மேஷம் மார்ச் மாத ராசி பலன் 2022 | March Month Rasi Palan 2022 Mesham

மேஷம் மார்ச் மாத ராசி பலன் பொதுப்பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் மற்றும் விருந்து விசேஷங்கள் நடைபெறும். உங்கள் மனதில் ஆன்மீக நாட்டம் பெருகும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கான பலனைப் பெற நீங்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். உங்கள் பொருளாதார நிலை ஸ்திரமாக இருக்க வாய்ப்பில்லை. சிறிது ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். இந்த மாதம் நீங்கள் நிலம் அல்லது சொத்து, வண்டி வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கடன் வேண்டி விண்ணப்பித்திருந்தால் அது கிடைக்கும். மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அனைத்து ராசிகளுக்கான ராசி பலன் எங்கள் வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது
உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்
காதல் / குடும்பம்:
குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்வார்கள். குடும்ப உறுப்பினர்கள் மனதில் உங்கள் மீதான மரியாதை கூடும். இந்த காதம் காதல் முயற்சிகள் கை கூடுவதில் சிரமம் இருக்கும். நண்பர்களிடம் பண விஷயம் சம்பந்தமான கருத்து வேறுபாடு ஏற்படும். நட்புறவில் நல்லிணக்கம் காண நீங்கள் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க சுக்கிரன் பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் உங்கள் நிதிநிலையில் ஸ்திரத்தன்மை இருக்க வாய்ப்பில்லை. ஏற்ற இறக்க நிலை காணப்படும். உங்கள் வருமானம் தேவைகளை நிறைவேற்ற போதிய அளவில் இருக்க வாய்ப்பில்லை. சில சமயம் நீங்கள் கடன் வாங்கவும் நேரலாம். வீடு மற்றும் வாகனம் சம்மந்தப்பட்ட பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தங்களின் செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் ஆன்மீக விஷயங்களுக்காகவும் பணத்தை செலவு செய்வீர்கள்.
கடன் பிரச்சனையிலிருந்து விடுபட ருண விமோச்சன பூஜை
வேலை:
உத்தியோகத்தைப் பொறுத்த வரை பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்க வாய்ப்பில்லை. வளர்ச்சியும் மந்தமாக இருக்கும். நீங்கள் அரசுத் துறையில் பணி புரிபவர் என்றால் கடின உழைப்பு தேவைப்படும். என்றாலும் அதற்கு உரிய அங்கீகாரம் கிட்டுவது கடினம். சக பணியாளர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். தேவையற்ற பேச்சுக்கள் மற்றும் வீண் வக்குவாத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். வெளிநாட்டில் பணியில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களிடம் சுமூகமான உறவு ஏற்படும்.
தொழில்:
நீங்கள் சுய தொழில் செய்பவர் என்றால் அதிக போட்டியாளர்களை சந்திக்க நேரும். தொழில் விரிவாக்கம் அல்லது புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ளாதீர்கள். தொழில் ஒப்பந்தம் சார்ந்த ஆவணங்களில் கையொப்பமிடுமுன் கவனம் தேவை. கூட்டு தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவார்கள். வெளிநாட்டில் தொழில் வாய்ப்பு நாடி முயற்சி மேற்கொள்பவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் உங்களை நாடி வரும். அதன் மூலம் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். பாரம்பரிய தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு ஏற்ற மாதம் ஆகும். ஏற்றுமதித் தொழிலில் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம்.
தொழில் வல்லுனர்கள்:
புதிய தொழில் தொடங்குவதற்கான முதலீடுகளை இப்பொழுது நீங்கள் மேற்கொள்ளலாம். உங்கள் திறமை மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உங்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தங்களின் எதிர் கால திட்டம் குறித்து உங்கள் மேலதிகாரிகளுடன் கலந்து ஆலோசிப்பீர்கள். தங்களின் உத்தியோகம் நிமித்தமாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.
உத்தியோகம் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு கணேசா பூஜை
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றாலும் சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு நீங்கள் உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்வது நன்மை பயக்கும். ஒரு சிலருக்கு மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தமான உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதால் உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
நல்ல உடல் ஆரோக்கியம் பெற சனி பூஜை
மாணவர்கள்:
மேஷ ராசி மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். மாணவர்களின் கவனத் திறன் கூடும். மற்றும் கிரகிக்கும் திறன் கூடும். உயர் கல்விக்கு வெளிநாட்டில் முயற்சி மேற்கொள்பவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் மந்தமாக இருக்கும்.
கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை
சுப நாட்கள்:
4, 5, 7, 8, 9, 13, 14, 15, 16, 20, 21, 27, 28, 29, 30.
அசுப நாட்கள்:
1, 2, 3, 6, 10, 11, 12, 17, 18, 19, 22, 23, 24, 25, 26, 31.
