கன்னி மார்ச் மாத ராசி பலன் 2022 | March Month Rasi Palan 2022 Kanni

கன்னி மார்ச் மாத ராசி பலன் 2022 பொதுப்பலன்கள்:
இந்த மாதம் உங்களுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு நல்லிணக்க உறவாக இருக்க இயலாது. என்றாலும் குழந்தைகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும். உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை நீங்கள் இந்த மாதம் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் தொழிலும் சிறப்பாக நடக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கு இது ஏற்ற மாதம் ஆகும். உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றாலும் கவனம் தேவை. பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்கள் பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
கன்னி ராசி இளம் வயது அன்பர்கள் மனதில் காதல் அரும்பு மலரும். காதல் உறவில் உள்ளவர்களுக்கு நெருக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவில் சுமுகமான நல்லிணக்க உறவு மேற்கொள்ள ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். வயது மூத்தவர்கள் மற்றும் குழந்தைகள் உடனான உறவு நிலை பலப்படும். தாயார் உடல் நலனில் அக்கறை தேவை. திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தங்கள் எண்ணங்கள் நிறைவேற இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.
குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிக்க செவ்வாய் பூஜை
நிதி நிலை:
உங்கள் பொருளாதார நிலை இந்த மாதம் ஏற்ற நிலை காணும். நீங்கள் பொருளாதார பாதுகாப்பை உணர்வீர்கள். நீங்கள் ஈட்டும் பணம் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள போதிய அளவில் இருக்கும். உபரிப் பணம் கொண்டு நிலுவையில் இருக்கும் கடன்களைக கூட அடைத்து முடிப்பீர்கள். எனவே நீங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இது ஏற்ற மாதமாகும். வாகன பராமரிப்பு சம்மந்தப்பட்ட செலவுகள் ஏற்படும். ஆடைகள் தயாரிக்கும் தொழிலில் நல்ல தன வருவாய் கிடைக்கும். தங்க நகை தொழில் செய்பவர்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் கிடைப்பதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
நிதி நிலையில் உயர்வு பெற ராகு பூஜை
வேலை:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும். பணியிடத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும். உங்கள் திறமைக்கான அங்கீகாரமும் பாராட்டும் பெறுவீர்கள். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான பணியிடச் சூழலும் சக பணியாளர்களின் ஆதரவும் கிட்டும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரிகளின் அங்கீகாரம் மற்றும் பாராட்டைப் பெறுவார்கள். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு பெறுவீர்கள். தங்களின் எதிர் கால திட்டம் குறித்து உங்கள் மேலதிகாரிகளுடன் கலந்து ஆலோசிப்பீர்கள். தங்களின் உத்தியோகம் நிமித்தமாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.
தொழில்:
கன்னி ராசி அன்பர்களின் சுய தொழில் இந்த மாதம் சிறப்பாக நடக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டில் தொழில் செய்யும் வாய்ப்பிற்குக் காத்திருப்பவர்கள் தாங்கள் எதிர்பார்க்கும் வாய்ப்பினை இந்த மாதம் பெறுவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் இந்த மாதம் அதிக லாபங்களை எதிற்பார்க்கலாம்.
தொழில் வல்லுனர்கள்:
கன்னி ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தங்கள் வாடிக்கையாளர்களிடம் பேசும் போது கவனமாகச் செயல்பட வேண்டும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். தேவையற்ற பேச்சுகள் மற்றும் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். சுய தொழில் செய்யும் தொழில் வல்லுனர்கள் தங்களுடைய தொழிலில் பெயரும் புகழும் பெறுவார்கள்.
உத்தியோகம் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு கணேசா பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும். எனவே உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.. நோய் வந்தாலும் எளிதில் குணமாகும். தியானம் மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை
மாணவர்கள்:
பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி படிக்க வேண்டும். கவனம் சிதறாமல் காத்துக் கொள்ள வேண்டும். அதிக முயற்சியுடனும் ஈடுபாட்டுடனும் படிப்பதன் மூலம் உங்கள் ஞாபகத் திறன் கூடும். கணிதத் துறை சார்ந்த மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று கல்வியில் வெற்றி காண்பார்கள். இந்த மாதம் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறந்த மாதமாக இருக்கும். அவர்களுக்கு கல்வியில் வெற்றி கிடைக்கும்.
சுப நாட்கள்:
4, 5, 9, 13, 14, 15, 16, 18, 20, 21, 22.
அசுப நாட்கள்:
1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 17.
