ரிஷபம் மார்ச் மாத ராசி பலன் 2022 | March Month Rasi Palan 2022 Rishabam

ரிஷபம் மார்ச் மாத ராசி பலன் 2022 பொதுப்பலன்கள்:
ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நல்ல சுமுகமான உறவு நிலை காணப்படும். இளம் வயது ரிஷப ராசி காதலர்கள் தங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் நிலைமை சீராக இருக்கும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை நீங்கள் கடினமான உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் உழைப்பிற்கேற்ற பலனைக் காண கால தாமதமாகலாம். சொந்தத் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் தொழில் சம்மந்தப்பட்ட முக்கியமான ஆலோசனைக் கூட்டங்களை தவிர்ப்பது நல்லது. கடந்த காலங்களில் இருந்த நோய் மீண்டும் தலை தூக்க வாய்ப்புள்ளது. எனவே மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது. மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
இளம் வயது ரிஷப ராசி அன்பர்கள் தங்கள் காதல் நிலைத்து இருக்க தங்கள் துணையை அனுசரித்தும் விட்டுக் கொடுத்தும் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். நல்ல புரிந்துணர்வு காரணமாக இருவரும் கருத்தொருமித்து வாழ்வார்கள். இருவருக்கும் இடையே அந்நியோன்யமும் நெருக்கமும் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள வயதில் மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்சிகள் நடைபெறும். விருந்து விசேஷங்கள் நடைபெறும்.
குடும்ப உறவுகள் மேம்பட குரு பூஜை
நிதி நிலை:
சொந்தத் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழில் சிறப்பாக நடைபெறக் காண்பார்கள். தொழில் மூலம் கணிசமான வருமானம் பெருகும். அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் மற்றும் நிதித்துறை, உணவுத்துறை சார்ந்த தொழில் புறிபவர்கள் சிறந்த வகையில் லாபம் ஈட்டுவார்கள். பங்கு வர்த்தகம் மூலம் இந்த மாதம் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். இந்த மாதம் புதிய தொழில் முதலீடுகளை தவிர்பது நன்மை பயக்கும்.
நிதிநிலையில் ஏற்றம் உண்டாக ஸ்ரீம் ப்ரிசீ லக்ஷ்மி பூஜை
வேலை:
உத்தியோகத்தைப் பொறுத்தவரை நீங்கள் கடினமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் அரசுத் துறையில் பணி புரிபவர் என்றால் உங்கள் கடின உழைப்பிற்கேற்ற முன்னேற்றம் காண இயலும். தனியார் துறையில் பணி புரியும் ரிஷப ராசி அன்பர்கள் இந்த மாதம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். அதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் அங்கீகாரம் கிடைக்கும்.
தொழில்:
ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் தொழில் சிறப்பாக நடக்கும். தொழில் சார்ந்த பயணங்கள் மூலம் லாபங்கள் கிட்டும். கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். குறிப்பாக பிரயாணம் மற்றும் உணவு சம்பந்தப்பட்ட தொழில் இந்த மாதம் சிறந்த லாபத்தைப் பெற்றுத் தரும் மாதமாக இருக்கும். மென்பொருள் தொழிலில் உள்ளவர்கள் நல்ல ஏற்றத்தை காண்பார்கள்.
தொழில் வல்லுனர்கள்:
தொழில் வல்லுனர்களுக்கு இது வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். நீங்கள் சிறப்பாக செயலாற்றி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் பணிகளை குறித்த நேரத்திற்குள் முடித்து அளிப்பீர்கள். உங்கள் பெயரும் புகழும் ஓங்கும். நீதித்துறையில் பணி புரிபவர்கள் இந்த மாதம் கணிசமான வருமானம் காண்பார்கள்.. நிர்வாகத்துறையில் இருப்பவர்களுக்கு பல புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். சுயதொழில் செய்யும் தொழில் வல்லுனர்கள் தொழில் போட்டிகளை எளிதாக சமாளித்து தொழிலில் வெற்றி காண்பார்கள். வெளிநாட்டு உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பீர்கள்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் உண்டாக ராகு பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வந்து போகும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சிறிய அளவிலான பாதிப்புகள் என்றாலும் உடனடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம். முறையான உடற்பயிற்சியும் சத்தான உணவும் உங்கள் ஆரோக்கியத்தைக் மேம்படுத்தும். துரித உணவு வகைகளைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.
உடல் ஆரோக்கியம் மேன்மை அடைய செவ்வாய் பூஜை
மாணவர்கள்:
ரிஷப ராசி மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். தேர்வுகளையும் சிறந்த முறையில் எழுதி வெற்றி பெறுவார்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆதரவு காரணமாக நீங்கள் மேலும் சிறப்பாகக் கல்வி பயில்வீர்கள். வெற்றி காண்பார்கள். படித்து முடித்து வேலை தேடும் மாணவர்கள் சிறந்த சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கப் பெறுவார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் கவனச்சிதறல்கள் ஏற்படலாம்.
கல்வியில் வெற்றி கிடைக்க கேது பூஜை
சுப நாட்கள்:
4, 5, 8, 9, 13, 14, 15, 16, 20, 26, 27, 28, 29, 30.
அசுப நாட்கள்:
1, 2, 3, 6, 7, 10, 11, 12, 17, 18, 19, 21, 22, 23, 24, 25, 31.
