இருக்கும் வயதானவர்களின் ஆலோசனை உங்களை வழிநடத்தும். இது உங்கள் உறவை வலுப்படுத்தும். தம்பதிகள் கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையாக வாழ்வீர்கள். காதலர்களுக்கு இடையே அன்னியோன்யம் கூடும்.
காதலர்களுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க சுக்கிரன் பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் நீங்கள் அதிக வருமானம் ஈட்டுவீர்கள். இதனால் உங்கள் நிதிநிலையில் ஏற்றம் இருக்கும். கல்வித்துறை மற்றும் பொறியியல் துறையில் இருப்பவர்கள் சிறந்த வகையில் வருமானம் ஈட்டுவார்கள். பங்கு வர்த்தகத்தில் முக்கியமான முடிவுகள் எதையும் இந்த மாதம் எடுக்காதீர்கள். ஏனெனில் அதில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டு பராமரிப்பு அல்லது மராமத்து பணிகளுக்காக நீங்கள் பணம் செலவு செய்ய நேரலாம்.
தன நிலையில் ஏற்றம் ஏற்பட லக்ஷ்மி பூஜை
வேலை:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் பணியிடத்தில் அனுகூலமான சூழ்நிலை இருக்கும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளை நீங்கள் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். அவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். பணியிடத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்குவார்கள். ஒரு சிலருக்கு புதிய உத்தியோக வாய்ப்புகள் கிட்டும். இந்த வாய்ப்பினை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்துவதன் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். நீங்கள் ஊடகங்களில் பணி புரிபவர் என்றால் இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதம் என்று கூறலாம்.
தொழில்:
சுய தொழில் செய்பவர்கள் இந்த மாதம் தங்கள் தொழில் சிறப்பாக நடக்கக் காண்பீர்கள். வாடிக்கையாளர்களின் குறிப்பறிந்து செயல்படுவீர்கள். இதனால் லாபம் அதிகரிக்கும். தொழிலையும் விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிட்டும். அதன் மூலம் கணிசமான வருமானம் காண்பீர்கள். குறிப்பாக பிரயாணம் மற்றும் உணவு சம்பந்தப்பட்ட தொழில் புரிபவர்கள் கணிசமான லாபம் பெறுவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் இந்த மாதம் சிறந்த பலன்களைப் பெறுவீர்கள்.
தொழில் வல்லுனர்கள்:
தனுசு ராசி தொழில் வல்லுனர்களுக்கு இது சிறந்த மாதம் என்று கூறலாம். நீங்கள் தனியார் துறையைச் சார்ந்தவர் என்றால் இந்த மாதம் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் கடமை மற்றும் பொறுப்புகளை நீங்கள் சரிவர மேற்கொள்வீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிட்டும். தொழில் செய்யும் இடத்தில் தேவையற்ற பேச்சுகள் மற்றும் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.
உத்தியோகம் மற்றும் தொழிலிலில் சிறந்து விளங்க சனி பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும். பெரிய அளவிலான ஆரோக்கிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. நோய் பாதிப்புகள் வந்தாலும் எளிதில் குணமாகும். உங்கள் உணவில் கவனம் தேவை. தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள இயலும் .
அரோக்கியம் மேம்பட சிவன் பூஜை
மாணவர்கள்:
மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள் என்றாலும் கவனம் அவசியம் தேவை. மனதை ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் கவனச்சிதறல்கள் ஏற்படலாம். பட்டப்படிப்பு படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு படிப்பு முடித்தவுடன் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை
சுப நாட்கள்:
4, 5, 7, 8, 9, 16, 20, 21, 22, 23, 24, 27.
அசுப நாட்கள்:
6, 10, 11, 12, 13, 14, 15, 25, 26, 31.
